Trisha: நைட் ரொமான்ஸ் சீன் ஷூட்டிங்... ‘ஆனால் நானும் விஜய்யும் ஒன்னா தூங்கிட்டோம்’: த்ரிஷா ஓபன்

சென்னை: கோலிவுட் க்யூட் ஜோடியான விஜய்யும் த்ரிஷாவும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு லியோ படத்தில் இணைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக த்ரிஷா நடித்த பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், விஜய்யுடன் கிளாமர் காட்சிகளில் நடித்த அனுபவத்தை த்ரிஷா மனம் திறந்து கூறியுள்ளார்.

 Trisha recalls sleeping with Vijay in the romance scene of Gilli film

த்ரிஷா சொன்ன டாப் சீக்ரெட்: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இருவரும் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் லியோ படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் ஃபேவரைட் ஹீரோயின் என்றால் அது த்ரிஷா தான் என ரசிகர்களே சொல்வதுண்டு. அந்தளவுக்கு இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி செம்ம பக்காவாக செட்டாகும்.

அதேபோல், விஜய் - த்ரிஷா இணைந்த முதல் படம் கில்லி. 2004ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை தரணி இயக்கியிருந்தார். விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, தாமு உள்ளிட்ட பலர் நடித்த கில்லி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் விஜய்யுடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்தது குறித்து நடிகை த்ரிஷா மனம் திறந்துள்ளார்.

 Trisha recalls sleeping with Vijay in the romance scene of Gilli film

அதில், கிளாமர் என்பது கவர்ச்சியோ அல்லது செக்ஸியோ மட்டும் கிடையாது. நான் கிளாமர் காட்சிகளில் நடிப்பதற்காக ரொம்ப யோசிக்க மாட்டேன். ஆனால், கில்லி படத்தில் வரும் கலங்கரை விளக்கம் காட்சியில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அந்த சீன் நள்ளிரவு 2 மணிக்கு எடுக்கலாம் என இயக்குநர் தரணி கூறிவிட்டார். ஆனால் எனக்கும் விஜய்க்கும் நல்ல தூக்கம் வந்துவிட்டது.

அதனால் அந்தக் காட்சி எடுக்கும் போது இரண்டு பேருமே நல்லா தூங்குமூஞ்சாக இருந்தோம். இயக்குநர் தரணி எங்களிடம் வந்து ஐயோ இது ரொமான்ஸ் சீன்... அது தெரியாம ரெண்டு பேரும் இப்படி தூங்கிட்டிங்ளேன்னு சொல்லி கிண்டல் செய்தார். அந்த சீனுக்காக 15 மணி நேரமா ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க, எங்களுக்கு ரொம்ப டையர்டு ஆகிடுச்சு. ஆனால், அந்த சீனை திரையில் பார்க்க ரொம்ப அழகா இருக்கும்.

 Trisha recalls sleeping with Vijay in the romance scene of Gilli film

அதனால் நடிப்பவர்களுக்கு தான் தெரியும், ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்பது. ஆனாலும் கதைக்கு தேவையென்றால் அப்படியான காட்சிகளில் நடித்துதான் ஆக வேண்டும் என த்ரிஷா கூறியுள்ளார். கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் கார்த்தி - த்ரிஷா இடையேயான ரொமான்ஸ் காட்சி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல், சாமி, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களிலும் த்ரிஷாவின் ரொமான்ஸ் காட்சிகள் ரொம்பவே பிரபலமானது. இந்நிலையில், கிளாமர் காட்சிகளிலும் ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிப்பது குறித்து த்ரிஷா மனம் திறந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X