திரிஷா செய்வது எல்லாம் ட்ராமா.. ரம்யா கிருஷ்ணன் இப்படி சொல்லிருக்காரே.. இவ்வளவு விவரமா?

சென்னை: நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த இரண்டு தசாப்தங்களாக ஜொலித்துவருகிறார். இப்போதுகூட அவரது கைகளில் கருப்பு, விஸ்வம்பரா ஆகிய படங்கள் இருக்கின்றன. ஒரு படம் மே மாதமும், இன்னொரு படம் ஜூலை மாதமும் ரிலீஸாகவிருக்கின்றன. கடந்த வருடமும் மொத்தம் மூன்று படங்களில் நடித்திருந்தார். இப்படி கரியர் நல்ல நிலைமையில் சென்று கொண்டிருக்கையில் விஜய்யின் விவாகரத்து விஷயத்தில் திரிஷாவின் பெயர் ரொம்பவே டேமேஜ் ஆகியிருக்கிறது.

திரைத்துறை ஆண்களுக்கான தளம் என்ற கூற்று பல காலம் உண்டு. அவர்களுக்கு மத்தியில் ஒரு நடிகை சில வருடங்கள் தாக்குப்பிடிப்பதே அரிதுதான். அப்படி அரிதான நடிகைகளில் ஒருவர் திரிஷா. சிம்ரன், மீனா, ஜோதிகா உள்ளிட்டோர் எப்படி பல வருடங்கள் சினிமாவை ரூல் செய்தார்களோ அதேபோல் திரிஷாவும் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக லைம் லைட்டிலேயே இருக்கிறார். அவரை சுற்றி குளியலறை வீடியோ சர்ச்சை உள்ளிட்டவைகள் வந்தாலும் அதையெல்லாம் தைரியத்தோடு கடந்து வந்தார்.

Trisha Under Fire in Vijay Divorce Row Ramya Krishnan s Viral Throwback Video Trends
Photo Credit:

பிஸி நடிகை: இடையில் ஏற்பட்ட சின்ன சறுக்கலை சரி செய்து 96 படத்தில் கம்பேக் கொடுத்த அவர்; கடந்த வருடத்தில் மட்டும் மூன்று படங்களில் நடித்தார். இந்த வருடத்தில் இரண்டு படங்கள் வரவிருக்கின்றன. அதேபோல் சித்தார்த்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இளம் ஹீரோயின்கள் பலர் வந்தாலும் அவர்களுக்கு சரியான போட்டியை கொடுக்கும் திரிஷாவை பார்த்து அவர் ரசிகர்கள் மட்டுமின்றி அவரை விமர்சிப்பவர்கள்கூட ஆச்சரியம்தான் படுகிறார்கள்.

Also Read
விஜய் - சங்கீதா திருமணம் முடிந்ததுமே அவர்களை வெளியேற்றினேன்.. எஸ்.ஏ.சந்திரசேகர் உடைச்சிட்டாரு
விஜய் - சங்கீதா திருமணம் முடிந்ததுமே அவர்களை வெளியேற்றினேன்.. எஸ்.ஏ.சந்திரசேகர் உடைச்சிட்டாரு

சர்ச்சையில் திரிஷா: அவரை சுற்றி கடந்த சில வருடங்களாக எந்த சர்ச்சையும் இல்லாமல் இருந்தது. ஆனால் விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து வேண்டுமென்று தாக்கல் செய்த மனுவும், விஜய்யுடன் திரிஷா மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு திருமணத்துக்கு வந்ததும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. முக்கியமாக திரிஷாவின் கேரக்டரையே சிலர் மட்டமாக பேச தொடங்கிவிட்டார்கள். விஜய் ரசிகர்களோ நீங்கள் எங்கள் அண்ணனிடமிருந்து விலகிவிடுங்கள் என கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

அமைதியாக இருக்கும் திரிஷா: இப்படி விஜய் விஷயத்தில் தனது பெயர் அளவுக்கு அதிகமாக விமர்சிக்கப்பட்டாலும் அதை அமைதியாகவே எதிர்கொள்கிறார். பார்த்திபன் பேசிய குந்தவை விஷயத்துக்கு மட்டும் காட்டமாக ரிப்ளை செய்திருந்தார். மற்றபடி செய்தியாளர்கள் கேட்பதற்கோ, யூடியூபில் பேசுபவர்களுக்கோ எந்த பதிலையும் கொடுப்பதில்லை. அவர் வழக்கமான தனது பணிகளில் கேஷுவலாகவே இருக்கிறார். இந்நிலையில் திரிஷா பற்றி ரம்யா கிருஷ்ணன் பேசிய பழைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

என்ன வீடியோ?: சில வருடங்களுக்கு முன்பு திரிஷாவும், ரம்யா கிருஷ்ணனும் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய ரம்யா, "திரிஷா பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருப்பார். நாம் தூங்கி எழுந்தாலும் அவர் பேசிக்கொண்டிருப்பார். அதேபோல் அவர் நினைத்தால் உடனே அழுதுடுவாங்க என கூறினார். உடனே திரிஷாவோ, நான் ஒரு ஃபீலிங்கோடு பேசிக்கொண்டிருப்பேன் என சொல்ல; அதனை மறித்த ரம்யா கிருஷ்ணன், 'ஃபீலிங் எல்லாம் இல்லை அத்தனையும் ட்ராமா" என சொல்ல திரிஷாவோ விழுந்து விழுந்து சிரித்தார். இந்த வீடியோவை திரிஷாவும் தனது ஸ்டோரியில் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X