Vadivelu - என்னைவிட பெரிய நடிகனா நீ.. ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகரை அடித்த வடிவேலு

சென்னை: ஒரு படத்தின் ஷூட்டிங்கில் தன்னைவிட கூடுதல் ரியாக்‌ஷன் கொடுத்த காரணத்திற்காக சக நடிகரை வடிவேலு அடித்ததாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை அடையாளம் தெரியாமல் சிதைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு.

ரீ என்ட்ரி: அதன் காரணமாக சில வருடங்கள் நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்போடு திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள் வடிவேலுவின் நடிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வடிவேலு தன்னை அப்டேட் செய்துகொள்ளவில்லை என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் தாக்குப்பிடிக்க மாட்டார் எனவும் வெளிப்படையாக விமர்சனத்தை வைத்தனர்.

Vadivelu hit his co-star at the Gambeeram Movie shooting spot

மாமன்னன் வடிவேலு: இந்தச் சூழலில் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தாலும் வடிவேலுவுக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. எனவே மாமன்னன் படத்தில் தனது நடிப்பின் மூலம் தன்னை பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்க வடிவேலு காத்திருக்கிறார். படம் நாளை வெளியாகவிருக்கிறது.

தொடர் புகார்கள்: இந்தச் சூழலில் வடிவேலுவுடன் நடித்தவர்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. நடிகர் சிஸர் மனோகரன் ஒருபடி மேலே சென்று வடிவேலுவை வெட்டலாம் போல எனக்கு தோன்றியது. சீமானால் தப்பினார் என கூறினார். அதேபோல் கொட்டாச்சி, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் அவர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை சமீபத்தில் வைத்தனர். சமீபத்தில் பேட்டி அளித்த பாவா லட்சுமணன்கூட வடிவேலு தங்களை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை என்றார்.

கம்பீரம்: இந்தச் சூழலில் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகரை வடிவேலு அடித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, சரத்குமார், லைலா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த கம்பீரம் படத்தின் ஷூட்டிங் கற்பகம் ஸ்டூடியோவில் நடந்துகொண்டிருந்திருக்கிறது. அப்போது சாராயம் விற்கும் பெண்ணை பிடிக்கப்போகும் சீனை படமாக்கினார்களாம்.

அடித்த வடிவேலு: அந்த சீன் படமாக்கப்பட்ட பிறகு மானிட்டரில் வந்து நடித்த சீனை பார்த்திருக்கிறார் வடிவேலு. அப்போது அவருடன் அந்த சீனில் நடித்த சக நடிகர்களில் ஒருவர் வடிவேலுவை தாண்டி ரியாக்‌ஷன் கொடுத்திருக்கிறார். உடனே அவரிடம் சென்ற வடிவேலு நீ என்ன என்னைவிட பெரிய நடிகனா?. ஓவரா நியாக்‌ஷன் கொடுக்குற என சொல்லி அந்த நடிகரை அடித்தாராம். அதுமட்டுமின்றி அதே சீனை மீண்டும் எடுக்க சொல்லி; தான் அடித்த நடிகரை கடைசி வரிசையில் யாருக்கும் தெரியாதபடி நிற்க வைத்துவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X