விஜய் எப்போதுமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல்தான்.. யார் என்ன சொன்னால் என்ன?.. திரிஷா ஓபனா சொல்லிட்டாங்களே
சென்னை: விஜய்யும், திரிஷாவும் தமிழ் சினிமாவின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருப்பவர்கள். அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி ஸ்க்ரீனில் அவ்வளவு அழகாக இருக்கும் என்று இரண்டு பேரின் ரசிகர்களும் நீண்ட காலமாகவே சொல்வதுண்டு. அவர்கள் பல வருடங்கள் கழித்து லியோ படத்தில் ஒன்றாக நடித்தனர். மேலும் GOAT படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து நடனமாடினார் திரிஷா. இந்தச் சூழலில் விஜய் குறித்து திரிஷா பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா விஜய்யுடன் கில்லி படத்தில் முதன்முதலாக சேர்ந்து நடித்தார். தரணி இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தில் விஜய்க்கும் திரிஷாவுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கவர்ந்தது. அப்போதிருந்து விஜய் ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் தளபதிக்கு பொருத்தமான ஜோடி என்றால் திரிஷாதான் என்ற எண்ணம் பலமாகவே உருவாக ஆரம்பித்தது.

வரிசையாக படங்கள்: கில்லி படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யும் திரிஷாவும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்கள். அப்படி அவர்கள் திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்தார்கள். இந்த மூன்று படங்களில் திருப்பாச்சி தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. இருந்தாலும் மேற்கூறிய படங்களில் இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக இருந்ததாக அப்போது ரசிகர்கள் ஓபனாக பேச ஆரம்பித்தார்கள். அதேசமயம் இரண்டு பேரையும் இணைத்து கிசுகிசு வரவும் தவறவில்லை.
என்ன கிசுகிசு?: அதாவது திரிஷாவுக்கு விஜய் விலையுயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்தார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. இருவருமே அதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்தார்கள். அதேசமயம் குருவி படத்துக்கு பிறகு சேர்ந்து நடிக்காமலும் இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை இயக்கினார். பல வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக விஜய்க்கு ஜோடியாக நடித்தார் திரிஷா. படத்தில் லிப் லாக் சீன் எல்லாம் இருந்தன. அந்தப் படத்துக்கு பிறகு GOAT படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் திரிஷா.
தனி விமானத்தில் பயணம்: நிலைமை இப்படி இருக்க கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு விஜய்யும், திரிஷாவும் தனி விமானத்தில் கோவாவுக்கு சென்றார்கள். அப்படி அவர்கள் சென்றதை பலரும் பலவாறு பேசினார்கள். ஆனால் இரண்டு பேரும் நல்ல நண்பர்கள்; வேண்டுமென்றே இருவரையும் இணைத்து வைத்து கிசுகிசுக்கிறார்கள் என்று ஒருதரப்பினர் ஆணித்தரமாக கூறினார்கள். அதேபோல் திரிஷாவால்தான் விஜய்யும், சங்கீதாவும் பிரிந்திருக்கிறார்கள் என்றும் எல்லை மீறி சிலர் பேசுகிறார்கள். ஆனால் அதிலெல்லாம் எந்த உண்மையும் இல்லை என்பது விஜய் ரசிகர்களின் கருத்து.
திரிஷா பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து நடிகை திரிஷா அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்திருந்த அந்தப் பேட்டியில், "விஜய்யும் நானும் கில்லி படத்தில்தான் முதன்முறையாக ஒன்றாக சேர்ந்து நடித்தோம். விஜய் ரொம்பவே அமைதியானவர். ரிசர்வ்வான ஆள். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். விஜய் எப்போதுமே எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஒரு ஆள்தான். அவர் ரொம்பவே Professionalஆக இருப்பார். எவ்வளவோ அவர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் ரொம்ப எளிமையாக இருப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











