எனக்கு அதில் ஆர்வம் இல்லை.. திரிஷாதான் என்னுடைய லக்கி.. விஜய் ஓபனா சொல்லிட்டாரே ப்பா!

சென்னை: விஜய் நடிப்பில் தற்போது தளபதி 69 படம் உருவாகிவருகிறது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இதன் காரணமாக தற்போது நடித்துவரும் படத்துக்கு பிறகு நடிக்கப்போவதில்லை என்கிற அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஜய். அதற்கு பிறகு படிப்படியாக தனது திறமையை வளர்த்து, தானும் வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உயர்ந்து நிற்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான GOAT, லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய நான்கு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றன. அதேசமயம் அந்தப் படங்கள் அனைத்துமே அசால்ட்டாக 200 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக படத்தை தயாரித்த நிறுவனங்கள் அறிவித்தன.

throwback stories vijay trisha

அரசியல் கட்சி: சூழல் இப்படி இருக்க தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடாவிட்டலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக களமிறங்கவிருக்கிறது. எப்படியாவது விஜய்யை வெற்றி பெறவைத்து கோட்டைக்குள் அனுப்பிட வேண்டும்; சினிமாவில் எப்படி விஜய்யின் தாக்கம் பெரிதோ அதேபோல் அரசியலிலும் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும், தொண்டர்களும் விருப்பப்படுகிறார்கள்.

பரபர பரந்தூர்: அரசியல் கட்சி ஆரம்பித்திலிருந்து திமுகவை கடுமையாக எதிர்த்துவருகிறார் விஜய். அதற்கு திமுகவினரும் தக்க பதிலடியை கொடுத்துவருகிறார்கள். முக்கியமாக களத்துக்கு சென்று மக்களை விஜய் சந்திப்பதே இல்லை என்று கூறினார்கள். அதற்கு முடிவுக்கட்டும் விதமாக சமீபத்தில் பரந்தூருக்கு சென்று அங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் மக்களை சந்தித்து பேசினார். அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலுக்கும் அவர் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த விமர்சனம்: இதற்கிடையே விஜய்யை இன்னொரு விஷயத்திலும் எதிர்தரப்பினர் விமர்சனம் வைத்துவருகிறார்கள். மேலும் கிசுகிசுக்களும் கிளம்புகின்றன. அதாவது திரிஷாவால்தான் விஜய் தனது மனைவியை பிரிந்திருக்கிறார் என்பதுதான் அது. ஆனால் இரண்டு பேருமே அதுகுறித்து மௌனம் காக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்புகூட ஒரு தகவல் வெளியானது. அதன்படி திரிஷா சினிமாவிலிருந்து விலகப்போகிறார் என்று கூறப்பட்டது. உடனே ஒருதரப்பினரோ, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில்தான் திரிஷா இணைவார் என்று கிசுகிசுத்தார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

விஜய்யின் பழைய பேட்டி: ஆனால் விஜய்யையும், திரிஷாவையும் இணைத்து வேண்டுமென்றே பேசுகிறார்கள். அவதூறு பரப்புகிறார்கள் என விஜய்யின் தொண்டர்கள் கூறுவதுண்டு. இந்நிலையில் விஜய் திருப்பாச்சி பட சமயத்தில் அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நடிக்க வேண்டும் என்பது என்னுடைய சுய ஆர்வம்தான். படிப்பில் எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. அதனால் நடிக்க வந்தேன். சினிமாவில் என்னுடைய லக்கி ஜோடி என்றால் திரிஷாதான். நாங்கள் நடித்த கில்லி படம்தான் அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கியது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X