வல்லவன் கதையையே நயன்தாராவுக்காக மாத்துனாரா சிம்பு?.. காதல் சந்தியா இப்படி போட்டு உடைச்சிருக்காங்களே!

சென்னை: நடிகர் சிம்புவின் 42வது பிறந்தநாள் பிப்ரவரி 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தரின் மகன் தான் சிம்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்பாவை போலவே இயக்கம், நடிப்பு, இசை, பாடல்களை பாடுவது என அனைத்திலும் இவரும் சகலகலா வல்லவன் தான். தமிழ் சினிமாவில் சிம்பு போல வித்தியாசமான ஸ்டெப்ஸ் போட்டு நடனமாட மற்ற நடிகர்களால் முடியாது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு யம்மாடி ஆத்தாடி, நலம்தானா என ஒரு காலத்தில் வல்லவனாக இருந்தவர் சிம்பு. மீண்டும் அவரை அப்படி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பார்க்கலாம் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 3 படங்களின் ஹாட் அப்டேட்கள் வெளியாகப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. டிராகன் படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம், பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உடன் ஒரு படம் மற்றும் ரொம்ப வருஷமாகவே சிம்புவின் பிரம்மாண்ட படத்தை இயக்க காத்திருக்கும் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தின் அப்டேட் என 3 சம்பவங்கள் நாளை வர காத்திருக்கின்றன.

simbu simbu birthday throwback

நடிகை நயன்தாராவும் தனது டெஸ்ட் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை நாளை வெளியிட உள்ளார். இந்நிலையில், வல்லவன் படத்தின் கதையே மாறிய கதையை 6 ஆண்டுகளுக்கு முன்னர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காதல் சந்தியா கூறியிருந்தார். தற்போது அதனை சிம்பு ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

simbu simbu birthday throwback

நயன்தாரா, ஹன்சிகா: காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை சார்மியையே சிம்பு காதலிப்பதாக ரூமர்கள் கிளம்பின. அதன் பின்னர் அலை மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா படங்களில் நடிக்கும் போது த்ரிஷா குறித்த கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால், நடிகர் சிம்பு நடிகைகள் நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை காதலித்தது பின்னர் பிரேக்கப் செய்தது எல்லாம் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். அந்த இரண்டு முன்னணி நடிகைகளூம் திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். ஆனால், சிம்பு இப்போதும் டிராகன் படத்தில் "ஏண்டி விட்டுப்போன" என சோகப் பாட்டு பாடிக் கொண்டு முரட்டு சிங்கிளாகவே உள்ளார். ஈஸ்வரன் படம் வெளியானதில் இருந்தே சிம்புவுக்கு பெண் பார்ப்பதாக டி. ராஜேந்தர் சொல்லி வருகிறாரே தவிர இதுவரை சிம்பு யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றும் அவர் திருமணம் செய்வாரா மாட்டாரா என்பது குறித்தும் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

simbu simbu birthday throwback

வல்லவன் கதையே வேற: காதல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்த சந்தியா சிம்புவின் வல்லவன் படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருப்பார். ஆரம்பத்தில் சிம்பு தன்னிடம் சொன்ன கதை என்னவென்றால், சிம்புவுக்கு ரீமா சென் என்கிற ஒரு கேர்ள் ஃபிரெண்ட் இருப்பார். நான் நெருங்கிய நட்பு கொண்டவள். ஆனால், அது பிடிக்காமல் பொசஸ்சிவ்னஸ் காரணமாகத்தான் கிளைமேக்ஸில் என்னை கடத்தும் காட்சிகள் எல்லாம் இடம்பெற்றிருக்கும். ஆனால், கடைசியில் என்னிடம் சொன்ன கதையையே சிம்பு மாற்றி எடுத்துவிட்டார் என காதல் சந்தியா த்ரோபேக் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

simbu simbu birthday throwback

நயன்தாரா தான் காரணம்: அந்த சமயத்தில் தான் நடிகை நயன்தாராவும் சிம்புவும் காதலிக்கத் தொடங்கினர். வல்லவன் படத்துக்குள் நயன்தாரா வந்த நிலையில் தான் படத்தின் கதையே மாறி படம் மன்மதன் அளவுக்கு வெற்றிப் பெறாமல் போய்விட்டது என்றும் சிம்பு ரசிகர்கள் அந்த காட்சிகளை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

simbu simbu birthday throwback

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X