ரஜினிக்காக இயக்குநர் அவதாரம் எடுத்த இளையராஜா... அந்தப் படத்தோட டைட்டில் கூட அவர் வச்சது தானா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம், தலைவர் 170 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு ஒரே நேரத்தில் ரஜினியின் லைன் அப்பில் 3 படங்கள் இருப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில், ரஜினி நடிப்பில் 1989ம் ஆண்டு வெளியான ராஜாதி ராஜா படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இந்தப் படத்தை இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் தனது பாவலர் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ராஜாதி ராஜா
ஜெயிலர், லால் சலாம், தலைவர் 170 என வரிசையாக மூன்று படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லைன்-அப்பில் உள்ளன. பல வருடங்களுக்குப் பிறகு ஒரே நேரத்தில் ரஜினி ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், 1980, 90 களில் ஒரே ஆண்டில் 5க்கும் மேற்பட்ட ரஜினியின் படங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 1989ல் மட்டும் ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜாதி ராஜா ஆகிய படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன.

ராஜாதி ராஜா உருவான கதை
இதில், ராஜாதி ராஜா படத்தை இளையராஜாவின் அண்ணன் பாஸ்கருக்காக நடித்துக்கொடுத்தார் ரஜினி. பாஸ்கரின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ரஜினி ஜோடியாக ராதா, நதியா இருவரும் நடித்திருந்தனர். மேலும், ஜனகராஜ், ராதாரவி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இளையராஜாவின் டைட்டில்
ராஜாதி ராஜா படத்துக்கான கதை, திரைக்கதையை பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். ஆனால், சரியான இயக்குநர் அமையாமல் படப்பிடிப்பு தள்ளிப்போய்கொண்டே இருந்ததாம். அதனால் இந்தப் படத்தை தானே இயக்கலாம் என முடிவெடுத்துள்ளார் இளையராஜா. அதுமட்டும் இல்லாமல் படத்திற்கு 'ராஜாதி ராஜா' என்ற டைட்டிலையும் அவரே முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.

இறுதியாக வந்த ஆர் சுந்தராஜன்
ஆனால், இறுதியாக ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ராஜாதி ராஜா உருவானது. இளையராஜா இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக, படமும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு இளையராஜாவுக்கு படம் இயக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அவரும் தொடர்ந்து இசையமைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினாராம். ஒருவேளை ராஜாதி ராஜா படத்தில் இளையராஜா இயக்குநர் ஆகியிருந்தால், அதன்பிற்கு ஒரு நல்ல இயக்குநரும் தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்திருப்பார்.


Click it and Unblock the Notifications











