பெண்களை கவர்வதில் கெட்டிக்காரர்.. சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக விஜயகாந்த் இந்த வேலை செய்தாரா?

சென்னை: விஜயகாந்த் எப்படிப்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். விஜயகாந்த் மதுரையை சேர்ந்தவர். இவரின் அப்பா ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்தவர். சினிமாவில் நடிகராகவேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து வெற்றிக்கொடி நாட்டியவர் இவர். சென்னையில் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் ஒருகட்டத்தில் வாய்ப்புகளை பிடித்து முன்னேறியவர்.

பலருக்கும் உதவி செய்திருக்கிறார். பசியோடு இருந்த பலருக்கும் சாப்பாடு போட்டிருக்கிறார். விஜயகாந்த் அலுவலகத்திற்கு சென்றாலே உணவு கிடைக்கும் என்கிற நிலையையும் கேப்டன் உருவாக்கினார். செந்தூரப்பூவே படத்தில் இவருக்கு கேப்டன் வேடம். எனவே, படப்பிடிப்பில் எல்லோரும் அவரை கேப்டன் என அழைக்க அதன்பின் அவருக்கு பட்டம் போல ஆகிவிட்டது.

vijayakanth throwback

சினிமாவுக்கு வருவதற்கு முன் அப்பாவின் ரைஸ் மில்லை கவனித்துக்கொண்டிருந்தார். படிப்பையும் பாதியில் விட்டவர். இந்நிலையில்தான் விஜயகாந்த் பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியே தெரியவந்துள்ளது. திருவனந்தபுரத்தில் ஒரு ஷாம்பு கம்பெனியில் அவர் வேலை செய்தார் என அவரை பற்றி நன்றாக தெரிந்த ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பிரேம் நசீரின் ரசிகர்: திருவனந்தபுரத்தில் ஒரு தியேட்டரை நடத்தும் ஆர்.எஸ்.மோகன்தாஸ் என்பவர் ஊடகம் ஒன்றில் பேசியபோது 'அப்போதெல்லாம் திருவனந்தபுரத்தில் 3 தியேட்டர்களில் தமிழ் படங்களை திரையிடுவார்கள். விஜயகாந்த் அடிக்கடி படம் பார்க்க வருவார். மலையாள நடிகர் பிரேம் நசீரின் தீவிர ரசிகர் இவர். அவரின் படங்களை விஜயகாந்த் மிஸ் பண்ணவே மாட்டார்.

vijayakanth throwback

ஷாம்பு கம்பெனியில் வேலை: வெல்வெட் ஷாம்பு என்கிற கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக (sales representative) வேலை செய்யவே அவர் இந்த ஊருக்கு வந்தார். அதன்பின் ஒரு நகைக்கடையிலும் அவர் சேல்ஸ்மேனாக வேலை செய்தார். 1970 முதல் அவரை எனக்கு தெரியும். அவர் பிரபலமான நடிகரான பின்னரும் சில சமயம் படப்பிடிப்புக்கு கேரளா வரும்போது இந்த தியேட்டருக்கு வருவார். அவரிடம் பெரிய நடிகர் என்கிற எந்த பந்தாவும் இருக்காது. மிகவும் எளிமையாக பழகுவார்' என அவர் பகிர்ந்து கொண்டர்.

vijayakanth throwback

விஜயகாந்த் மகன் படம் வருது: சினிமாவுக்கு வருவதற்கு முன் விஜயகாந்த் திருவனந்தபுரத்தில் ஒரு ஷாம்பு கம்பெனி மற்றும் நகைக்கடையில் வேலை செய்துள்ளார் என்பது நிச்சயம் ஆச்சர்யமான செய்திதான். விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆனாலும் அவரது நினைவுகள் என்றும் தமிழக மக்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மனங்களில் மறையாமல் நீடித்து வாழும். வரும் பொங்கலுக்கு விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்ட் கோட் படத்திலும், லப்பர் பந்து படத்திலும் விஜயகாந்த் ரெஃபரன்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X