காலை முதல் ராத்திரிவரை.. குற்ற உணர்வாக இருக்கும்.. அந்த நடிகர் பற்றி திரிஷா ஓபன் டாக்

சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் பிருந்தா என்ற வெப் சீரிஸ் வெளியானது. மேலும் GOAT படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார். இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ஒரு நடிகை சினிமாவில் 10 வருடங்கள் தொடர்ந்து டாப் 5 இடங்களுக்குள் இருப்பது பெரிய விஷயம். ஆனால் திரிஷாவோ ஏறத்தாழ 20 வருடங்களுக்கும் மேலாக டாப் பொசிஷனிலேயே இருக்கிறார். லேசா லேசா படத்தில் நடிக்க முதலில் கமிட்டாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானார் அவர். முதல் படத்திலேயே அவரது நடிப்பு, அழகும் ரசிகர்களையும் கோலிவுட் இயக்குநர்களையும் அவர் பக்கம் திருப்பியது. அதன் காரணமாக வரிசையாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.

throwback stories trisha mahesh babu

தொடர்ந்து டாப் ஹீரோயின்: அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் தமிழில் ஜோடி போட்டுவிட்டார் திரிஷா. முக்கியமாக விஜய்யுடன் அவர் நடித்த கில்லி, விக்ரமுடன் அவர் நடித்த சாம் உள்ளிட்ட திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன. இதனால் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் அவர். தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.

சின்ன சறுக்கல்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவருக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் சில படங்களில் நடித்துக்கொண்டுதான் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் 96 திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் ஹிட்டாக திரிஷா ஜானுவாக கொண்டாடப்பட்டார். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் 2 பாகங்கள், லியோ, ராங்கி என வரிசையாக படங்களில் நடித்து மீண்டும் பிஸியாகிவிட்டார்.

அடுத்தடுத்த படங்கள்: தற்போது அவர் கைவசம் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்கள் இருக்கின்றன. மேலும் ஹிந்தியிலும் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கடைசியாக அவரது நடிப்பில் பிருந்தா வெப் சீரிஸ் வெளியானது. மேலும் GOAT படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சென்சேஷலும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் திரிஷாவின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

திரிஷாவின் பேட்டி: அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், "எனக்கு மகேஷ் பாபு நல்ல நண்பர். அவருடன் இணைந்து சில படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர். தன்னுடன் யார் பணியாற்றினாலும் அவர்களை மரியாதையாக நடத்துவார், மரியாதையுடன் பழகுவார். அதேபோல் கடினமாக உழைக்கவும் செய்வார் அவர். ஷூட்டிங் என்றால் காலை முதல் நைட்வரை ஷூட்டிங்கில்தான் இருப்பார். பிரேக்கில்கூட கேரவனுக்கு செல்லமாட்டார். அப்படி உழைப்பார். அதனைப் பார்த்தால் எனக்கு குற்ற உணர்வாக இருக்கும். அதேபோல் யார் நடித்திருந்தாலும் அவர்கள் நடித்திருப்பதை மானிட்டர் முன்பு அமர்ந்து பார்ப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X