கமல் ஹாசனின் ஹே ராம்.. ரஜினிகாந்த் எத்தனை தடவை பார்த்திருக்கிறார் தெரியுமா?.. இவ்வளவு சிலாகிக்கிறாரே
சென்னை: கமல் ஹாசன் இயக்கத்தில், நடிப்பில், தயாரிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு உருவான படம் ஹே ராம். இதில் அவருடன் ஷாருக் கான், வசுந்தரா தாஸ், ராணி முகர்ஜி, கவிஞர் வாலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படம் வெளியானபோது பெரிதாக கொண்டாடப்படவில்லை. ஆனால் தற்போது கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது. இன்றுடன் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் சூழலில் படம் குறித்து ரஜினிகாந்த் சிலாகித்து பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்திய சினிமாவில் பலவிதமான புதிய முயற்சிகளை செய்யக்கூடியவர் கமல் ஹாசன். அவரது முயற்சிகளுக்கு வரவேற்பு கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து அந்த முயற்சியை விடாமல் செய்துவருபவர். தசாவதாரம் படத்தில்கூட இதனை மனதில் வைத்துதான் கவிப்பேரரசு வைரமுத்து, 'சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சோதனை முயற்சி சோர்வுறவில்லை' என்று கமலுக்காக எழுதியிருப்பார். அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் அந்த சமயத்தில் கொண்டாடப்படவில்லை என்றாலும் பிற்காலங்களில் கொண்டாடப்பட்டதுண்டு.

வரிசையாக பல முயற்சிகள்: அப்படித்தான் அவர் வசனமே இல்லாமல் பேசும் படம் என்று நடித்தார். அந்தப் படம் ரிலீஸான சமயத்தில் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. அதேபோல் விக்ரம், அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி, ஆளவந்தான் என அவர் எடுத்து பார்த்த வித்தியாசமான முயற்சிகள் நீண்டுகொண்டே செல்லும். அதன் காரணமகாத்தான் அவரை இந்திய திரையில் பலரும் இன்றளவு வரையில் பெரிதாக மதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹே ராம் திரைப்படம்: கமல் ஹாசன் இயக்கி நடிக்கும் படங்கள் என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு புதுமை இருக்கும். ஆழமான கருத்துக்கள் இடம்பெற்றிருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஹே ராம். கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அவருடன் ஷாருக்கான், வசுந்தரா தாஸ்,ராணி முகர்ஜி என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும். படத்தை கமல் ஹாசனே தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். ஏனெனில் கமல் எடுத்த ரிஸ்க்கை மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் எடுக்க முன்வரவில்லை என்பதுதான் உண்மை.
கல்ட் க்ளாசிக்: அந்தப் படம் வெளியானபோது பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. முக்கியமாக மகாத்மா காந்தியின் கொலையை மையமாக வைத்து அந்தப் படத்தை அவர் உருவாக்கியிருந்தார். அதுவரை அந்த சப்ஜெக்ட்டை தொடவே பலரும் பயந்துகொண்டிருந்தார்கள். அதேபோல் கலர் சினிமாக்கள் அபரிமிதமாக வளர்ந்திருந்த சமயத்தில் ஹே ராம் படத்தின் முக்கியமான பகுதிகளை கறுப்பு வெள்ளையில் காட்சிப்படுத்தியிருப்பார் கமல். அதற்கே தனி தைரியம் வேண்டும். அப்போது கொண்டாடப்படாத படம் தற்போதைக்கு பெரிய அளவில் கொண்டாடப்பட்டு கல்ட் க்ளாசிக் படமாக மிளிர்ந்துகொண்டிருக்கிறது.
ரஜினியின் பேச்சு: அப்படிப்பட்ட ஹே ராம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் அந்தப் படம் குறித்து ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் ஒரு விழாவில் பேசுகையில், "நான் அடிக்கடி பார்க்கும் சில படங்கள் உண்டு. அதாவது காட் ஃபாதர், திருவிளையாடல், ஹே ராம். ஹே ராம் படத்தை கிட்டத்தட்ட நான் 30லிருந்து 40 முறை பார்த்திருப்பேன். ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் அந்தப் படம் ஒவ்வொரு மாதிரி எனக்கு தெரியும். அந்தப் படம் ஒரு தபஸ் மாதிரிதான்" என்றார்.


Click it and Unblock the Notifications











