விஜய் லீடர்னா அப்போ நான் யாரு?.. கடுப்பான கலைஞர் கருணாநிதி.. பயந்துபோன தளபதி.. சுறாவால் வந்த வினை
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய்; நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும் என இருக்கிறார். அதேசமயம் அவர் அரசியலுக்கு வந்ததிலிருந்தே அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் பெட்டி பாம்பாக இருந்துவிட்டு இப்போ கம்பு சுற்றுகிறார் என்றும் கிண்டல்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் விஜய்யால் கலைஞர் கருணாநிதி காண்டான சம்பவத்தை பார்க்கலாம்.
நடிகராக மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் விஜய்; தன்னுடைய ரசிகர் மன்றத்தை பல வருடங்களுக்கு முன்பே மக்கள் இயக்கமாக மாற்றினார். அதன் மூலம் ஏகப்பட்ட நலத்திட்ட பணிகளை செய்தார். அதனையடுத்து விஜய் அரசியலுக்கு வரவிருக்கிறார். அதன் காரணமாகத்தான் இதையெல்லாம் செய்கிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அந்த சமயத்தில் தமிழ்நாட்டின் இரண்டு ஆளுமைகளான கலைஞர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிரோடு இருந்தார்கள். அதனால் விஜய்யால் அடுத்தக்கட்ட நகர்வை செய்ய முடியவில்லை. படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.

அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய்: நிலைமை இப்படி இருக்க தற்போது அவர்கள் இரண்டு பேருமே இல்லை. ஸ்டாலினை எளிதாக வீழ்த்திவிடலாம் என எண்ணி தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார். கட்சி தொடங்கியதிலிருந்து ஸ்டாலின் மீது அட்டாக் செய்துவருகிறார். அதுமட்டுமின்றி நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கும், தவெகவுக்குமான போட்டி என்றும் சூளுரைத்திருக்கிறார். அவர் எவ்வளவுதான் தொண்டை கிழிய பேசினாலும் முதலமைச்சர் ஸ்டாலின் விஜய்யின் பெயரைக்கூட இன்றுவரை உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பரப்புரையில் விஜய்: தேர்தல் நாள் நெருங்கிவிட்டதால் பரப்புரையில் மும்முரமாக ஈடுபடுகிறார் விஜய். அதேசமயம் ஒருநாளைக்கு பரப்புரை சென்றால் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறார். அது கட்சி தொண்டர்களிடையேயும், வேட்பாளர்களிடையேயும் சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. சங்கீதா பிரச்னை, கரூர் துயர சம்பவம், விஜய்யின் அசமந்தமான செயல்பாடுகள் எல்லாம் சேர்ந்து அவருக்கு தேர்தலில் என்ன மாதிரியான ரிசல்ட்டை கொடுக்கப்போகிறது என்பது கூடியவிரைவில் தெரிந்துவிடும்.
கலைஞருடனான நெருக்கம்: இதற்கிடையே இப்போது திமுகவையும், ஸ்டாலினையும் விஜய் கடுமையாக எதிர்த்தாலும்; ஒருகாலத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியுடன் விஜய்யும், எஸ்.ஏ.சியும் நெருக்கமாகவே இருந்தார்கள். 2010 காலகட்டத்தில் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டில் அவரை காப்பாற்றியதே கலைஞர் கருணாநிதிதான் என்ற பேச்சும் உண்டு. ஆனால் 2011ஆம் ஆண்டு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதனையடுத்து தலைவா படத்துக்கு பிரச்னையை சம்பாதித்தார். அது கால தாமதமாக ரிலீஸ் ஆனதும்; அதற்காக விஜய் கை கட்டி வீடியோ வெளியிட்டதும் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் தலைவா படத்துக்கு டைம் டூ லீட் வாசகம் பிரச்னை கொடுத்தது மாதிரி; சுறா படத்துக்கும் நடந்திருக்கிறது.
காண்டான கலைஞர் கருணாநிதி: அதாவது, அந்தப் படத்தின் பெயருக்கு கீழே, 'The Leader' என்ற வாசகமும் இடம்பெற்றிருந்ததாம். தியேட்டர் ஒன்றில் ஏதோ ஒரு படம் பார்க்க சென்றிருக்கிறார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. தியேட்டரில் இருந்த சுறா பட போஸ்டரில், 'சுறா தி லீடர்' என்பதை பார்த்துவிட்டு அருகில் இருந்தவர்களிடம் கோபமாகி, இவரெல்லாம் லீடரா?.. இவர் லீடர் என்றால் அப்போ நானெல்லாம் யாரும்' என சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.
பயந்துபோன விஜய்: இந்த விஷயம் எப்படியோ விஜய்யின் காதுகளுக்கு சென்றுவிட்டதாம். உடனே பதறியடித்த அவர் படக்குழுவை அழைத்து, அந்த லீடர் என்பதை தூக்கிவிடுங்கள். கலைஞரே சொல்லிவிட்டாராம் என சொல்லியிருக்கிறார். முதலில் அதற்கு அவர்கள் மறுத்தார்களாம். ஆனால் விடாத விஜய், எப்படியோ அந்த வாசகத்தை தூக்க சொல்லிவிட்டாராம். இதனை அவருடன் நெருங்கி பழகிய ரவிராஜ் என்பவர் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications















