இருங்க பிள்ளைகளிடம் கேட்கிறேன்.. விஜய் அம்மாவிடம் சங்கீதா சொன்னது தெரியுமா?.. எல்லாம் அப்படித்தானாம்
சென்னை: விஜய்யும் சங்கீதாவும் கடந்த 1999ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் திடீரென சங்கீதா விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஏப்ரல் 20ஆம் தேதி இந்த மனுவானது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு நடக்கும் விசாரணையில் விஜய் ஆஜராவாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
விஜய்யின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் பிப்ரவரி 27ஆம் தேதியை மறக்கவே மாட்டார்கள். விஜய்க்கும் சங்கீதாவுக்கும் பிரச்னைதான் என கடந்த சில வருடங்களாகவே தகவல் ஓடிக்கொண்டிருந்தாலும் எதுவும் பொது வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால் விவாகரத்து மனு லீக்கானதை அடுத்து அனைத்தும் வெட்ட வெளிக்கு வந்துவிட்டது. சங்கீதா சுமத்திய குற்றச்சாட்டுக்கள் எல்லாம் விஜய்யின் இமேஜை சுக்கு நூறாக உடைக்கும்படியாக அமைந்துவிட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி; சங்கீதாவையே தரக்குறைவாக பேச தொடங்கினார்கள்.

திரிஷாவுடன் விஜய்: சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் நடிகை யாராக இருக்கும் என்று தவெகவின் பதைபதைத்தபோது; ரொம்பவே கூலாக நடிகை திரிஷாவுடன் ஒரு திருமணத்தில் கலந்துகொண்டார் விஜய். சங்கீதா தாக்கல் செய்த மனு கொடுத்த அதிர்ச்சியை விடவும்; பன்மடங்கு அதிர்ச்சியை இந்த விஷயம் கொடுத்தது. ஏற்கனவே விஜய் மீது அதிருப்தியில் இருந்தவர்கள் எல்லாம்; திரிஷாவுடன் அவரை பார்த்ததிலிருந்து கொதிப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விளாசிய தொண்டர்கள்: இந்த விஷயத்தில் எல்லாம் விஜய்யை காப்பாற்ற முடியாது என்ற ரியாலிட்டியை தெரிந்துகொண்டு அமைதியாக கடந்து சென்றார்கள். அதேசமயம் இதையெல்லாம் தாண்டி எப்படியாவது 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெகவை வெல்ல வைத்து கோட்டைக்குள் அனுப்பிட வேண்டும் என்பது அவர்களது லட்சியம். இருப்பினும் சங்கீதாவின் விவாகரத்து, திரிஷாவுடன் ஜோடி போட்டு வந்தது உள்ளிட்ட விஷயங்கள் பேக் ஃபயர் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
மீண்டும் சேர வேண்டும்: அதேசமயம் விஜய்யும், சங்கீதாவும் மீண்டும் சேர வேண்டுமென்பதுதான் பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் மீண்டும் விஜ்ய்யுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற பேச்சையே தன்னிடம் எடுக்கக்கூடாது என்பதில் மிக தீவிரமாக சங்கீதா இருப்பதாகவும்; விஜய்யோ ஜீவனாம்சம் கொடுப்பதில் விருப்பமில்லாமல் இருக்கிறார்கள் என்றும் மாறுபட்ட தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சங்கீதா பற்றி விஜய்யின் தாய் ஷோபா ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
சங்கீதா பற்றி ஷோபா சொன்னது: தனியார் யூடியூப் சேனலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷோபா, "சங்கீதாவுக்கு என்ன சாப்பாடு வேண்டும் என கேட்டுத்தான் நான் சமைத்து கொடுப்பேன். நானாக சமைக்க மாட்டேன். நான் ஃபோன் செய்து கேட்டால், இருங்க அத்தை பசங்களிடம் கேட்டு சொல்கிறேன் என சொல்லி; சஞ்சய்யிடமும், சாஷாவிடமும் ஷோபா ஆச்சி வீட்டுக்கு போறோம். என்ன வேண்டும் என கேட்பார். அதற்கு குழந்தைகளோ பிரியாணி கேட்பார்கள். நானும் செய்து வைப்பேன். அவர்கள் வீட்டுக்கு வந்து திருப்தியாக சாப்பிடுவார்கள். அதுவும் ஜேசன் சஞ்சய்தான், ஆசம் ஆசம் என சொல்லிக்கொண்டே சாப்பிடுவார். எல்லா விஷயத்திலும் சங்கீதா அப்படித்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications















