நிச்சயதார்த்தம் முன்பு விஜய் கொடுத்த கிஃப்ட்.. சர்ப்ரைஸ்.. சங்கீதாவுக்கு எவ்வளவு ஹேப்பி பாருங்க

சென்னை: தமிழ் திரையுலகத்தில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது விஜய் - சங்கீதா விவகாரம். நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் தன்னுடைய கணவர் இருக்கிறார்; கடந்த ஐந்து வருடங்களாகவே உணர்வு ரீதியாக பிரிந்துதான் வாழ்கிறோம். எனவே எங்களுக்கு விவாகரத்து வழங்கிட வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் சங்கீதா. இந்த மனுவானது ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. அன்றைய தினம் விஜய் ஆஜராவாரா என கேள்வியும் எழுந்திருக்கிறது.

விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் 2026ஆம் ஆண்டை மறக்கவே முடியாது. ஒருபக்கம் அரசியல் பிரவேசம் செய்து இந்த வருடம் நடக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். அந்த சிறப்புக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக; அதையும் ஓரங்கட்டும் விதமாக சங்கீதா மாறிவிட்டார். கடந்த மாதத்தின் இறுதியில் விஜய் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து; விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் தலையாய குற்றச்சாட்டு, விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்பது.

Throwback Vijay s Wife Sangeetha Sornalingam on His Romantic Surprises Amid Divorce Row
Photo Credit:

திரிஷாவுடன் கவலையில்லாமல்: அனைவருமே அந்த நடிகை திரிஷாவாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்தான் விஜய்யோடு இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பொதுவெளியில் பகிர்ந்துவந்தார் என்றெல்லாம் ஆரூடம் கூறினார்கள். அந்த நிலைமையில்தான் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு கையில் பூங்கொத்துடன் திரிஷாவுடன் வந்திறங்கினார் விஜய். அப்போதிருந்து இந்தப் பிரச்னைக்குள் திரிஷாவும் நேரடியாக வந்துவிட்டார். அனைவருமே திரிஷாவுக்கு எதிரான கருத்தை பதிவு செய்துவருகிறார்கள்.

அடுத்த மாதம் தேர்தல்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. அதில் இந்த விஷயங்காள் எல்லாம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறதோ என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள் தவெக. ஆனாலும் அதை அவர்கள் வெளியே காட்டிக்கொள்வதில்லை. இது ஒருபக்கம் இருக்க விஜய்யும், சங்கீதாவும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதும் அவர்களது ஆசையாக இருக்கிறது. ஆனால் விஜய்க்கு அதில் உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. அப்படி யோசிப்பவராக இருந்தால் திரிஷாவுடன் கண்டிப்பாக பொதுவெளிக்கு வந்திருக்கமாட்டார்.

Also Read
ஏங்க அந்தப் பாட்டு எனக்குதான் பிடிக்கும்.. ரெய்னாவுக்கு இல்லை.. ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஓபனாக சொன்ன எம்.எஸ்.தோனி
ஏங்க அந்தப் பாட்டு எனக்குதான் பிடிக்கும்.. ரெய்னாவுக்கு இல்லை.. ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஓபனாக சொன்ன எம்.எஸ்.தோனி

ஜீவனாம்சம் கொடுப்பாரா?: அதேபோல் தனக்கு வாழ்நாள் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் சங்கீதா கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் அப்படி கோரினாலும் அவர் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகையை கொடுக்க முடியாது என்பது விஜய்யின் தரப்பாம். இதனாலும் இந்த விஷயம் இழுத்துக்கொண்டே செல்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆகமொத்தம் 20 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த இரண்டு பேர் இப்போது இழுபறியில் இருக்கிறார்கள். இதையெல்லாம் தவிர்த்துவிட்டு இரண்டு பேரும் சேரவே முடியாதா என்பது அனைவரது கேள்வி.

ட்ரெண்டாகும் பேட்டி: அவர்கள் சேர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தங்கள் பங்குக்கு; விஜய், சங்கீதா தொடர்பான பழைய வீடியோக்களை அதிகம் ஷேர் செய்துவருகிறார்கள். அந்தவகையில் பல வருடங்களுக்கு முன்பு சங்கீதா கொடுத்திருந்த ஒரு பேட்டியில், "எனக்கு முதன்முதலாக அவர் வைரத்தில் மோதிரம் வாங்கிக்கொடுத்தார். நிச்சயதார்த்தத்துக்கு முன்பு அது நடந்தது. அதற்கு பிறகு முக்கியமான நிகழ்வுகளுக்கு எல்லாம் தவறாமல் பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் செய்வார். நானும் பதிலுக்கு சர்ப்ரைஸ் செய்வேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X