ராதா யாருக்கு?..ஹீரோவுடன் ஓடி போக பிளான்?..பயங்கரமாக சண்டை போட்ட நடிகர்கள்..பிரபலம் சொன்ன சீக்ரெட்

சென்னை: தமிழ் சினிமாவில் 80களில் வெகு பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்தான் ராதா. ரஜினிகாந்த், கமல் ஹாசன், கார்த்திக், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவர்; தெலுங்கிலும் பிஸியான நடிகையாக வலம்வந்தவர். இவரது சகோதரிதான் பிரபல நடிகை அம்பிகா. இரண்டு பேருக்கும் தென்னிந்திய சினிமாவில் பெரிய கிரேஸ் இருந்தது. இந்நிலையில் ராதா குறித்து பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியா பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவில் பிறந்த ராதா பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். அம்பிகாவின் தங்கையான ராதா முதல் படத்திலேயே அழகாலும் நடிப்பாலும் தன்னை நிரூபித்தார். அதன் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் 80களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். சொல்லப்போனால் அம்பிகா - ராதா இரண்டு பேரும் தமிழ் சினிமாவை ரூல் செய்தார்கள் என்பதுதான் உண்மை.

Throwback Stories Radha

தெலுங்கிலும் டாப் ஹீரோயின்: தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அறிமுகமான ராதா அங்கும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். அங்கும் முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்தவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குறைந்த சூழலில் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கார்த்திகா, துளசி என்ற மகள்கள் இருக்கிறார்கள்.

மகள்களும் சினிமாவில்: கார்த்திகா கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானாலும் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அதேபோல் ராதாவின் இளைய மகளான துளசி மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு கார்த்திகாவுக்கு திருமணம் நடந்தது. படு பிரமாண்டமாக நடந்த அந்தத் திருமணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தமிழா தமிழா பாண்டியன் பேட்டி: இந்நிலையில் ராதா குறித்து பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "உதய சந்திரிகாதான் ராதாவின் உண்மையான பெயர். பிறகு ராதா என்று பெயரை மாற்றிக்கொண்டார். அவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்த பாரதிராஜா தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சித்ரா லட்சுமணனை ராதாவுக்கு மேனேஜராக்கினார் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

கார்த்திக்குடன் காதல்: அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கிற்கும் ராதாவுக்கும் இடையே அதிகளவில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இந்தப் படத்துக்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு பேரும் ஏராளமான படங்களில் நடித்தார்கள். ராதாவின் வெற்றிக்கு அம்பிகாவும் ஒரு காரணமாக இருந்தார். கார்த்திக்கும், ராதாவும் இணைந்து நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டதாகவும்; இரண்டு பேரும் ஓடிப்போக பிளான் செய்தார்கள் என்றும் ஒரு பேச்சு அப்போது எழுந்தது உண்டு.

சண்டை போட்ட நடிகர்கள்: அந்த சமயத்தில் ராதாவின் தாய்தான் அறிவுரை கூறியிருக்கிறார். அவர் காங்கிரஸை சேர்ந்த பிரபல பேச்சாளர். கார்த்திக்கிற்கு பிறகு சிரஞ்சீவியுடன் ராதாவுக்கு காதல் ஏற்பட்டது. ராதாவை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்று நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கும் சிரஞ்சீவிக்கும் இடையே பயங்கர சண்டைகூட வருமாம். இதையெல்லாம் கடந்துதான் 1991ஆம் ஆண்டு ராஜசேகர் என்பவரை ராதா திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது தொழிலதிபராக மாறியிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X