சிறு வயதிலிருந்தே அப்படித்தான்.. சீனியர்களுக்கு மத்தியில் விஜய் ஓபன் டாக்.. என்ன சொன்னார்?
சென்னை: நடிகராக இருந்து அரசியல் கட்சி தலைவராக மாறியிருக்கிறார் விஜய். அவரது அடுத்தக்கட்ட பயணம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாளைய தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும். எப்படியாவது தங்கள் தளபதி வென்றுவிட வேண்டும் என்று பிரார்த்தனையில் எல்லாம் தவெகவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அவரால் ஒரு மாற்றமும் ஏற்படாது என்பது அவருக்கு எதிர் நிலையில் இருப்பவர்களின் கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் வந்த விஜய்; தன்னுடைய திறமையால் தனக்கென தனி இடத்தை பிடித்தார். ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி நலத்திட்ட உதவிகளை செய்த அவர்; அரசியலுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக சில வருடங்களுக்கு முன்பு தவெகவை ஆரம்பித்தார். மேலும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்ட்யிட்டிருக்கிறார். நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.

வெல்வாரா விஜய்?: ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பார்வையும் விஜய் மீதும் அவரது கட்சியின் மீதும்தான் இருக்கிறார். அவரால் எங்கள் வெற்றியை பறிக்கவே முடியாது என்று சொன்ன ஆளுங்கட்சியினர் எல்லாம் இப்போது கொஞ்சம் ஜெர்க் ஆகியிருக்கிறார்கள் என்பது உண்மை. அவர்கள் அதை வெளியே காண்பித்துக்கொள்வதில்லை. விஜய்யை பொறுத்தவரை கனடிப்பாக ஆட்சியை பிடித்துவிடலாம் என்பதில் ரொம்பவே உறுதியாக இருக்கிறாராம். அதனால்தான் திருச்செந்தூர், ஷீரடி சாய் பாபா கோயிலுக்கெல்லாம் சென்றுவிட்டு வந்தார்.
கோரிக்கை வைத்த விஜய்: தேர்தல் முடிவுகள் அன்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் பனையூர் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும். வேறு எங்கும் சென்றுவிடக்கூடாது என்றும் கோரிக்கையை வைத்திருக்கிறார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை தவெகவுக்கு எதிராகவே அமைந்தன. இருப்பினும் விர்ச்சுவல் வாரியர்ஸ் அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை; இதெல்லாம் திமுகவின் கைப்பாவைகள் எடுத்த கருத்துக்கணிப்புகள் என்ற புது தியரியை உருவாக்கியிருக்கிறார்கள்.
சங்கீதா பிரச்னை: இதற்கிடையே சாங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு கடந்த மாதம் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி ஜூன் 15ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் காணொலி மூலம் விஜய் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி இத்தனை வருடன் திருமண வாழ்க்கை ஜூன் 15ஆம் தேதி கண்டிப்பாக சட்ட்பபூர்வமாக முறிந்துவிடும் எனவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் விஜய் தொடர்பான த்ரோபேக் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
விஜய்யின் வீடியோ: அதாவது மனோரமா உயிரோடு இருந்தபோது நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யும் கலந்துகொண்டார். அப்போது விஜய்யிடம் நடிகர் பிரபு, 'சினிமாவில் யாருமே ஆட முடியாதபடி நடனம் ஆடுகிறீர்கள். கற்றுக்கொண்டீர்களா இல்லை அதுவாக வருகிறதா?' என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய்யோ, "சிறு வயதிலிருந்தே எனக்கு டைமிங் சென்ஸ் அதிகம் இருக்கிறது. அதன் காரணமாக நானே பயிற்சி எடுத்துக்கொண்டேன்" என்றார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு அமைதியாக விஜய் பேசுகிறார் பாருங்கள் என்று கொண்டாடிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications