சூர்யாவுக்கு சூப்பரான ஜோடி அவர் தான்.. என்ன ஜோதிகாவே இப்படி சொல்லிட்டாரு.. த்ரோபேக் பேட்டி!

சென்னை: சூர்யாவுக்கு ஏற்ற சரியான ஜோடி அந்த நடிகை தான் என டிடி நீலகண்டனின் த்ரோபேக் பேட்டி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசியது சமூகவலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

சூர்யாவுடன் சமீபத்தில் குழந்தைகளின் படிப்புக்காக மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டார் ஜோதிகா என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Throwback: Jyotika talks about Suriyas best onscreen presence

தமிழ், மலையாளம், இந்தி படங்களில் நடித்து வரும் ஜோதிகா இன்ஸ்டாகிராமில் கணக்குத் தொடங்கி ஒர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

ஜோதிகா இப்பவும் செம பிஸி: நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்ட ஜோதிகா அதன் பின்னர் சினிமாவுக்கு சின்ன பிரேக் கொடுத்திருந்தார். 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா, உமன் சென்ட்ரிக் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மலையாளத்தில் மம்மூட்டியுடன் காதல் படத்தில் நடித்துள்ள ஜோதிகா பாலிவுட்டில் ஸ்ரீ படத்திலும் நடித்துள்ளார். இப்பவும் சினிமாவில் படு பிசியாக நடித்து வரும் ஜோதிகா சமீபத்தில் குடும்பத்துடன் தாய் வீடான மும்பைக்கு சென்று செட்டில் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

த்ரோபேக் பேட்டி: டிடி நீலகண்டன் உடன் பல ஆண்டுகளுக்கு முன்னதாக மீண்டும் திரைக்கு வந்த நிலையில், நடிகை ஜோதிகா அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மீண்டும் ஷேர் செய்ய டிரெண்டாகி வருகிறது.

அந்த பேட்டியில், சூர்யா பற்றியும் தான் நடித்த படங்கள் பற்றியும் ஏகப்பட்ட தகவல்களை நடிகை ஜோதிகா ஷேர் செய்துள்ளார்.

நயன்தாரா பற்றி: நடிகை நயன்தாரா பற்றி கேட்ட கேள்விக்கு ரொம்ப அழகா டிரெஸ் பண்ற நடிகை. சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் என அந்த பேட்டியில் ஜோதிகா கூறியுள்ளார்.

Throwback: Jyotika talks about Suriyas best onscreen presence

சூர்யாவுக்கு சூப்பரான ஜோடி இவர் தான்: சூர்யாவுக்கு ஆன்ஸ்க்ரீன் பேர்னா யாரு சூப்பராக இருப்பாங்கன்னு நினைக்கிறீங்க என டிடி நீலகண்டன் கேட்க உடனடியாக லைலா தான். சூர்யாவுக்கு சூப்பரான ஜோடி என கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் பேரைக் கூட சொல்லாமல் ஜோதிகா சொல்லி உள்ளார். மெளனம் பேசியதே, உன்னை நினைத்து, நந்தா, பிதாமகன் என பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

கஜினி பாதி தான் பிடிக்கும்: மேலும், அந்த படத்தில் சூர்யா நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படங்கள் என்ன என்ன என கேட்டதற்கு பிதாமகன் தான் ரொம்ப பிடிக்கும் என சொன்ன ஜோதிகா, அதன் பின்னர், நந்தா, காக்க காக்க, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களை லிஸ்ட் போட்டார். ஆனால், கஜினி படத்தை அவர் சொல்லவே இல்லை.

கஜினி பிடிக்காத என டிடி கேட்க, கஜினி ஃபர்ஸ்ட் ஹாஃப் தான் பிடிக்கும், செகண்ட் ஹாஃப் பிடிக்காது என சொல்லி விட்டார் ஜோதிகா.

சூர்யா 42 டைட்டில்: நடிகர் சூர்யாவின் 42வது படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யா 42 படத்தின் டைட்டில் கசிந்து விட்டதாகவும் சில டைட்டில்கள் வலம் வருகின்றன. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள சூர்யா 42 படம் எப்படி இருக்கும் ஜோதிகாவின் அடுத்த படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X