விஜய்யை போய் எப்படி அப்படி?.. அதெல்லாம் முடியாது.. அடம் பிடித்த திரிஷா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: விஜய்யும், திரிஷாவும் கோலிவுட்டின் ஹிட் ரீல் ஜோடி ஆவார்கள். இதுவரை சேர்ந்து ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்கள். அப்போதே இரண்டு பேருக்குமிடையே ஏதோ ஒரு கனெக்ஷன் இருப்பதாக கிசுகிசுக்கள் பரவின. சூழல் இப்படி இருக்க சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த சில நாட்களிலேயே இவர்கள் இரண்டு பேரும் ஒரே கலரில் உடை அணிந்துகொண்டு வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

விஜய்யும், திரிஷாவும் சேர்ந்து கில்லி படத்தில் முதல்முறையாக நடித்தார்கள். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இரண்டு பேருக்குமிடையேயான கெமிஸ்ட்ரியும் அனைவராலும் கொண்டாடப்பட்டது. அதனையடுத்து ஆதி, திருப்பாச்சி, குருவி படங்களில் நடித்தார்கள். அவற்றில் திருப்பாச்சி மட்டும்தான் ஹிட். சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் காதலிக்கிறார்கள். அதனால்தான் தொடர்ந்து சேர்ந்து நடிக்கிறார்கள் என்றும் பேச்சுக்கள் கிளம்பின. அதுமட்டுமின்றி திரிஷாவுடன் சேர்ந்து நடிக்கக்கூடாது என சங்கீதாவும், எஸ்.ஏ.சியும் கண்டிஷன் போட்டதாகவும் ஒரு தகவல் வந்தது.

Throwback Vijay Trisha Controversy Sangeetha Divorce Buzz amp amp Thirupaachi Shooting Incident Explained
Photo Credit:

மீண்டும் சேர்ந்த ஜோடி: அதனால்தான் அவர்கள் பல வருடங்கள் சேர்ந்து நடிக்காமல் இருந்தார்கள் எனவும் ஒரு பேச்சு அப்போதைக்கு உண்டு. இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரும் தனித்தனியாக பாதையில் செல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் திரிஷா. அந்தப் படத்தில் லிப் லாக் காட்சிகள் எல்லாம் இருந்தன. படம் தோல்வியடைந்தாலும் இரண்டு பேரும் ஜோடி சேர்ந்து நடித்தது பெரிய கவனத்தை அந்தப் படத்தில் பெற்றது.

விவாகரத்து மனு: அப்போதிருந்துதான் இரண்டு பேருக்கும் இருந்த பழைய பழக்கம் மீண்டும் பற்றிக்கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாகத்தான் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி திரிஷாவைத்தான் அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார் என்றும் தெரிகிறது. அப்படி ஒரு குண்டை தூக்கி போட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்; விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக ஒரு திருமணத்துக்கு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்கள். விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். இந்த விஷயத்தில் அவருக்கு எதிராகத்தான் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

Also Read
ஸ்வர்ணமால்யாவை நியாபகம் இருக்கா?.. விஜய்யை நம்பினால் ஏமாற்றமாம்.. பட்டு பட்டுனு பேசிட்டாங்க
ஸ்வர்ணமால்யாவை நியாபகம் இருக்கா?.. விஜய்யை நம்பினால் ஏமாற்றமாம்.. பட்டு பட்டுனு பேசிட்டாங்க

திருப்பாச்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது: இந்நிலையில் திருப்பாச்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயம் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது அந்தப் படத்தில் விஜய்யை ஒரு சீனில், 'டேய் இங்க வாடா' என்று திரிஷா பேசுவார். அந்த சீனை எடுக்கும்போது விஜய்யை வாடா போடா என்று அழைக்கமாட்டேன். அவர் பெரிய ஹீரோ. அவரை போய் நான் எப்படி எல்லோரது முன்னிலையிலும் வாடா போடா என்று சொல்வது என கேட்டு நடிக்க மறுத்துவிட்டாராம். அதனையடுத்து இயக்குநர் பேரரசுவோ திரிஷாவை எப்படியோ சமாதானப்படுத்தி நடிக்க வைத்துவிட்டாராம்.

திரிஷாவின் படங்கள்: முன்னதாக, திரிஷா இப்போதும் பிஸியாகவே நடித்துவருகிறார். கடந்த வருடத்தில் மூன்று திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். இரண்டு படங்கள் அஜித்துடையது. ஒரு படம் கமலுடையது. ஆனால் படங்கள் தோல்வியைத்தான் சந்தித்தன. அடுத்ததாக அவர் சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். மே மாதத்தில் படம் ரிலீஸாகவுள்ளது. மேலும் சிரஞ்சீவியுடன் நடித்திருக்கும் விஸ்வம்பரா திரைப்படமும் இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என தெரிகிறது. அதேபோல் சினிமாவிலிருந்து விலகுவதாக வெளியான தகவலையும் திரிஷா திட்டவட்டமாக சமீபத்தில் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X