ஐஸ்வர்யா இருக்காங்க.. யோவ் போயா.. இருந்து என்ன பிரயோஜனம்னு விவேக்கிடம் கேட்ட தனுஷ்.. இவ்ளோ ஓபனா?

சென்னை: தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்து முடித்துவிட்டு இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்துவருகிறார். கடைசியாக அவர் நடித்த ராயன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அது அவரது 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அவர். 15 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த அவர்கள் கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்திய சினிமாவில் சிறந்த நடிகர் என்ற பெயரை எடுத்தவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான அவருக்கு காதல் கொண்டேன் படத்தில் அடையாளம் கிடைத்தது. அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ் தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டே சென்றார். இதனால் அவரது கரியரும் உச்சத்தை நோக்கி சென்றது. ஒருகட்டத்தில் பாலிவுட்டுக்கு நடிக்க சென்ற அவர்; அடுத்து ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்து அங்கும் தனது திறமையை நிரூபித்தார்.

throwback stories dhanush aishwarya vivek

அடுத்த படங்கள்: அவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அவரே இயக்கி நடித்த படம் அது என்பது அனைவரும் அறிந்தது. ராயனை முடித்துவிட்டு குபேரா படத்தில் நடித்திருக்கும் அவர்; தற்போது இட்லி கடை என்ற படத்தை தானே இயக்கியும் நடித்தும்வருகிறார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இவை தவிர்த்து வெங்கி அட்லூரி, மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் இயக்கத்திலும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

திருமணம்: இதற்கிடையே காதல் கொண்டேன் பட சமயத்தில் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முதலில் இவர்களது திருமணத்துக்கு ரஜினியின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் மகள் தொடர்ந்து பிடிவாதமாக இருந்ததன் காரணமாக ரஜினியும், லதாவும் இந்தத் திருமணத்துக்கு ஓகே சொன்னார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

விரிசல்: திருமணம் ஆகி பல வருடங்கள் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்தார்கள். தனுஷின் ஆட்டிட்யூட் மாறியதற்கு ஐஸ்வர்யாவும், ஐஸ்வர்யா இயக்குநராக மாறியதற்கு தனுஷும் காரணம். ஆனால் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு முன்பாகவே அவர்களுக்கிடையே மனக்கசப்பு வந்தது. அதற்கு காரணம் தனுஷின் செயல்பாடுதான் என்று ஒருதரப்பினர் கூறுவதுண்டு. அதெல்லாம் இல்லை ரஜினி வீட்டில் தனுஷ் குடும்பத்தினரை மதிப்பதே இல்லை; அதனால் தனுஷுக்கு கோபம் வந்துவிட்டது என்று இன்னொரு தரப்பினர் சொல்வதுண்டு.

விவாகரத்து: சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவித்தார்கள். அதேசமயம் விவாகரத்து பெறாமல் இருந்தார்கள். எனவே அவர்களை சேர்த்து வைப்பதற்கு இரு குடும்பத்து பெரியவர்களும் ரொம்பவே முயன்றனர். ஆனால் இவர்களோ நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்து கடந்த வருடம் விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். இது தனுஷின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி பட சமயத்தில் தனுஷ் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் தனுஷும், விவேக்கும் கலந்துகொண்டார்கள். அப்போது தனுஷிடம் பேட்டியின் தொகுப்பாளர், 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள். உங்களுக்கு ஐஸ்வர்யா இருக்காங்க' என கூறினார். உடனே தனுஷோ விவேக்கை பார்த்து, 'பார்த்தீங்களா சார். நாம கஷ்டப்பட்டு வாயை கட்டி வைத்த கட்டி வேலை செஞ்சு, நடனம் ஆடி சம்பாதிச்சா வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்காங்கனு அசால்ட்டா சொல்றாங்க. பின்னாடி இருந்து என்ன பிரயோஜனம்' என சிரித்துக்கொண்டே கூறினார். மேலும் அந்த தொகுப்பாளரை பார்த்து, 'யோவ் போயா' என்றும் தெரிவித்தார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் அப்போதிருந்தே தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பிரச்னை இருந்திருக்கிறதுபோல. அதனால்தான் விவாகரத்துவரை சென்றுவிட்டார்கள் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X