திரிஷா பற்றி பல தெரியாத விஷயங்களை சொன்ன டீச்சர்.. அதுவும் விஜய் அம்மாவுக்கு முன்.. என்ன நடந்தது?

சென்னை: கோலிவுட்டில் டாப் நடிகைகளில் ஒருவரான திரிஷா இப்போதும் பிஸியாக நடித்துவருகிறார். ஆனால் அவர் சினிமாவிலிருந்து விலகவிருப்பதாக ஒரு தகவல் சில நாட்களாக ஓடியது. அதனை திட்டவட்டமாக மறுத்தார் திரிஷா. அடுத்ததாக அவர் நடிப்பில் கருப்பு, விஸ்வம்பரா உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. கடந்த வருடமும் அவரது நடிப்பில் மொத்தம் மூன்று திரைப்படங்கள் வெளியாகின. அவை எதுவும் பெரிய ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவுக்கு அவரது கரியரில் திடீரென சறுக்கல் ஏற்பட்டது. மேலும் இளம் ஹீரோயின்களும் கோலிவுட்டில் படையெடுக்க ஆரம்பித்தார்கள். எனவே இனிமேல் அவருக்கு மார்க்கெட்டே இருக்காது. அவரது சகாப்தம் முடிந்துவிட்டது என்று சிலர் பேசினார்கள். ஆனால் அவரோ 96 படத்தின் மூலம் தரமான ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரை ஏற்றிருந்தார். அது அனைவரிடமும் வரவேற்பை பெற்று அவருக்கான கிராஃபை மீண்டும் உச்சம் சென்றது.

Trisha s Viral School Throwback Video Trends Amid Vijay Rumours and Career Buzz
Photo Credit:

ஒரே வருடத்தில் மூன்று படங்கள்: அதன்படி கடந்த வருடத்தில் மட்டும் மொத்தம் மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தார். மூன்றுமே பெரிய ஹீரோக்கள் படங்கள்தான். இரண்டு படங்கள் அஜித்துடன், ஒரு படம் கமல்ஹாசனுடன். ஆனால் அந்தப் படங்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை. ஒன்று படுதோல்வியை சந்தித்தன. இன்னொரு படம் சுமார் வரவேற்பை பெற்றன. அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்திலும், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படத்திலும் நடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

Also Read
ரஜினியின் தலைவர் 173.. அப்போ சுந்தர்.சி வெளியேறினார்.. இப்போ சிபி சக்கரவர்த்தியா?.. இயக்குநர் யார்?
ரஜினியின் தலைவர் 173.. அப்போ சுந்தர்.சி வெளியேறினார்.. இப்போ சிபி சக்கரவர்த்தியா?.. இயக்குநர் யார்?

விஜய்யுடன் கிசுகிசு: இப்படி அவரது கரியர் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த மாதத்தில் நடந்த ஒரு விஷயம் அவரை சுற்றி சர்ச்சை வளையத்தை உண்டு செய்துவிட்டது. அதாவது விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட சில நாட்களிலேயே இவர்கள் இரண்டு பேரும் மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஏஜிஎஸ் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டார்கள். அது மிகப்பெரிய விவாதமானது. விஜய்யும், திரிஷாவும் காதலிக்கிறார்கள் என்றும் பேச்சுக்கள் அதிகம் கிளம்ப ஆரம்பித்திருக்கின்றன.

திரிஷாவின் அமைதி: ஆனால் திரிஷாவோ இந்த விஷயத்தில் ஆழ்ந்த அமைதியையே பதிலாக கொடுத்துவருகிறார். அண்மையில்கூட அவரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி கேட்டார்கள். எப்படியாவது பதில் வாங்கிவிட அவர்களும் எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் திரிஷாவின் மௌனத்தை அவர்களால் கலைக்க முடியவில்லை. இந்நிலையில் திரிஷா பற்றி அவரது வகுப்பு ஆசிரியை பல விஷயங்களை சில வருடங்களுக்கு முன்பு பிஹைண்ட்வுட்ஸ் நடத்திய விழாவில் ஷேர் செய்துகொண்ட வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

டீச்சர் பேசியது: அந்த ஆசிரியை பேசுகையில், "திரிஷாவை பள்ளி கேட்டில் விட்டுவிட்டு அவரது அம்மா அங்கேயே நின்றுகொண்டிருப்பார். மகள் வகுப்புக்குள் போன பிறகுதான் அவர் போவார். இன்று இந்தப் பெண் இந்த மேடையில் நிற்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் அவரது அம்மாதான். திரிஷா பள்ளியில் ஃபீல்டு ஸ்போர்ட்ஸில் அட்டகாசமாக பிரகாசித்தார். நல்ல ஹை ஜம்ப் பிளேயர். துஷ் புஷ்ஷு என்று பேசிக்கொண்டிருந்த இவர் எப்படி குந்தவை கேரக்டரை சரியாக செய்யப்போகிறார். தூய தமிழ் எல்லாம் பேச வேண்டுமே என யோசித்தேன். ஆனால் படத்தில் இவர் பின்னி எடுத்துவிட்டார்" என்றார். இந்த விழாவில் விஜய்யின் அம்மா ஷோபாவும் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X