திருமணத்துக்கு பிறகு சூப்பர் ஃபீலிங்.. சங்கீதா பற்றி விஜய் பெருமிதம்.. இப்படியும் நினைச்சிருக்காரே
சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கூறி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார் சங்கீதா. தேர்தல் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கானது விசாரணைக்கு வரவிருக்கிறது. அன்றைய தினம் விஜய் ஆஜராவாரா இல்லையா என்பதிலும் பலர் கண்களை வைத்திருக்கிறார்கள். அதேபோல் தேர்தலில் தரமான வெற்றியை பதிவு செய்திட வேண்டும் என்கிற முனைப்பிலும் இருக்கிறார்கள் தவெகவினர்.
சங்கீதா கேட்ட விவாகரத்து, அவர் விஜய் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு, திரிஷாவுடன் விஜய் வந்தது ஆகிய மூன்று விஷயங்களும் பெரிய தலை வலியாக மாறியிருக்கிறது விஜய்யின் ரசிகர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும். சங்கீதா கேட்டிருக்கும் விவாகரத்து, விஜய் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களைகூட அவர்கள் சமாளித்துவிட்டார்கள். ஆனால் திருமணம் ஒன்றுக்கு திரிஷாவுடன் விஜய் சேர்ந்து வந்ததைத்தான் அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

திரிஷாவுக்கு வைக்கும் கோரிக்கை: அவர்கள் அப்படி செய்ததிலிருந்து இரண்டு பேருக்குமிடையே அப்படி என்ன தொடர்பு இருக்கும் என்ற தேடலில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள். முக்கியமாக தேர்தல் வந்துவிட்ட இந்த காலத்தில் இவர் தேவையில்லாமல் திரிஷாவுடன் ஜோடியாக வந்து; கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டார் என்பதே அனைவரது எண்ணமும். ஆனால் அவர்கள் இதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சமீபத்தில்கூட டெல்லிக்கு விஜய் சென்றபோது அவருக்கும் முன்னதாகவே அங்கே திரிஷா சென்றுவிட்டதாக ஒரு தகவல் ஓடியது. இதையெல்லாம் பார்த்த தவெகவினர் விஜய்யை விட்டு விலகிவிடுங்கள் திரிஷா என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
விஜய்யின் முடிவு என்ன?: இந்த விஷயத்தில் விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும் என்பதும் பெரிய முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. தனக்கு வாழ்நாள் ஜீவனாம்சம் வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார் சங்கீதா. எனில், ஜீவனாம்சமாக அவர் எவ்வளவு தொகையை எதிர்பார்க்கிறார்; அதற்கு விஜய் ஒத்துக்கொள்வாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம் அதீத ஜீவனாம்ச தொகைக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்பது விஜய்யின் முடிவாக இருக்கிறதாம்.
ரசிகர்களின் ஆசை: ஆனால் சங்கீதாவுடனான பிரச்னையை முடித்துக்கொண்டு ஒன்று சுமூகமாக பிரிந்து செல்ல வேண்டும் இல்லையென்றால் சேர்ந்து வாழ வேண்டும். அதை விட்டுவிட்டு முரண்டு பிடித்துக்கொண்டிருந்தால் மேற்கொண்டு அசம்பாவிதம்தான் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் குரல்கள் கேட்கின்றன. இது ஒருபக்கம் இருக்க சங்கீதா மற்றும் விஜய் தொடர்பான பழைய வீடியோக்களும் இப்போது சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு விஜய் கொடுத்த ஒரு பேட்டியில், "சங்கீதாவை திருமணம் செய்துகொள்கிறாயா என அப்பாவும், அம்மாவும் கேட்டார்கள்.
சூப்பர் ஃபீலிங்: நான் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டேன். லண்டனுக்கு சென்று இரண்டு வீட்டிலும் சிம்ப்பிளாக பேசி முடித்தோம். அவர் நன்றாக படித்த பெண். திருமணத்துக்கு பிறகு அவரு மீது எனக்கு காதல் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அது உண்மையிலேயே சூப்பர் ஃபீலிங்" என்றிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ, இவ்வளவு நல்ல ஃபீலிங்கோடு இருந்துவிட்டு ஏன் இந்த பிரிதல் எல்லாம்; தயவு செய்து மீண்டும் அண்ணியோடு சேர்ந்துவிடுங்கள் என்று ஏக்கத்தோடு சொல்கிறார்கள் தவெகவினர். விஜய்யின் கையில் முடிவு..


Click it and Unblock the Notifications















