Trisha Birthday - த்ரிஷா பிறந்தநாள் - அவரது நிறைவேறாத ஆசை இதுதானாம்.. என்ன விபரீத ஆசையா இருக்கு
சென்னை: Trisha Birthday (த்ரிஷா பிறந்தநாள்) நடிகை த்ரிஷா இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவரது ஆசை ஒன்று குறித்து தெரியவந்திருக்கிறது.
மாடலிங்கில் நுழைந்து மிஸ் சென்னை பட்டம் வென்றதன் மூலமாக பிரபலமானவர் த்ரிஷா. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் லேசா லேசா படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் வெளியாவதற்குள் மௌனம் பேசியதே படத்தில் கமிட்டாகிவிட்டார் த்ரிஷா. எனவே அவர் கமிட்டான முதல் படம் லேசா லேசா ஆனால் முதலில் ரிலீஸான படம் மௌனம் பேசியதே ஆகும்.

சினிமாவுக்குள் வரவே மாட்டேன்: மாடலிங்கில் இருக்கும்போது பேட்டி ஒன்று கொடுத்திருந்த த்ரிஷா சினிமாவுக்குள் நான் வரவே மாட்டேன். அது எனக்கான இடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஆனால் கால சூழ்நிலையாலும், அவரது விருப்பத்தில் மாற்றம் ஏற்பட்டதாலும் சினிமாவுக்குள் வந்துவிட்டார். அப்படி வந்து அவர் நடித்த மௌனம் பேசியதே படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையுமே ஆச்சரியப்படுத்தினார் த்ரிஷா. இவரா சினிமாவுக்குள் வரமாட்டேன் என கூறினார் என்று பலரும் பேசினர்.
கனவுக்கன்னியாக மாறிய த்ரிஷா: அதனையடுத்து விஜய், அஜித், சூர்யா என பலருடன் ஜோடி போட்டார். குறிப்பாக, 2004ஆம் ஆண்டு விஜய்யுடன் கில்லி படத்தில் நடித்தார். தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்திலிருந்து த்ரிஷா ரசிகர்களின் மனதை கவர்ந்த கனவுக்கன்னியாக ராஜபாட்டை நடத்த ஆரம்பித்தார். அதேபோல், கோலிவுட் திரையில் ஃபேவரைட் ஜோடியாகவும் விஜய் - த்ரிஷா ஜோடி மாறியது.

தமிழ் மட்டுமில்லை பிற மொழிகளிலும்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த த்ரிஷா ஹிந்தியிலும் கால் வைத்தார். ஆனால் அங்கு அவரால் நிலைக்க முடியவில்லை. ஹிந்தியில் நிலைக்க முடியாவிட்டாலும் தென்னிந்திய மொழிகளில் அவருக்கான மார்க்கெட் இன்னமும் அப்படியே இருப்பது பலரையும் இன்னமும் ஆச்சரியப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குந்தவையாக கலக்கிய த்ரிஷா: அதற்கு உதாரணமாக சமீபத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தை சொல்லலாம். குந்தவை கதாபாத்திரத்தை மணிரத்னம் த்ரிஷாவிடம் கொடுத்ததன் மூலமாகவே தமிழ் சினிமாவில் த்ரிஷா இன்னமும் லைம் லைட்டில்தான் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். வெறும் அழகு மட்டுமின்றி குந்தவையாக த்ரிஷாவின் நடிப்பு படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது. அடுத்ததாக விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துவருகிறார் த்ரிஷா.

த்ரிஷா பிறந்தநாள்: இந்நிலையில் த்ரிஷா இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவரது ஆசைப்பட்ட விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. சில படங்களில் நடித்த பிறகு அவர் கொடுத்த பேட்டியில் ஆண்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த த்ரிஷா, " எல்லோரும் சொல்வார்கள் பெண்களை புரிந்துகொள்வது கஷ்டம் என்று. ஆனால் ஆண்களைத்தான் புரிந்துகொள்ளவே முடியாது. அவர்கள் ஒருமாதிரி நடிப்பார்கள். ஆனால் உள்ளே ஒன்று நினைத்திருப்பார்கள்.
எனக்கு ஆண் நண்பர்கள் அதிகம்: எனக்கு ஆண் நண்பர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் ஆண்களை காயப்படுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை. எனக்கு ஒரு ஆசை இருக்கிறது ஒரு நாளாவது நான் ஆணாக பிறந்திருக்க வேண்டும். நான் என் அம்மாவிடமும் சொல்லியிருக்கிறேன் ஒரு நாளாவது ஆணாக இருக்க வேண்டும் என்று. அதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. ஒரு ஆணாக, மனநிலை, உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை உணர வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்" என்றார்.
அவரது இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள் த்ரிஷாவின் ஆசை வித்தியாசமாகவும் இருக்கிறது., அதேசமயம் விபரீதமாகவும் இருக்கிறது என கூறி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











