அவங்க ஒரு இளவரசி.. அதே அழகு, அதே எனர்ஜி.. செம வர்ணிப்பு போங்க.. திரிஷாவை வெட்கப்பட வைத்த விஜய்

சென்னை: விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி அரசியலில் பிஸியாக இருக்கிறார். அதேசமயம் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். கடந்த குடியரசு தினத்தன்று படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. கண்டிப்பாக இது அரசியல் சார்ந்த படமாக இருக்குமோ என்று போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். சுமாரான வரவேற்பையே பெற்றது. சூழல் இப்படி இருக்க தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் அவர். கட்சியின் முதல் மாநில மாநாடு, பரந்தூர் பயணம், காட்டமான அறிக்கைகள், கண்டனங்கள், தொண்டர்களுக்கு கடிதங்கள் என அரசியல் தளத்தில் தன்னை பிஸியாக வைக்க ஆரம்பித்திருக்கிறார் அவர். இதன் காரணமாக இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார்.

throwback stories vijay trisha

ஜன நாயகன்: அதன்படி அவரது கடைசி படம் என்று சொல்லப்படும் ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. ஹெச்.வினோத் படத்தை இயக்க ஹீரோயினாக பூஜா ஹெக்டே, வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார்கள். படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதனைப் பார்க்கும்போது கண்டிப்பாக இந்தப் படம் அரசியலை பேசும் படமாக அமைய வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.

விஜய், திரிஷா: இதற்கிடையே கோலிவுட்டின் ஃபேவரைட் ரீல் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் எப்போதும் டாப்பில் இருப்பவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ ஆகிய ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். இவற்றில் கில்லி, திருப்பாச்சி ஆகிய இரண்டு படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர்கள். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தார்கள். படத்தில் இருவருக்கும் லிப் லாக் காட்சியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிசுகிசுக்கள்: லியோ படத்தை முடித்துவிட்டு விஜய்யுடன் GOAT படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி கவனம் ஈர்த்தார் திரிஷா. அது விஜய்யுடனான நட்பை பறைசாற்றியது. அதேபோல் கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு இரண்டு பேரும் தனி விமானத்தில் கோவாவுக்கு சென்றார்கள். இவைகளை எல்லாம் கனெக்ட் செய்து விஜய்க்கும், திரிஷாவுக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று பலரும் கிசுகிசுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் இதிலெல்லாம் துளியும் உண்மையில்லை; வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள் என்று விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

வெட்கப்பட வைத்த விஜய்: இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசி திரிஷா வெட்கப்பட்ட வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. மேடையில் பேசிய அவர், "20 வயதில் ஒரு பெண் ஹீரோயினாவது பெரிய விஷயம் இல்லை. 20 வருடங்களாக ஹீரோயினாக இருப்பது சாதாரண விஷயமில்லை. அதுவும் அதே அழகோடு, எனர்ஜியோடு இன்னமும் திரிஷா இருக்கிறார். கையைக்கூட அவர் வித்தியாசமாகத்தான் ஆட்டுவார். அவர் உண்மையில் இளவரசி குந்தவைதான்" என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட திரிஷாவை செமயாக விஜய் புகழ்ந்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X