Suriya: சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் குறித்து ரசிகர்களுக்கே தெரியாத விஷயங்கள்.. தரமா இருக்குப்பா!
சென்னை: இணையத்தில் பெரிய நடிகரின் படங்கள் வரும்போது எப்போதும் அவர்களின் ரசிகர்கள், தங்களின் அபிமான நடிகர்கள் குறித்து தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். ஆனால் அந்த அன்பு ஒரு கட்டத்திற்கு மேல், மற்ற நடிகர்களை கொச்சை படுத்தும் அளவுக்கு சென்று விடுவதைப் பார்க்க முடிகிறது. அதனால் ரசிகர்களுக்கு இடையில் ஏகப்பட்ட வார்த்தை போர்கள் நடைபெறுகிறது. இப்படியான நிலையில் சினிமாவை கொண்டாடும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அப்படியான கூட்டத்தில் இருக்கும் ஒரு ரசிகர், சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக அந்த ரசிகர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2003 ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூர்யா கூட்டணியின் "காக்க காக்க" வெற்றியை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி இணைய இருந்த படம் "சென்னையில் ஒரு மழைக்காலம்" அது நடக்காமல் போக, ஒரு வழியாக 2006ஆம் ஆண்டில் மீண்டும் இணைந்த படம் "வாரணம் ஆயிரம்". இதற்கு நடுவில் இன்னொரு படமும் நடக்காமல் போனது. இந்த படம் 2008ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
1994 ஆண்டு வெளியான அமெரிக்கன் படமான "Forest Gump" தான் வாரணம் ஆயிரம் உருவாக காரணம். கௌதம் தன் வாழ்க்கையை தழுவியே எழுதிய சுயசரிதை தான் "வாரணம் ஆயிரம்" . தனக்கும் தன் அப்பாவுக்குமான நிஜ கதையை திரையில் கொண்டு வந்தார் கௌதம். தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக சிக்ஸ் பேக் கலாசாரத்தை இந்த படத்தின் மூலம் கொண்டு வந்தார் சூர்யா. அது படத்திற்கு பெரிய விளம்பரமாகவும் அமைந்தது. படத்தில் பல தோற்றத்தில் தரமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார் சூர்யா.

சூர்யா: "காக்க காக்க" வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் மீண்டும் இணைந்தது கௌதம்+சூர்யா+ஹாரிஸ் கூட்டணி. படத்தில் மொத்தம் 7 பாடல்கள்.கவிஞர் தாமரை வரியில் 6 பாடல்களும் கவிஞர் நா.முத்துக்குமார் வரியில் ஒரு பாடலும் உருவானது. 7 பாடல்களும் தரம். ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. சூர்யா இதில் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார். ஆனால் முதலில் அப்பா சூர்யா வேடத்தில் நடிக்க மோகன்லால் மற்றும் நானா படேகர் ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்டனர். ஆனால் ஃபிளாஷ் பேக் காட்சிகளில் இளமையாக காட்ட வேண்டும் என்பதால் சூர்யா தானே முன்வந்து நடித்தார்.
சமீரா ரெட்டி: இதில் ரம்யா நடித்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் தீபிகா படுகோனே. அவர் ஹிந்தியில் பிஸியாக இருந்ததால் பின் ஆண்ட்ரியா நடிக்க இருந்தார். அவரும் விலக அசினிடம் பேச்சுவார்த்தை நடந்தது. சூர்யா அவரை நிராகரிக்க தயாரிப்பாளர் ரம்யா தான் நாயகி என அறிவித்தார். அதே போல் சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜெனிலியா. சில காரணங்களால் அவர் விலக தமிழில் அறிமுகமானார் சமீரா ரெட்டி.]
விருதுகள்: நேருக்கு நேர் (1997) படத்திற்கு பின் 11 வருடங்களுக்கு பின் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் சிம்ரன். 2008 ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. குறிப்பாக சென்னையில் மட்டும் ரூபாய் 6 கோடி வசூல் செய்தது . தெலுங்கு ரீ-ரிலீஸ் கூட ரூபாய் 3 கோடி வசூல் செய்தது.2008 ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது வாரணம் ஆயிரம். பல பிரிவுகளில் ஃபிலிம்பேர் விருதுகளையும் தமிழக அரசின் விருதுகளையும் வென்றது" என வாரணம் ஆயிரம் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



Click it and Unblock the Notifications











