Udhayanidhi Stalin - ஹீரோயின் விவகாரம்.. மனைவியிடம் உறுதி அளித்த உதயநிதி - என்ன தெரியுமா?

சென்னை: Udhayanidhi Stalin (உதயநிதி ஸ்டாலின்) நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் அறிமுகமாகும்போது தனது மனைவி கிருத்திகாவிடம் அளித்த உறுதி குறித்து தெரியவந்திருக்கிறது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகவில்லை என்றாலும் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அந்த டீசண்ட் வரவேற்பு கொடுத்த உற்சாகம் உதயநிதியை அடுத்தடுத்த படங்களில் நடிக்க தூண்டியது.அதன்படி அவரும் பல படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இடையில் வந்த மனிதன், சைகோ, கண்ணே கலைமானே, நிமிர் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை எடுத்துக்கொடுத்தன.

Udhayanidhi Stalins commitment to his wife Kiruthika has come to light when he makes his debut in cinema

நடிகர் டூ அமைச்சர்: இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவானார் உதயநிதி ஸ்டாலின். ஒருபக்கம் எம்.எல்.ஏ, மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருந்தவருக்கு திடீரென விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அமைச்சர் பதவியின் பொறுப்புணர்வை உணர்ந்துகொண்ட உதய் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்தார். அதேசமயம் கடைசி படம் தரமாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினார்.

மாமன்னன்: எனவே பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமாகி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதால் தனது கடைசி படம் நிச்சயம் சிறந்த படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் உதயநிதி.

Udhayanidhi Stalins commitment to his wife Kiruthika has come to light when he makes his debut in cinema

மாமன்னன் ரிலீஸ்: இந்தச் சூழலில் மாமன்னன் படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியானது. உதயநிதி எதிர்பார்த்தபடியே அவரது கடைசி படம் தரமான அமைந்திருக்கிறது. அதனை ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

உதயநிதிக்கு பாராட்டு: குறிப்பாக மாமன்னன் படத்தில் பேசப்பட்டிருக்கும் விஷயம் இதுவரை எந்தத் திரைப்படத்திலும் பேசாத விஷயம். எனவே அதனை ஆளுங்கட்சி அமைச்சராக இருந்துகொண்டே பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்ட அவர் நடிக்க வந்த புதிதில் தனது மனைவி கிருத்திகாவிடம் அளித்த உறுதி குறித்து பார்க்கலாம்.

மிஷ்கின்: அதாவது திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னதும் கிருத்திகாவுக்கு ஆச்சரியம்தான் ஏர்பட்டதாம். இதனையடுத்து இயக்குநர் மிஷ்கினிடம் உதயநிதியை அழைத்து சென்று கிருத்திகா அறிமுகப்படுத்தியிருக்கிறார். அப்போது போட்டோ ஷூட் ஒன்றும் எடுக்கப்பட்டதாம். மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் முதலில் உதயநிதிதான் நடிக்க வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன உறுதி: ஒருவழியாக ஓகே ஓகே படத்தில் கமிட்டாகிவிட்டார் உதயநிதி. அந்த சமயத்தில் கிருத்திகாவிடம், 'சுப்ரமணியபுரம் படத்தில் ஹீரோயின் எங்கேயோ இருந்து ஹீரோ எங்கேயோ இருந்து ரொமான்ஸ் பண்ணுவாங்கல்ல; அதுமாதிரிதான் நானும் சினிமாவில் ரொமான்ஸ் பண்ணுவேன்' என உறுதியளித்தாராம் உதயநிதி. ஆனால் இப்போது அவர் பண்ணுறத பாருங்க என கிருத்திகா ஒரு பேட்டியில் இந்தத் தகவலை ஜாலியாக தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X