அப்படியே சங்கீதா மாதிரி.. நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம்.. எப்போதும் மனைவி நியாபகமா?

சென்னை: விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி; தனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார் சங்கீதா. ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில்; ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கான நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் விஜய் ஆஜராவாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப் பிரச்னைகளை எல்லாம் தாண்டி தேர்தலில் வென்றுவிட முனைப்பில் இருக்கிறார்கள் தவெகவினர்.

தமிழீழத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சங்கீதா. அவரது தந்தை லண்டனில் செட்டில் ஆகிவிட; அங்கேயே பிறந்து பெரிய படிப்பை படித்தவர். அந்த சமயத்தில் விஜய்யின் ரசிகையாக மாறிய அவர்; ஒருகட்டத்தில் அவரை சந்திப்பதற்காக லண்டனிலிருந்து சென்னை வந்தார். அப்படி வரும்போது எஸ்.ஏ.சிக்கும், ஷோபாவுக்கும் பிடித்துப்போக; ஏற்கனவே சங்கீதா மனதுக்குள் விஜய் மீது காதல் மலர; திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு நடந்தது. ரசிகையையே மனைவியாக்கிய விஜய்யை பலரும் அந்த சமயத்தில் பாராட்டினார்கள்.

Throwback Vijay on Wife Sangeetha During Leo Shoot Viral Video Resurfaces Amid Divorce Row
Photo Credit:

விவாகரத்து கேட்ட சங்கீதா: ஒரு மகனையும், ஒரு மகளையும் அந்த ஜோடி பெற்றது. பிள்ளைகள் இரண்டு பேரும் 20 வயதை கடந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் கடந்த சில வருடங்களாகவே சங்கீதாவுக்கும், விஜய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. சுமூகமாக பிரிந்துவிடலாம் என சங்கீதா எடுத்த அத்தனை முயற்சிகளையும் விஜய் தட்டி கழித்து வந்திருக்கிறார். இதற்கு மேல் வேறு வழியில்லை என்பதை புரிந்துகொண்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்துவிட்டார்.

சங்கீதாவின் மனுக்கள்: முதலில் தாக்கல் செய்திருந்த ஒரு மனுவில், 'விஜய்க்கும் இன்னொரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது. அதை தட்டி கேட்டதால் என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். அவருக்கு மன நல பிரச்னை இருக்கிறது' என்றெல்லாம் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். விஜய்யோ அதெல்லாம் வொர்த் இல்லை என சொல்லி முடித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சங்கீதா தாக்கல் செய்த இன்னொரு மனுவில், 'தனக்கு சென்னையில் வீடு இல்லை. நீலாங்கரை பங்களாவுக்குள் என்னை தங்க விஜய் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

Also Read
அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. விஜய்யை அட்டாக் செய்த சிவகுமார்?.. சூர்யா அப்பா ஓபனா அடிச்சிட்டாரே
அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. விஜய்யை அட்டாக் செய்த சிவகுமார்?.. சூர்யா அப்பா ஓபனா அடிச்சிட்டாரே

டேமேஜ் ஆன இமேஜ்: சங்கீதாவின் இந்த மூவ்கள் எல்லாம் பெண்கள் மத்தியில் விஜய்க்கு இருந்த இமேஜை உடைத்து போட்டுவிட்டது. இருந்தாலும் அவர்கள் சப்போர்ட் செய்வதை நிறுத்தவில்லை என்பது கள எதார்த்தம். நிச்சயம் இத்தனை பிரச்னைகளை தாண்டியும் அவரை அரசியலில் வெல்ல வைத்திட வேண்டுமென்ற நோக்கத்தில் இருக்கிறார்கள் தவெகவினர். அதேசமயம் விஜய் மட்டும் இன்னும் ஸ்லீப்பிங் மோடிலேயே இருப்பதாக தோன்றுகிறது. அனைத்தையும் சரி செய்ய வேண்டுமென்றால் மீண்டும் சங்கீதாவுடன் சேர்ந்து வாழலாம் என்பது ஒரு வழி என பலரும் சொல்கிறார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: ஆனால் அதெல்லாம் விஜய் காதுகளில் விழுவதாக தெரியவில்லை. இந்நிலையில் அவர் மற்றும் சங்கீதா தொடர்பான பழைய வீடியோக்கள் எல்லாம் திடீரென ட்ரெண்டாகின்ற. அதை பார்த்து பலரும், இப்படி காதலோடு இருந்திருக்கிறார்கள். ஏன் இப்போ போய் டைவர்ஸ் செய்ய வேண்டும் எனவும் ஃபீல் செய்கிறார்கள். அந்தவகையில் தற்போது பிக்பாஸ் பிரபலமும், லியோ படத்தில் நடித்தவருமான ஜனனி பேசியிருக்கும் வீடியோ வைரலாகியிருக்கிறது.

ஜனனி பேட்டி: சில வருடங்களுக்கு முன்பு அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், "லியோ ஷூட்டிங்கின்போது எங்கே இருக்கிறீர்கள் என பேசிக்கொண்டிருந்தார். இலங்கை என சொன்னேன். அதற்கு அவர், எனது மனைவிகூட யாழ்ப்பாணம்தான் தெரியுமா என கேட்டார். தெரியும் சார் என சொன்னேன். அப்போது அவர், பேசுவதற்கு கதைத்தல் என்றுதானே சொல்வீர்கள். எனது மனைவியும், அவரது சகோதரியும் அப்படியே நீங்கள் பேசுவது மாதிரிதான் பேசுவார்கள் என கூறினார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X