ரஜினியை பைத்தியம்னு சொன்ன அந்த பிரபல இயக்குநர்.. என்ன பண்ணாரு தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரஜினியின் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் இரண்டு படங்களின் இயக்குநர்களும் தற்போதைய தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குநர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் ரஜினிகாந்த்தை ஒரு இயக்குநர் பைத்தியம் என்று சொன்ன விஷயம் தெரியவந்திருக்கிறது.

ரஜினிகாந்த்துக்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை. அவரை தெரியாதவர்களே இந்தியாவில் இருக்க முடியாது. இந்தியா மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அவர் ஃபேமஸாக இருக்கிறார். நடத்துநராக தனது பணி வாழ்க்கையை தொடங்கி கலை மீது இருந்த ஆர்வத்தால் சென்னை சினிமா கல்லூரியில் சேர்ந்து முறையாக பயின்று சினிமாவுக்குள் வந்தவர். கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி ஆரம்பகாலத்தில் ஏகபப்ட்ட கஷ்டங்களை சந்தித்திருக்கிறார்.

Throwback incident where director Sridhar called Rajinikanth crazy has been revealed

டாப் ஹீரோ: கமல் ஹாசனுடன் இணைந்து சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர்; கமலின் ஐடியா பேரில் தனியாக நடிக்க ஆரம்பித்தார். தனியாக நடிக்க ஆரம்பித்தவுடன் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அவர் அதில் தன்னால் முடிந்த அளவு உழைப்பை கொட்டி, வித்தியாசத்தை காண்பித்து, ஸ்டைலை மெருகேற்றி அதில் ராஜபாட்டை நடத்தினார். அவருக்கென்று ரசிகர்கல் சரசரவென்று உயர ஆரம்பித்தார்கள். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டமும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

ஏகப்பட்ட ஹிட்டுகள்: ஒருகட்டத்தில் கமல் ஹாசனைவிடவும் ரஜினிகாந்த்துக்கு மவுசு ஏற ஆரம்பித்தது. ஒரு நாளிலேயே ஏகப்பட்ட ஷூட்டிங்குகளில் கலந்துகொண்டு பம்பரமாய் சுழன்று நடித்தார். அதனால் அவரது பெயரும், புகழும் நாளுக்கு நாள் உயர்ந்தது. அதன் பலனாக ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையையும் பெற்றார். சூப்பர் ஸ்டார் என்ற இடத்திலிருந்து ரசிகர்களிடம் தலைவர் என்ற இடத்துக்கும் நகர்ந்தார் ரஜினிகாந்த். ஆனால் கடந்த சில வருடங்களாக அவரது கரியர் கொஞ்சம் ஆட்டம் கண்டது என்பது உண்மைதான்.

ஜெயிலர் டூ ஜெயிலர் 2: அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியை சந்திக்க; ரஜினியின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று அனைவரும் பேசினார்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உலகளவில் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. அடுத்ததாக அவர் நடித்த வேட்டையன் திரைப்படம் ஜெயிலர் அளவுக்கு வசூல் செய்யவில்லை. இருந்தாலும் ரஜினியின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது.

Throwback incident where director Sridhar called Rajinikanth crazy has been revealed

இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இரண்டு படங்கள் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த்தை இயக்குநர் ஸ்ரீதர் பைத்தியம் என்று சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

Take a Poll

பார்த்திபன் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "ரஜினிகாந்த்தும், ஸ்ரீதரும் இணைந்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் பணியாற்றினார்கள். அப்போது ரஜினி செய்ததை பார்த்து ஸ்ரீதர், என்ன பைத்தியக்கரத்தனமா செஞ்சிட்டு இருக்கார் என்று கூறினார். மூன்று படிக்கட்டுகளில் மேலே ஏறிவிட்டு திருப்பி கீழே இறங்கி வருவார். அதை பார்த்துவிட்டு இயக்குநரோ, 'ஒன்னு மேல் படிக்கட்டுல நின்னு ஃபோன் பேச சொல்லு இல்ல கீழ் படிக்கட்டுல நின்று பேச சொல்லு. ஏன் இப்படி ஏறி இறங்குறார்' என்று அவரது உதவி இயக்குநர்களிடம் கேட்பார். அதையெல்லாம் பார்த்துதான் ரஜினி செய்வது பைத்தியம்போல் இருக்கிறது என்று ஸ்ரீதர் கூறினார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X