அந்த சூப்பர் ஸ்டாருக்கு ஆசை காதலி.. திருமணமான பின்னரும் ரகசிய உறவு.. 2 பெண் குழந்தைகள் வேற!

சென்னை: நடிகர்கள் இந்த காலத்தில் தான் ரகசிய உறவுகள் வைத்திருப்பதும் அடிக்கடி விவாகரத்து செய்து இன்னொருவரை மணப்பதும் என்கிற கதையெல்லாம் இல்லை. அந்த காலத்தில் சினிமா ஆரம்பமான போதே இதை விட பல திடுக்கிடும் கதைகள் எல்லாம் நடந்துள்ளன. பிரபல சூப்பர் ஸ்டார் நடிகராக காதல் மன்னனாக வலம் வந்த நடிகருக்கு ஆசை நாயகியாக இருந்த நடிகையை பற்றிய கதையைத் தான் இங்கே ரீவைண்ட் செய்து பார்க்கப் போகிறோம்.

அதிலும் அந்த நடிகை திருமணமான பின்னர் நடிகருடன் ரகசிய உறவில் ஈடுபட்டு இரு பெண் குழந்தைகளை திருமணம் செய்துக் கொள்ளாமலே அந்த நடிகருடன் பெற்றுக் கொண்டாராம்.

Tragedy: Meet popular actress who failed in her marriage life and fell in love with Superstar actor

யார் அந்த நடிகை?: 1997ம் ஆண்டு வெளியான காமசூத்ரா படத்தில் நடித்து இந்திய சினிமாவையே மிரள வைத்த பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் அம்மா புஷ்பவல்லி தான் அந்த நடிகை. 1926ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அப்போது சென்னை மாகாணமாகவும் அதன் பின்னர் ஆந்திர மாநிலமாக மாறிய பென்டபடு எனும் இடத்தில் பிறந்தவர் தான் புஷ்பவல்லி. சினிமாவில் அவர் நடிக்க வேண்டும் என சில பிரபலங்களே நேரில் அழைக்க நடிக்க ஒத்துக் கொண்டவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தமிழில் சில படங்களிலும் நடித்து கலக்கியவர்.

2 முறை திருமணம்: 1936ம் ஆண்டு வெளியான சம்பூர்ண ராமாயணம் படத்தில் குழந்தை சீதாவாக நடித்தார் புஷ்பவல்லி. சிறு வயதில் இருந்தே சினிமா தான். முதல் படத்திலே குழந்தை நட்சத்திரமாக நடித்த அவருக்கு 300 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. பெயரும் புகழும் நிறைந்த நிலையில், ரங்காச்சாரி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், கே. பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அந்த திருமணமும் அவருக்கு வெகு நாட்கள் நிலைக்கவில்லை.

ஜெமினி கணேசனின் ஆசை காதலி: 1940ம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்ற நிலையில், 6 ஆண்டுகளில் அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. தெலுங்கில் துணை நடிகையாக புஷ்பவல்லி நடித்த பால நாகம்மா படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. மிஸ் மாலினி படத்தில் தான் முதன் முறையாக ஜெமினி கணேசன் உடன் இணைந்து நடித்தார். அந்த படம் படுதோல்வியை சந்தித்தாலும் இவர்களின் காதல் மலர அந்த படம் மிகப்பெரிய வாய்ப்பாக மாறியது.

திருமணத்தில் இஷ்டமில்லை: ஏற்கனவே திருமணம் எல்லாம் செய்து குழந்தைகள் பெற்றும் கணவர் கைவிட்ட நிலையில், ஜெமினி கணேசனை திருமணம் செய்து கொள்ள புஷ்பவல்லி விரும்பவில்லை. அதே போல ஜெமினிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில், இவருடன் ரகசிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். சாவித்ரி கதை அது தனிக்கதை. ஜெமினியும் புஷ்பவல்லியும் சேர்ந்து பெற்ற குழந்தைகளில் ஒருவர் தான் நடிகை ரேகா. இன்னொரு மகளின் பெயர் ராதா.

Tragedy: Meet popular actress who failed in her marriage life and fell in love with Superstar actor

அம்மாவை போலவே கஷ்டம்: 12 வயதிலேயே தனது மகள் ரேகாவை நடிகையாக்கி அழகு பார்த்தார் புஷ்பவல்லி. தெலுங்கு படமான ரங்குல ரட்டினம் தான் முதல் படம். 15 வயதில் பாலிவுட் படத்தில் ரேகா அறிமுகமானார். அம்மாவை விட மிகப்பெரிய பாலிவுட் நட்சத்திரமாக ஜொலித்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஆனால், அவரது அம்மாவை போலவே அவருக்கும் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. 1990ம் ஆண்டு முகேஷ் அகர்வால் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ரேகா அதே ஆண்டு கணவரை பிரிந்தார். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்திய ரேகா 69வது வயதிலும் யாருமே இல்லாமல் தனி மரமாக வாடி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X