காதலர் தினம்.. மனைவி சங்கீதாவுக்கு விஜய் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?.. அட வேற லெவல் ப்பா

சென்னை: நடிகர் விஜய் கடைசியாக GOAT படத்தில் நடித்தார். அதற்கு பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கிறார். ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். சூழல் இப்படி இருக்க தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த வருடம் நடந்து முடிந்தது. அம்மாநாட்டில் விஜய்யின் தாய், தந்தை கலந்துகொண்டார்கள். அதேசமயம் விஜய்யின் மனைவியோ, மகனோ, மகளோ கலந்துகொள்ளவில்லை. இதை வைத்து பலரும் பல கிசுகிசுக்களை கிளப்பினார்கள்.

கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த அவர் இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக மாறி நிற்கிறார். அதற்கு ஒரே காரணம் அவரது உழைப்புதான். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை விமர்சன அம்புகளையும் எதிர்கொண்டு திறமையை வளர்த்து தற்போது தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக GOAT படம் வெளியானது. அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார்.

Throwback Stories Vijay Sangeetha

தமிழக வெற்றிக் கழகம்: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் ஜன நாயகன் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக களம் காண்கிறது. கண்டிப்பாக அரசியலிலும் அவரை வெற்றி பெற வைத்துவிட வேண்டுமென்ற முனைப்பில் அவரும் அவரது ரசிகர்களும் முழு மூச்சோடு கள பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.

முதல் மாநாடு: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த வருடம் நடைபெற்றது. அந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முக்கியமாக தாய், தந்தையுடன் பிரச்னை என்று கூறப்பட்ட நிலையில் விஜய்யின் தாய் ஷோபாவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துகொண்டார்கள். இதனையடுத்து அவர்களுக்குள் எந்தவித பிரச்னையும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இதனால் விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

மனைவி ஆப்சென்ட்: அதேசமயம் விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் சாஷா ஆகிய மூன்று பேரும் மாநாட்டுக்கு வரவில்லை. அதனை கவனித்த ஒரு தரப்பினர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் பிரச்னை என்று கடந்த சில காலங்களாகவே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை அது உண்மைதான்போல என்று பேச ஆரம்பித்தார்கள். முக்கியமாக சங்கீதா இங்கு இல்லை லண்டனில் இருக்கிறார் என்றும் பரவலாக பேசினார்கள். ஆனால் சமீபத்தில் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் அளித்த பேட்டியில் விஜய் வீட்டில்தான் சங்கீதா இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் விஜய், சங்கீதா குறித்த பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு வந்த காதலர் தினத்துக்கு தனது மனைவி சங்கீதாவுக்கு விஜய் விலையுயரந்த வாட்ச் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அந்த வீடியோவில் பேசும் சங்கீதா வாட்சை காண்பித்து, 'இதை எனது கணவர் அனுப்பியிருக்கிறார். ரொம்ப நாளாகவே கேட்டுக்கொண்டிருந்தேன். இதை காதலர் தினத்துக்காக அனுப்பியிருக்கிறார். இனிய காதலர் தின வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட எவ்வளவு க்யூட்டாக இருக்கு என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X