ரஜினிகாந்த்தின் வசீகரிக்கும் குரல்.. ரகசியம் என்ன தெரியுமா?.. அவரே பகிர்ந்த சீக்ரெட்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கும் அவர்; அநேகமாக மணிரத்னத்தின் இயக்கத்திலும் கமிட்டாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையன் படம் சுமாரான வரவேற்பை பெற்றதன் காரணமாக கூலி படத்தை மெகா ஹிட்டாக கொடுத்துவிட வேண்டுமென்கிற முனைப்பில் ரஜினி கடுமையாக உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு முக்கியமாக தேவைப்பட்டது. ஏனெனில் அதற்கு முன்னர் அவர் நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு ஆப்பு வந்துவிட்டதாக பலரும் கூறினார்கள். ஆனால் அவர்களது பேச்சினை ஜெயிலர் படத்தின் வெற்றி ஒன்றும் இல்லாமல் ஆக்கியது. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.

யானை இல்லை குதிரை: முக்கியமாக சந்திரமுகி படத்துக்கு முன்னதாக ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தபோதும் இதேபோல்தான் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் சில வருடங்கள் கழித்து நடித்த சந்திரமுகி 800 நாட்களுக்கும் மேல் ஓடியது. அப்போது பேசிய ரஜினிகாந்த், 'நான் யானை இல்லை குதிரை.. விழுந்தா பட்டுனு எழுந்துடுவேன்' என்று பஞ்ச் பேசி அசரடித்தார். அதேபோல்தான் ஜெயிலர் வெற்றிக்கு அடுத்தும் அவர் குதிரை என்பதை நிரூபித்துவிட்டதாக ரஜினியின் ரசிகர்கள் பஞ்ச் பேசினார்கள்.

Throwback interview where Rajinikanth talks about the secret of his voice

என்ன காரணம்?: தோல்வியிலிருந்து உடனடியாக தன்னை எழ வைக்கும் திறமை ரஜினிகாந்த்துக்கு இயல்பிலேயே இருக்கிறது. ஏனெனில் சூப்பர் ஸ்டார் என்கிற பெரிய இடத்தில் இருந்தாலும்; இப்போது நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் தன்னுடைய முதல் படம் போலவே நினைத்துக்கொண்டிருப்பவர் அவர். அதேபோல் படத்தின் இயக்குநர் தன்னைவிட ஜூனியராக இருந்தாலும் இயக்குநருக்குரிய மரியாதையை கொடுத்துக்கொண்டே இருப்பார். அதனை நெல்சன் திலீப்குமாரும் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு காரணம்: அது ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது ரஜினிக்கு இப்போது 74 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் தனது ஃபிட்னெஸ் மீதும், தனது ட்ரெட் மார்க் ஸ்டைல் மீதும் அதீத கவனம் வைத்திருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் விதவிதமான ஸ்டைல்களை இப்போதும் புகுத்திக்கொண்டே இருக்கிறார். அதேபோல் தன்னுடைய டயலாக் டெலிவிரி ஸ்டைலையும் ஒரே மாதிரி ஃபாலோ செய்யாமல் சூழலுக்கு தகுந்தவாறு மாற்றுபவர் அவர் என்பது கவனிக்கத்தக்கது.

Throwback interview where Rajinikanth talks about the secret of his voice

குரலின் ரகசியம்: அவரது டயலாக் டெலிவிரி பட்டாசாக இருப்பதற்கு காரணம் அவரது குரல். சிவாஜி, கமல் ஹாசனின் குரல்களுக்கு எப்படி ஒரு வசீகரம் இருக்கிறதோ அதேபோல்தான் ரஜினியின் குரலுக்கும். இந்நிலையில் தன்னுடைய குரலை எப்படி பராமரிக்கிறேன் என்று ரஜினி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பரவிவருகிறது. அவர் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில், "காலையில் நான் எழுந்தவுடனேயே சீரகம் போட்ட வெதுவெதுப்பான நீரில் வாயில் ஊற்றி சிறிது கொப்பளிப்பேன்.

பிறகு நான் பேஸ் வாய்ஸில் பேசி பயிற்சி செய்கிறேன். தினமுக் சில நிமிடங்கள் இப்படி செய்வேன். இப்படி செய்தால் அழகான, வசீகரிக்கக்கூடிய குரல் வரும். இதுதான் எனது குரலின் ரகசியம். யாராக இருந்தாலும் இப்படி செய்யலாம்" என்றார். இதனை பார்த்த ரசிகர்கள், 'ரஜினிகாந்த் இப்படி தொடர்ந்து தன்னை பயிற்சிக்குள் வைத்துக்கொண்டிருப்பதால்தான் அவரை ரசிகர்கள் தங்கள் இதயங்களில் சிம்மாசனம் போட்டு வைத்திருக்கிறார்கள்' என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X