ஒரு மாதம்தான் இருப்பார்.. லிவிங்ஸ்டன் மனைவிக்கு நேர்ந்த கதி.. ரஜினி செய்தது என்ன தெரியுமா?.. சூப்பர் மனுஷன்

சென்னை: ரஜினிகாந்த் இப்போதும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த வருடத்தில் அவர் நடிப்பில் வந்த கூலி படம் தோல்வியடைந்தாலும் அவரது ஸ்டைலும், நடிப்பும் வழக்கம்போல் அட்டகாசமாக இருந்தன. அடுத்ததாக ஜெயிலர் 2வில் நடித்திருக்கிறார். இந்த வருடத்தில் படம் ரிலீஸ். இதனை முடித்த அவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்திலும், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இந்திய திரைத்துறையில் ரஜினிக்கென்று பெரிய அறிமுகமே தேவையில்லை. கடந்த ஐந்து தசாப்தங்களாக தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹீரோக்களில் அவரும் ஒருவர். இடை இடையே சின்ன சின்ன தோல்விகளையும் அவர் சந்திக்க தவறவில்லை. அப்போதெல்லாம் ரஜினிக்கு பத்திரிகைகளும், அவரது எதிர்ப்பாளர்களும் முடிவுரை எழுதுவதற்கான முதல் எழுத்தை ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அடுத்த படத்திலேயே பெரிய ஹிட்டை கொடுத்து தரமான கம்பேக் கொடுத்துவிடுவார்.

2 800 700 75 15 80
Photo Credit:

இனியும் நடக்கும்: பாபா தோல்வியடைந்தபோது பெரும்பாலானோர் சொன்னது 'இனிமேல் ரஜினி அவ்வளவுதான்'. ஆனால் அவரோ அடுத்து நடித்த சந்திரமுகி படத்தை மெகா ப்ளாக் பஸ்டராக கொடுத்தார். 800 நாட்களுக்கும் மேல் அந்தப் படம் திரையரங்குகளில் ஓடியது. அதேபோல் தர்பார், அண்ணாத்த தோல்வியடைந்தபோதும் அதே வார்த்தையைத்தான் சொன்னார்கள். அந்தப் படங்களின் தோல்விக்கு பிறகு நடித்த ஜெயிலர் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்தது. தான் யானை இல்லை குதிரை; விழுந்தால் உடனே எழுந்துவிடுவேன் என்பதை அவர் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டேதான் இருக்கிறார். கூலி படத்தின் தோல்விக்கு அடுத்த படங்களில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

என்ன காரணம்?: இளம் பட்டாளம் ஹீரோக்களாக வந்துவிட்ட இந்த காலத்திலும் அவர்களுக்கு தன்னுடைய 75 வயதில் கடும் போட்டி கொடுக்கிறார். அதற்கு அவரது திறமை, உழைப்பு எப்படி காரணமோ அதேபோல் அவரது மனமும்தான் காரணம் என்கிறார்கள் அவருடன் நெருங்கி பழகியாவர்கள். தான் எவ்வளவு தூரம் வந்தாலும், உயரம் வளர்ந்தாலும் தான் கீழே இருக்கும்போது தனக்காக உதவியவர்களை, தன்னை வளர்த்துவிட்டவர்களை எப்போதும் மறந்ததே இல்லை சூப்பர் ஸ்டார்.

Also Read
அத்தனை வலிகள்.. அனைத்தையும் தாங்கினேன்.. எமோஷனலான விஜய்.. சங்கீதா பிரச்னையை சொல்றாரோ?
அத்தனை வலிகள்.. அனைத்தையும் தாங்கினேன்.. எமோஷனலான விஜய்.. சங்கீதா பிரச்னையை சொல்றாரோ?

லிவிங்ஸ்டன் மனைவிக்கு செய்த உதவி: இந்நிலையில் அவர் பற்றி ஒரு சம்பவத்தை பார்க்கலாம். அதாவது இயக்குநர், நடிகர் என இரண்டு முகங்களை கொண்டவர் லிவிங்ஸ்டன். அவரது மனைவிக்கு திடீரென மாரடைப்பு வந்துவிட்டதாம். உடனே மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இன்னும் ஒரு மாதம்தான் இருப்பார் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் பணம் கட்டுங்கள் என மருத்துவர் சொல்ல; அந்தப் பெரிய தொகை அப்போது லிவிங்ஸ்டனிடம் இல்லை. இந்த விஷயம் ரஜினியின் காதுகளுக்குச் எல்ல; உடனடியாக 15 லட்சம் ரூபாயை லிவிங்ஸ்டனிடம் கொடுத்து உதவ; நல்லபடியாக அறுவை சிகிச்சை முடித்து இன்று ஆரோக்கியத்துடன் இருக்கிறாராம்.

என்ன காரணம்?: ரஜினி உதவியதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது ரஜினியின் கரியர் முடிந்துவிட்டது என்று 80களில் டாக் வந்தபோது தர்மயுத்தம் திரைப்படமும், அலெக்ஸ் பாண்டியன் திரைப்படமும் அவருக்கு தரமான கம்பேக்கை கொடுத்தன. அந்த இரண்டு படங்களுக்கும் கதாசிரியர் லிவிங்ஸ்டனின் மனைவியுடைய சகோதர பீட்டர் செல்வக்குமார். அவரால்தான் தனது கம்பேக் நடந்ததால்; அந்த நன்றியை மறக்காமல் இந்த உதவியை செய்திருக்கிறார். உண்மையில் சூப்பர் ஸ்டார் கிரேட்தான். இந்த சம்பவத்தை செல்வன் அன்பு என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். லிவிங்ஸ்டனும் ஒரு பேட்டியில் ஷேர் செய்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X