Vadivelu: இஷ்டத்துக்கு ஆடிய வடிவேலு... ரிவீட் அடித்த பிரபுதேவா... நடுவில் மாட்டிக்கொண்ட விஜய்!

சென்னை: விஜய் கேரியரில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்த படங்களில் ஒன்று போக்கிரி.

2007ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா இயக்கியிருந்தார்.

போக்கிரி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் வில்லு படத்திலும் இந்தக் கூட்டணி இணைந்தது.

வில்லு படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு செய்த அட்ராசிட்டி குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

 Vadivelu: Actor Vadivelu did the atrocity while acting with Vijay in the Villu film

வில்லு படப்பிடிப்பில் வைகைப்புயல் அட்ராசிட்டி

காதலன் திரைப்படம் முதலே பிரபுதேவா - வடிவேலு கூட்டணி ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டது. அதேபோல், விஜய்யின் பெரும்பாலான படங்களில் வடிவேலு காமெடியில் கலக்கியிருப்பார். வசீகரா, பிரண்ட்ஸ், காவலன் உட்பட பல படங்களில் விஜய்யும் வடிவேலும் காமெடியில் மாஸ் காட்டியுள்ளனர். இந்த வரிசையில் வில்லு திரைப்படமும் முக்கியமான ஒன்றாகும்.

போக்கிரியில் இணைந்த விஜய் - பிரபுதேவா - வடிவேலு கூட்டணி மீண்டும் வில்லு படத்திலும் இணைந்தது. போக்கிரியில் விஜய் ஜோடியாக அசின் நடித்திருந்தார், ஆனால் வில்லு படத்தில் நயன்தாரா நாயகியானார். இந்தப் படத்தின் முதல் பாதி முழுவதும் விஜய், வடிவேலு, நயன்தாரா ஆகியோரின் காமெடி தான் பட்டையை கிளப்பியது. வில்லு பட காமெடி சீன்ஸ் இப்போதும் ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.

 Vadivelu: Actor Vadivelu did the atrocity while acting with Vijay in the Villu film

இந்நிலையில், வில்லு படத்தில் விஜய் - வடிவேலு இருவரும் சந்திக்கும் முதல் காட்சியை படமாக்கியுள்ளார் பிரபுதேவா. மாட்டு வண்டியில் வரும் வடிவேலுவிடம் விஜய் லிஃப்ட் கேட்பது தான் அந்த சீன். அவுட்டோரில் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பின் சில காட்சிகளில் வடிவேலு ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். அதாவது பிரபுதேவா சொல்லாததையெல்லாம் அவராகவே சொந்தமாக நடித்துள்ளார்.

இதனால் டென்ஷனான பிரபுதேவா ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே வடிவேலுவிடம் இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு நடிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆனாலும் வடிவேலு கொஞ்சம் கூட பிரபுதேவா சொன்னதை கேட்கவே இல்லையாம். மேலும், இப்படி நடித்தால் நல்லாதானே இருக்கு என பிரபுதேவாவுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத பிரபுதேவா மீண்டும் டென்ஷனாகி வடிவேலுவை திட்டியதாகக் கூறப்படுகிறது.

 Vadivelu: Actor Vadivelu did the atrocity while acting with Vijay in the Villu film

இந்தப் படத்தை எப்படி டைரக்ட் பண்ண வேண்டும் என ஒரு வருடமாக பிளான் செய்து ஷூட்டிங் வந்துள்ளேன். அதேபோல் ஒவ்வொரு காட்சியும் பார்த்து பார்த்து ஸ்கிரிப்ட்டில் சேர்த்துள்ளேன். அதனால் உங்கள் இஷ்டத்துக்கு நடிக்க வேண்டாம் என வடிவேலுவுக்கு ரிவீட் அடித்துள்ளார். அதன் பின்னரே வடிவேலுவும் அடங்கியுள்ளார். இந்தக் காட்சியில் நடித்துக்கொண்டிருந்த விஜய், வடிவேலு - பிரபுதேவா இருவரும் சண்டைப் போட்டதை ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துள்ளார்.

அதேநேரம் இந்த ஷூட்டிங் முடிந்ததும் வடிவேலுவும் பிரபுதேவாவும் வழக்கம்போல தோளில் கை போட்டபடி ஜாலியாக கிண்டல் செய்து விளையாடியுள்ளனர். இதனை பார்த்ததும் விஜய் ரொம்பவே ஷாக் ஆகிவிட்டாராம். வில்லு படப்பிடிப்பில் தான் பிரபுதேவா - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X