ரஜினி சொன்னால்தான் கேட்பாங்க.. நான்லாம் சொன்னால்?.. தனுஷ் இப்படி ஓபனாக சொல்லிட்டாரே ப்பா!
சென்னை: தனுஷ் இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் சினிமாவில் வளர்ந்துவரும் சமயத்திலேயே ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த சூழலில் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அதேசமயம் அவர்கள் இரண்டு பேர் மீதும் தவறு இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். அந்தப் படம்தான் தனுஷின் வாழ்க்கையில் பல விஷயங்களை பெற்றுக்கொடுத்தது. முக்கியமாக ரஜினிகாந்த்தின் மகளுடன் பழகுவதற்கான வாய்ப்பையும் வழங்கியது. இரண்டு பேருக்குமான அந்த பழக்கம் சில நாட்களிலேயே காதலாக மாறியது. இரண்டு பேரின் காதலுக்கும் கொஞ்சம் யோசனைக்கு பிறகு ரஜினியும், அவரது மனைவியும் சம்மதம் வழங்கினார்கள்.

பலருக்கு ஆச்சரியம்: சினிமாவுக்குள் வந்து வளர்ந்துகொண்டிருந்த சமயத்திலேயே ரஜினியின் வீட்டுக்கு தனுஷ் மருமகன் ஆனதை கண்டு பலர் ஆச்சரியமும், பலர் பொறாமையும் பட்டார்கள். இரண்டு பேரின் திருமணமும் கடந்த 2004ஆம் ஆண்டு சென்னையில் கோலாகலமாக நடந்தது. அதில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தார்கள்.
பக்கா ஜோடி: முக்கியமாக தனுஷின் பேசும் விதம், நடை உடை பாவனை என அத்தனை மாறுதல்களுக்கும் ஐஸ்வர்யா பக்கபலமாக இருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவுக்குள் இருக்கும் இயக்குநர் ஆசையையும், எண்ணத்தையும் தெரிந்துகொண்ட தனுஷ்; 3 படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்ததாக வை ராஜா வை படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்தார். இவர்கள் இரண்டு பேருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படி கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்தார்கள் அவர்கள்.
பிரிவு: சூழல் இப்படி இருக்க திடீரென சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பேரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். அதில், 'தாங்கள் இரண்டு பேரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதாகவும்; இரண்டு பேரும் தனித்தனி பாதையில் பயணிக்கவிருக்கிறோம்' என்று தெரிவித்தார்கள். அதேசமயம் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தார்கள். இதன் காரணமாக அவர்கள் கண்டிப்பாக இணைவார்கள் என்று கருதப்பட்டது.
விவாகரத்து: ஆனால் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக கடந்த வருடம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள் அவர்கள். இரண்டு பேரையும் சேர்த்து வைக்க நீதிமன்றம் முயன்றாலும்; தங்களுக்கு டைவர்ஸ் வேண்டுமென்பதில் தனுஷும், ஐஸ்வர்யாவும் உறுதியாக இருந்ததால் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக விவாகரத்து வழங்கியது நீதிமன்றம். இதற்கு பிறகு அவர்கள் இரண்டு பேரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வார்களா இல்லை சிங்கிளாகவே இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தனுஷின் பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து தனுஷ் பேசியிருக்கும் விஷயம் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. யாரடி நீ மோகினி பட சமயத்தில் பேட்டி கொடுத்திருந்த அவர், "ரஜினிகாந்த் கருத்து சொன்னால்தான் கேட்பார்கள். அவருக்கு மட்டும்தான் அந்தத் தகுதி இருக்கிறது. நாம் வேண்டுமானால் சொல்லலாம்; ஆனால் அவர்கள் கேட்க வேண்டுமே. அந்தத் தகுதி ரஜினியிடம் மட்டும்தான் இருக்கிறது. அவர் போல் கருத்து சொல்ல வேண்டுமென்றால் இன்னும் பல வருடங்கள் நான் உழைக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











