என் அம்மா ரொம்ப தப்பு செஞ்சிட்டாங்க.. ஃபீல் செய்யும் திரிஷா.. அப்படி என்ன ஆச்சு?
சென்னை: திரிஷா நடிப்பில் கடந்த ஆறாம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அடுத்ததாக ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு தக் லைஃப், விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களும் வரவிருக்கின்றன. இத்தனை வருடங்களாக லைம் லைட்டில் இருக்கும் அவரை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியத்தில் இருக்கிறது. மலையாளத்திலும் அடியெடுத்து வைத்திருக்கும் அவர் தனது தாய் உமா கிருஷ்ணன் பற்றி பேசியிருக்கிறார்.
மாடலிங்கில் கவனம் செலுத்திவந்த திரிஷா தமிழ் சினிமாவில் சிறிய வேடத்தில்தான் முதலில் அறிமுகமானார். அதற்கு பிறகு ஹீரோயினாக மாறிய அவர்; குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். பப்ளி ஹீரோயின்களைத்தான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிற மாய பிம்பத்தை தனது ஸ்லிம் அழகால் அடித்து சுக்கு நூறாக்கியவர் திரிஷா. பல வருடங்களாக கனவு கன்னியாக வலம் வரும் அவருக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில காதல்கள்: திரிஷாவை பொறுத்தவரை நடிகர் ராணா டகுபதியை தீவிரமாக காதலித்தார். ஆனால் அவர்களது காதல் பாதியில் முடிவடைந்தது. மேலும் வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று வருண் தரப்பினர் கண்டிஷன் போட்டதால்; தன்னால் நடிப்பை விடவே முடியாது என்று சொல்லிவிட்டு அந்தத் திருமணத்தை கைவிட்டார் திரிஷா. அதனைத் தொடர்ந்து தற்போதுவரை அவர் சிங்கிளாகவே இருந்துவருகிறார்.
மீண்டும் பிஸி: இதற்கிடையே திரிஷாவுக்கு அவரது கரியரில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அதனை 96 படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர்; பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் கலக்கினார். அந்தக் கதாபாத்திரத்தில் அவரை பார்த்த ரசிகர்கள்; இத்தனை வயதாகியும் இவ்வளவு அழகா?.. இனி குந்தவை என்றாலே திரிஷாதான் நியாபகத்துக்கு வருவார் என்று கூறிவருகின்றனர். அந்தப் படத்துக்கு பிறகு மேலும் திரிஷாவை தேடி வாய்ப்புகள் வர ஆர்மபித்திருக்கின்றன. அதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
வரிசையாக படங்கள்: திரிஷாவின் நடிப்பில் கடைசியாக தமிழில் விடாமுயற்சி படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக குட் பேட் அக்லி, தக் லைஃப், விஸ்வம்பரா, சூர்யா 45 உள்ளிட்ட பல படங்கள் வரவிருக்கின்றன. இந்தப் படங்கள் தவிர்த்து வேறு சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்றும் திரைத்துறையில் பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.
திரிஷா விலகவில்லை: சூழல் இப்படி இருக்க திரிஷா சினிமாவிலிருந்து விலகவிருப்பதாகவும்; அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவிருப்பதாகவும் குரல்கள் கேட்டன. ஆனால் அதனை அவரது தாய் உமா கிருஷ்ணன் சமீபத்தில் திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில் தனது தாய் உமா குறித்து திரிஷா அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன பேட்டி?: சில வருடங்களுக்கு நடிகர் ஜீவாவுடன் காஃபி வித் டிடியில் கலந்துகொண்டார் திரிஷா. அப்போது அவரிடம், 'நீங்கள் படிக்கும்போது எந்த பையனுக்காவது லவ் ப்ரபோஸ் செய்திருக்கிறீர்களா?' என்று டிடி கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், 'அப்படியெல்லாம் நான் செய்ததே இல்லை. ஏனெனில் நான் மகளிர் பள்ளியிலும், கல்லூரியிலும்தான் படித்தேன். ஆண்களை பார்ப்பதே அரிது. முழுக்க முழுக்க மகளிர் பள்ளி, கல்லூரியில் என்னை படிக்க வைத்து எனது அம்மா ரொம்ப தவறு செய்துவிட்டார்" என்று ஜாலியாக கூறினார்.


Click it and Unblock the Notifications











