HBD Dhanush - செம மூச்சு போட்ட சிவகார்த்திகேயன்.. ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட தனுஷ்.. என்ன ஆச்சு?
சென்னை: தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான குபேரா திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இவை தவிர்த்து இன்னும் சில இயக்குநர்கள் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் அவர். இந்நிலையில் அவர் இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
இந்தியாவிலேயே சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு, பாடல்கள் பாடுவது, எழுதுவது என படுபிஸியாக இருக்கும் அவருக்கு; கடந்த சில வருடங்களாகவே சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி படம் எதுவும் அமையவில்லை. கடைசியாக வெளியான குபேரா, ராயன், கேப்டன் மில்லர் ஆகிய மூன்று படங்களுமே சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றன.
இயக்கிய படங்களும் தோல்வி: சரி தனுஷ் நடித்த படங்கள்தான் மண்ணை கவ்வுகின்றன இயக்கும் படங்களாவது வெற்றி பெறும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், ராயன் என அவர் இயக்கிய படங்களும் தோல்வியடைந்திருக்கின்றன. இதன் காரணமாக எப்படியாவது அவர் கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அடுத்த படங்கள்: அடுத்ததாக அவரது நடிப்பில் இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக வரவிருக்கின்றன. அவரை வைத்து அடுத்ததாக இயக்கப்போகும் இயக்குநர்கள் அனைவருமே மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர்கள். எனவே இந்தப் படங்கள் அனைத்துமே தரமான செய்கை செய்யும் என எதிர்பார்க்கலாம்.
உதவிய தனுஷ்: இது ஒருபக்கம் இருக்க இன்று சிவகார்த்திகேயன் திரைத்துறையில் இருப்பதற்கு காரணம் அவரது திறமைதான் என்றாலும்; அந்தத் திறமைக்கு வாய்ப்பு கொடுத்தது தனுஷ்தான். இரண்டு பேரும் உடன் பிறவா சகோதரர்களாகவே பழகிவந்தார்கள். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டதாக ஒரு தகவல் ஓடியது. கொட்டுக்காளி பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில்கூட சிவா பேசியது தனுஷை தாக்கித்தான் எனவும் முணுமுணுப்புகள் எழுந்தன. எனவே தனுஷின் ரசிகர்கள் பலர் எஸ்கேவுக்கு எதிரான மனப்பான்மையில் இருந்துவருகிறார்கள்.
தனுஷ் செய்தது: இந்நிலையில் தனுஷ் - சிவகார்த்திகேயன் தொடர்பான பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறத். அதாவது சில வருடங்களுக்கு முன்பு தனுஷும், அனிருத்தும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். அப்போது அவர் தனுஷிடம், 'நீங்கள் நடிக்கும் படங்களில் இருக்கும் ஹீரோயின்களின் கேரக்டர் பெயர்கள் ஹிட்டாகிவிடுகின்றன' என சொல்லி; காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் சோனியா அகர்வாலிடம் பேசிய வசனத்தை தனுஷின் வாய்ஸிலேயே பேசி காட்டினார்.
மேலும் பேசி முடித்த பிறகு அடுத்தப் படத்துக்கு யார் ஹீரோயின் என்று கேட்டார். அதற்கு தனுஷோ, 'அடுத்த படத்தில் யார் ஹீரோயின் என்று தெரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதானே'.. யார் ஹீரோயின் என்று ஒரு வார்த்தையில் கேட்டிருந்தால் சொல்லிவிடப்போகிறேன். அதற்கு ஏன் இவ்வளவு ஃபெர்பார்ம் செய்ய வேண்டும் என கூறினார். இவ்வீடியோவை பார்த்த தனுஷ் ரசிகர்களோ இதனை அதிகம் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











