திமுகவுக்காக பிரசாரம் செய்ய தயாரான ரஜினிகாந்த்தின் மகள்.. அட இது லிஸ்ட்லையே இல்லையே
சென்னை: சூப்பர் ஸ்டார் நாற்காலியில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அமர்ந்திருக்கும் ரஜினிக்கு மொத்தம் இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்றார். ஆனால் சில காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும் இரண்டாவது திருமணம் நடந்தது. இரண்டு பேருமே சினிமாவில்தான் இருக்கிறார்கள். மூத்தவர் இயக்குநராகவும், இளையவர் தயாரிப்பாளராகவும் கலக்கிவருகிறார்கள். இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழியின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
இந்திய சினிமாவின் அடையாளமாகவும், பெருமிதமாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 75 வயதிலும் அசராமல் நடித்துவரும் அவர் இப்போது ஜெயிலர் 2வில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமலுடனும் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் மீதும் ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கும் அதீத எதிர்பார்ப்பு நிலவுகிறது. கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கமலுடன் சேர்ந்து ரஜினி நடிக்கும் படம் எட்டும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

ரஜினியின் மகள்கள்: ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இதுவரை 3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். மூன்று படங்களுமே சுமார் ரகம்தன. அதேசமயம் இயக்குநராக அவரது ஒர்க் அனைத்தும் பாராட்டும்படியே இருந்தது. அடுத்ததாக டெக்ஸ்லா என்ற படத்தை இயக்குகிறார். இரண்டாவது மகளான சௌந்தர்யா டைட்டில் டிசைன்களை கவனித்துக்கொண்டிருந்தார்.
அதனையடுத்து கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கினார். கோவா உள்ளிட்ட படங்களை தயாரித்தார். ஆனால் பெரிய அளவில் வெற்றி எதுவும் கிடைக்காமல் இருந்தது. கடைசியாக அவர் தயாரித்திருந்த வித் லவ் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது.
பெர்சனல் வாழ்க்கை: ரஜினியின் இரண்டு மகள்களுக்கும் பெர்சனல் வாழ்க்கை அப்படி இப்படித்தான் அமைந்தது. முதல் மகள் தனுஷை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து செய்திருக்கிறார். இரண்டாவது மகளும் முதலில் ஒரு திருமணம் செய்து அதிலிருந்து வெளியே வந்தார். அதனையடுத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர் குடும்பம் சகிதமாக சந்தோஷமாக இருக்கிறார். அதேசமயம் மூத்த மகள் ஐஸ்வர்யா சிங்கிளாகவே காலத்தை கடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழியின் பேட்டி தற்போது திடீரென ட்ரெண்டாகியுள்ளது. தனியார் யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதாகா அறிவித்தார். அந்த சமயத்தில் அவரது மகள் ஐஸ்வரயா எனக்காக பிரசாரத்துக்கு வருகிறேன் என கூறினார்.
ஆனால் நானோ, 'தயவு செய்து வராதே' என்று கெஞ்சினேன். அதற்கு பிறகுதான் அவர் வரவில்லை" என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யாவோ, 'நான் யாருக்காகவும் எங்கேயும் போகமாட்டேன். ஆனால் கனிமொழி அக்காவுக்கு ஒன்று என்றால் அங்கே நான் இருப்பேன். அதனால்தான் இப்போதும் வந்தேன்" என தெரிவித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம்: முன்னதாக, சில வருடங்களுக்கு முன்பு அரசியலுக்கு வருவதாகவும், தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும் அறிவித்து பின் வாங்கிவிட்டார் ரஜினிகாந்த். தனது உடல்நிலையை காரணம் காட்டிய அவர்; தனது ரசிகர்களை பலிகடா ஆக்கவும் விரும்பவில்லை எனவும் விளக்கியிருந்தார். ஆனால் சமீபத்தில் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, திமுக மிரட்டியதால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறியதும்; அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததும்; ஆதவ் இறுதியாக மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















