உங்களை பார்த்து நடுங்கிட்டு இருக்கோம்.. விஜய்யிடம் ஃபோனில் பேசிய தனுஷ்.. எந்த ஈகோவும் இல்லை
சென்னை: தனுஷ் இப்போது தேரே இஷ்க் மெய்ன் என்கிற ஹிந்தி படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கிவருகிறார். ஹீரோயினாக கீர்த்தி சனோன் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இதற்கிடையே சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்திலும், தானே இயக்கியிருக்கும் இட்லி கடை திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். இவை தவிர்த்து ஏகப்பட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கின்றன.
நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கிவருபவர். அவரது நடிப்புகென்று திரைத்துறையிலேயே பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளையும் அவர் வாங்கியிருக்கிறார். தற்போதைய தேதிக்கு இந்திய சினிமாவில் டாப் 10 சிறந்த நடிகர்கள் லிஸ்ட்டை எடுத்தால் அதில் கண்டிப்பாக தனுஷும் இருப்பார். இயக்குநர் இமயம் பாரதிராஜா முதற்கொண்டு பலரும் தனுஷின் நடிப்பை சிலாகித்து பேசியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநராகவும் தனுஷ்: அவர் நடிகராக நிலைக்கவே மாட்டார் என்றுதான் தனுஷ் நடிக்க வந்தபோது பலரும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அவர் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கிறார். முதன்முதலில் அவர் இயக்கிய பவர் பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அந்தப் படத்துக்கு பிறகு தனது சகோதரி மகன் பவிஷை ஹீரோவாக வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார். அதுவும் பெரிதாக ஹிட்டாகவில்லை.

இட்லி கடை தனுஷ்: இப்போது அவர் இட்லி கடை என்கிற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனனும், முக்கியமான கேரக்டரில் அருண் விஜய்யும் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் பத்தாம் தேதி படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அன்றைய தினம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. இதன் காரணமாக அஜித்துக்கு போட்டியாக களமிறங்குவது அவ்வளவு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்த தனுஷ் ரிலீஸை தள்ளி வைத்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிற படங்கள்: இட்லி கடை படம் தவிர்த்து தனுஷ் கைகளில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் இயக்கத்தில் ஒரு படம், போர்த்தொழில் இயக்குநர் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜாவின் பயோபிக் என ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. மேலும் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமும் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் பாலிவுட்டில்: இதற்கிடையே தனுஷ் ஏற்கனவே ராஞ்சனா, ஷமிதாப் என பாலிவுட் படங்களிலும் நடித்து தனது தடத்தை பதித்திருக்கிறார். தற்போது மீண்டும் ஹிந்தியில் நடிக்கிறார். அந்தவகையில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகிவரும் தேரே இஷ்க் மெய்ன் என்கிற படத்தில்தான் ஹீரோவாக நடித்துவருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துவருகிறார். ராஞ்சனா போல் இந்தப் படமும் ஹிந்தியில் வசூல் சாதனை படைக்கும் என்று தனுஷ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யிடம் பேசிய தனுஷ்: இந்நிலையில் விஜய் மற்றும் தனுஷ் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது தனுஷ் நடித்த படிக்காதவன் படமும், விஜய் நடித்த வில்லு திரைப்படம் ஒரே சமயத்தில் ரிலீஸானது. அந்த சமயத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த விஜய்யிடம் தனுஷ் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர், 'வணக்கம் தளபதி' என்று சொல்ல; விஜய்யோ, 'வணக்கம் தனுஷ் படிக்காதவன் படத்துக்கு வாழ்த்துகள்' என்று கூறினார். உடனே தனுஷோ, 'ஐயோ அண்ணா உங்களோட வில்லு படம் வருதே. அதை நினைத்து நடுங்கிட்டு இருக்கோம் அண்ணா' என்று கேஷுவலாக கூறினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ் ஈகோவே இல்லாம பேசிருக்காரே ப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
நெருங்கிய நண்பர்கள்: முன்னதாக விஜய்யும், தனுஷும் நெருங்கிய நண்பர்களாகவே திரைத்துறையில் திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருமுறை அவரும், விஜய்யும் சேர்ந்து பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கரமாக ட்ரெண்டானது. அந்தப் பார்ட்டியில் சிம்புவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனுஷிடம் தனக்கு பிடித்தது அவருடைய எனர்ஜி என்று விஜய்யும், விஜய்யிடம் தனக்கு பிடித்தது அவருடைய அமைதியும், நடனமும், நடிப்பும் என்று தனுஷும் கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இவ்வளவு அமைதியாக இருந்துகொண்டு எப்படி விஜய்யால் மட்டும் இப்படி நடனம் ஆட முடிகிறது என்று தெரியவில்லை என தனுஷும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அந்த அளவுக்கு அவர்கள் இரண்டு பேரும் மனம் திறந்து ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்வார்கள்.
விஜய்யின் இப்போதைய படம்: விஜய் இப்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம்தான் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடித்துவருகிறார்கள். அனிருத் இசையமைப்பில் மொத்தம் ஐந்து பாடல்கள் இந்தப் படத்தி இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக எம்ஜிஆரின் பாடலான நான் ஆணையிட்டால் பாடலை அனிருத் இந்தப் படத்துக்காக ரீமிக்ஸ் செய்திருப்பதாகவும் ஒரு தகவல் சமீப நாட்களாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒருவேளை அப்படி ரீமிக்ஸ் செய்யபப்ட்டால் கண்டிப்பாக விஜய்க்கு அந்தப் பாடல் பக்காவாக பொருந்தும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
தமிழக வெற்றிக் கழகம்: முன்னதாக விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கி முதல் மாநில மாநாடு கடந்த வருடம் நடைபெற்றது. அதில் பேசிய விஜய் திமுகதான் தன்னுடைய கொள்கை எதிரி என்று பிரகடனப்படுத்தி தொடர்ந்து திமுகவை விளாசிவருகிறார். இதன் காரணமாக விஜய் பாஜகவின் பி டீம் என்று திமுகவினர் பேச ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது சினிமாவை தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கு வரும் தைரியம் விஜய்க்கு மட்டும்தான் இருக்கிறது என்று சமுத்திரகனி உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்தார்கள். இதற்கிடையே விஜய்க்கு நெருக்கமானவர்களில் தனுஷும் ஒருவர் என்பதால் அவர் விஜய்யின் கட்சிக்கு தன்னுடைய ஆதரவை கொடுப்பாரா என்றும் ஒருதரப்பினரிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











