வளர்ந்த பிறகு வசந்தபாலனை கண்டுக்கலையா ஜிவி பிரகாஷ்?.. இது என்ன புது பஞ்சாயத்து.. இதோ விவரம்
சென்னை: ஜிவி பிரகாஷ் இப்போது நடிப்பில் பிஸியாக இருந்தாலும் இசையமைப்பையும் விடவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது. இந்நிலையில் அவருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் பற்றி இயக்குநர் வசந்தபாலன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று திடீரென சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜிவி பிரகாஷ் வெயில் படத்தில் இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே பாடல்கள், பின்னணி இசை என அத்தையிலும் முத்திரை பதித்தார். இதன் காரணமாக அடுத்தடுத்து குசேலன், ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன், கிரீடம் என வரிசையாக படங்கள் அமைந்தன. அத்தனை படங்களின் பாடல்களுமே அவருக்கு மிகச்சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்தன.
நடிப்பு பயணத்தை ஆரம்பித்த ஜிவி பிரகாஷ்: ஒருகட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜாவையே பீட் செய்யும் அளவுக்கு அவரது இசை பயணம் இருந்தது. அப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்தது. அப்படி அவர் நடிக்க ஆரம்பித்தாலும் பெரிய ஹிட் எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக அவர் பிளாக் மெயில் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் மென்டல் மனதில் படத்தில் நடித்துவருகிறார் ஜிவி.

தேசிய விருது: இதற்கிடையே அவர் நடிக்க வந்ததால் இசையில் கவனம் செலுத்தாமல் இருந்தார். பிறகு ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் இசையமைக்க ஆரம்பித்த அவர்; சூரரைப் போற்று, வாத்தி ஆகிய இரண்டு படங்களுக்கு தேசிய விருதும் வென்றார். இந்தப் படங்கள் தவிர்த்து ஏகப்பட்ட படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகிவருகிறார். அடுத்ததாக பராசக்தி படம் வரவிருக்கிறது. அதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது.
வசந்தபாலனுடன் மனஸ்தாபம்: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஜிவி பிரகாஷை அறிமுகப்படுத்திய வசந்தபாலனுடன் அவருக்கு இடையில் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டது. அதுகுறித்து பலரும் பல கதைகளை கிளப்பிவிட்டிருந்தார்கள். இந்நிலையில் அந்த விஷயம் தொடர்பாக வசந்தபாலன் பேசிய பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "வெயில் படத்தின் வெற்றி ஜிவி பிரகாஷுக்கு ஏகப்பட்ட படங்களின் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.
பார்க்கவும் முடியவில்லை; வாங்கவும் முடியவில்லை: ஆயிரத்தில் ஒருவன், குசேலன், கிரீடம் என எக்கச்சக்க படங்கள் குவிந்தன. அவரது ஸ்டூடியோவுக்கு சென்றால் பி.வாசு, செல்வராகவன் ஏகப்பட்ட இயக்குநர்கள் பாடல்களுக்காக வெயிட் செய்துகொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில் என்னால் ஜிவியை பார்க்கவே முடியவில்லை. மேலும் பாடல்களையும் வாங்க முடியவில்லை. அப்படி நிலைமை வந்ததால் அங்காடி தெரு படத்தை முடிக்க முடியத சூழல் உருவானது. எனவேதான் அவரிடம் சுமூகமாக பேசி விலகினேன்" என்றார். அந்த மனஸ்தாபம் நீங்கி வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் ஜிவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











