Trisha - த்ரிஷாவை தொடர்ந்து கண்காணித்த தாய் உமா.. ஏன் தெரியுமா?

சென்னை: Trisha (த்ரிஷா) நடிகை த்ரிஷாவை அவரது தாய் உமா கிருஷ்ணன் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்த விஷயம் தெரியவந்திருக்கிறது.

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தோன்றியவர் த்ரிஷா. படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் உடைய அவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்று அசத்தினார். அதன் பிறகுதான் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு பரவலாக கிடைத்தது. அதன்படி ப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார் த்ரிஷா.

Trisha Watched by her Mother Uma Krishnan

மௌனம் பேசியதே: லேசா லேசா படத்தில் கமிட்டானாலும் அந்தப் படம் ரிலீஸாக தாமதமானதால் அமீர் இயக்கத்தில் உருவான மௌனம் பேசியதே படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் த்ரிஷா. அந்தப் படம் வெளியானதை அடுத்து மௌனம் பேசியதே படம்தான் த்ரிஷா நடிப்பில் வெளியான முதல் படமானது. இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

எவர்க்ரீன் ஜோடி: த்ரிஷா எத்தனையோ நடிகர்களுடன் நடித்தாலும் விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்ததை அடுத்து விஜய் - த்ரிஷா ஜோடி எவர்க்ரீன் ஜோடியாக மாறியது. இருவரும் இணைந்து நடித்த கில்லி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் கில்லி படம் மெகா ஹிட்டானது. அதில் அவர் ஏற்றிருந்த தனலட்சுமி கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இப்போது லியோ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவருகிறார் த்ரிஷா.

பல வருடங்களாக லைம் லைட்டில்: சினிமாவில் ஒரு நடிகை பத்து வருடங்களுக்கு மேல் நிலைப்பது அரிதிலும் அரிதாகவே நடக்கும். அப்படி நிலைத்தவர்கள் வெகு சிலரே. ஸ்ரீதேவி, நயன்தாரா, சிம்ரன், ஜோதிகா என அந்தப் பட்டியலின் நீளம் குறைவு. அந்தப் பட்டியலில் த்ரிஷா இன்னமும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். மேலும் அவரது அழகை பார்த்த ரசிகர்கள் த்ரிஷாவுக்கு வயதே ஆகாதா என்ற கேள்வியையும் எழுப்பிவருகின்றனர்.

Trisha Watched by her Mother Uma Krishnan

த்ரிஷாவுக்கு பக்கபலமாக நிற்கும் தாய்: த்ரிஷாவுக்கு மிகப்பெரிய பலமே அவரது தாய் உமா கிருஷ்ணன்தான். த்ரிஷா எங்கு சென்றாலும் அவரது நிழலாகவே தொடர்ந்து செல்பவர் உமா. த்ரிஷா திருமணம் சார்ந்து சில பிரச்னைகளை சந்தித்தபோதுகூட உமா கிருஷ்ணன் தைரியமாக பொதுவெளியில் வந்து பேசி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர்தான் எப்போதும் தனது பக்கபலம் என த்ரிஷாவும் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

கண்காணித்த உமா: இந்நிலையில் த்ரிஷாவை அவரது அம்மா உமா ஒரு விஷயத்தில் மிகவும் கண்காணிப்பாராம். அதாவது, த்ரிஷா சிறிய வயதாக இருக்கும்போது அவரை பள்ளிக்கு கொண்டு போய் விடுவது உமாதானாம். அந்த சமயத்தில் த்ரிஷா பள்ளிக்குள் செல்லும்போது அழுதுகொண்டே செல்கிறாரா இல்லையா என்பதை பள்ளியின் வாசலில் நின்றபடி கண்காணித்துக்கொண்டே இருப்பாராம். இந்தத் தகவலை த்ரிஷாவுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை பகிர்ந்துகொண்டார். த்ரிஷாவுக்கு அப்போதிலிருந்து இப்போதுவரை உமா நிழலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X