சங்கீதா பற்றி கேட்ட நபர்.. தனியாக கூப்பிட்டு மிரட்டிய விஜய்.. தயாரிப்பாளர் சொன்ன டாப் சீக்ரெட்

சென்னை: விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று எப்படியாவது கோட்டைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் அவரின் தற்போதைய கணக்கு. ஆனால் அது நடக்குமா இல்லை நடக்காதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இப்படிப்பட்ட சூழலில் அவர் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே ஷாக்கை கொடுத்திருக்கிறது.

விஜய் இப்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கும் விஜய் முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். இப்போதே அவர் அப்படித்தான் இருக்கிறார். முக்கியமாக தான் ஏறும் மேடைகளில் எல்லாம் தமிழ்நாட்டை ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இதனால் அவருக்கு திமுகவினரும் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

Throwback Stories Vijay Sangeetha SA Chandrasekhar Vijay Wife Jana Nayagan

சங்கீதாவுடன் பிரச்னை?: சூழல் இப்படி இருக்க விஜய்க்கும் திரிஷாவுக்கும் மீண்டும் நெருக்கம் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாகத்தான் அவருக்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் பிரச்னை வந்துவிட்டது. சங்கீதா இப்போது இந்தியாவிலேயே இல்லை லண்டனில் இருக்கிறார்; முக்கியமாக தனது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு விஜய் ஒரு வாழ்த்துக்கூட சொல்லாததற்கு இந்தப் பிரச்னைதான் முக்கிய காரணம் என்றெல்லாம் பலரும் பலவிதமாக பேசிவருகிறார்கள்.

அவதூறு: ஆனால் அதனை விஜய்யின் ஆதரவாளர்கள் திட்டவட்டமாக மறுத்துவருகிறார்கள். விஜய்க்கும் சங்கீதாவுக்கும் எந்தவிதமான பிரச்னையும் இல்லை; வேண்டுமென்றே விஜய்யை பெண் பித்தன் போல் ப்ரொஜக்ட் செய்கிறார்கள் என்று கூறிவருகிறார்கள். மேலும் அவரது மனைவி எங்கும் போகவில்லை சென்னையில்தான் இருக்கிறார் என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இந்நிலையில் விஜய் குறித்தும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் குறித்தும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

பாலாஜி பிரபு பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "விஜய் வளர்ந்துவந்த சமயத்தில்; அவர் சங்கீதா என்கிற பெண்ணை காதலித்துவருகிறார். திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வர தொடங்கிவிட்டன. அதனைத் தொடர்ந்து திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பத்திரிகையாளர்களை தனது வீட்டுக்கு அழைத்திருந்தார். பல பத்திரிகையாளர்கள் அங்கு சென்றிருந்தார்கள்.

உண்மை என்ன?: அப்போது எஸ்.ஏ.சி, 'சங்கீதா என்ற பெண் லண்டனை சேர்ந்தவர். அவரை விஜய்க்கு பெற்றோர்கள்தான் நிச்சயம் செய்திருக்கிறோம். இது நாங்கள் பார்த்த பெண்' என்று கூறினார். அந்த சமயத்தில்தான் விஜய்யும் வீட்டுக்குள் நுழைந்தார். விஜய்யை பார்த்ததும் ஒரு பத்திரிகையாளர், 'இதோ விஜய்யே வந்துவிட்டாரே. உண்மை என்னவென்று இப்போது தெரிந்துவிடும்' என்று கூறிவிட்டார். உடனே சந்திரசேகர் உச்சக்கட்ட கோபத்துக்கு சென்றுவிட்டார்.

மிரட்டிய விஜய்: அந்த கோபத்தோடு பத்திரிகையாளரை பார்த்து கோபமாக பேசி மிக மோசமாக நடந்துகொண்டார். உடனடியாக அந்தப் பத்திரிகையாளரை தனியாக அழைத்து சென்ற விஜய் அவரை பார்த்து தனது விரலை நீட்டி ஜாக்கிரதை என்று மிரட்டினார். இந்த விஷயம் மட்டுமின்றி நெப்போலியன் ஒரு முறை நண்பர்களோடு விஜய்யை காண அவரது கேரவனுக்கு செல்ல முயன்றபோது அவரைப் பார்த்து விஜய் எப்படி கத்தினார் என்பது அனைவருக்குமே தெரியும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X