அது நடந்தால் கண்டிப்பாக விலகிவிடுவேன்.. திரிஷா ஓபன் டாக்.. செம உறுதியா இருக்காங்களே

சென்னை: திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். நயன்தாராவுக்கும் இப்போது பெரிய அளவில் மார்க்கெட் இல்லை. அதனையடுத்து அவ்விடத்தை திரிஷா பிடித்துவிட்டதாகவே திரைத்துறையில் கருதப்படுகிறது. கடந்த வருடத்தில் அவர் நடிப்பில் மூன்று படங்கள் வந்தன. இந்த வருடத்தில் தமிழிலும், தெலுங்கிலும் தலா ஒரு படம் வரவிருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய்யுடன் அவர் ஜோடியாக வந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மிஸ் சென்னை பட்டம் வென்று அதன் பிறகு சினிமாவுக்கு வந்தவர் திரிஷா. லேசா லேசா படத்தில் அவர் முதலில் கமிட்டானாலும்; மௌனம் பேசியதே திரைப்படம்தான் முதலில் வெளியானது. அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் அமைந்து; அவை ஹிட்டாகவும் செய்தன. தமிழில் என்ன மாதிரியான வெற்றிகளை பார்த்தாரோ அதே மாதிரி தெலுங்கு திரையுலகத்திலும் பார்த்தார். இதன் காரணமாக கோலிவுட், டோலிவுட்டில் அவரது கொடி உயர பறந்தது.

Trisha Krishnan s Throwback Interview on Marriage Goes Viral Amid Vijay Controversy
Photo Credit:

சின்ன சறுக்கல்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவரது கரியர் திடீரென சறுக்கலை சந்தித்தது. இதனால் அவர் இனிமேல் அவ்வளவுதான் என பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் 96 படத்தின் மூலம் தரமான ரீ என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன், ராங்கி, விடாமுயர்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படத்திலும் நடித்திருக்கிறார். இரண்டு படங்களும் இந்த வருடம் வரவிருக்கின்றன.

சர்ச்சையில் திரிஷா: இப்படி அவரது கரியர் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் விஜய்யுடன் ஒரே காரில் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது பெரிய பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாகவே இருந்துவருகிறார். ஆனால் அவரது மௌனம் பல சந்தேகங்களுக்கு வழி வகுக்கின்றன; எனவே இந்த விவகாரத்தில் என்னதான் உண்மை என்பதை அவர் விளக்க வேண்டும் என விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்துவருகிறார்கள்.

Also Read
திரிஷா - விஜய் மேட்சிங் ட்ரெஸ் பஞ்சாயத்து.. கொடூரமான செயல்.. ஏற்க முடியாது.. கொந்தளித்த ஆர்த்தி ரவி
திரிஷா - விஜய் மேட்சிங் ட்ரெஸ் பஞ்சாயத்து.. கொடூரமான செயல்.. ஏற்க முடியாது.. கொந்தளித்த ஆர்த்தி ரவி

ட்ரெண்டாகும் திரிஷாவின் பேட்டி: இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவர் கொடுத்த பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "நான் திருமணம் செய்யவிருந்த நபர் சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என கூறினார். ஆனால் நடிப்பை விட்டுவிடுவதற்கு பதிலாக; நான் அந்தத் திருமணத்தை விட்டுவிட்டேன். அதனால்தான் என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. நான் கர்ப்பமானால் மட்டுமே சினிமாவில் நடிப்பதை நிறுத்துவேன்" என்றார்.

நிச்சயதார்த்தம்வரை சென்ற திரிஷா: முன்னதாக நடிகை திரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் குடும்பத்தினரும், பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். ஆனால் அந்த நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லவில்லை. அதற்கு பிறகு நடிகர் ராணாவுடன் திரிஷாவுக்கு காதல் என்றும்; அதுவும் நிறைவேறவில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை திரிஷாவோ, ராணாவோ எங்கும் உறுதி செய்யவில்லை. இப்போதுவரை திரிஷா சிங்கிளாகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X