Vadivelu - என்னையே திட்டுவியா?.. விஜய் பட நடிகரை மிரட்டிய வடிவேலு.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Vadivelu (வடிவேலு) திருப்பாச்சி படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பெஞ்சமினுக்கும் வடிவேலுவுக்கும் நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலு சில பஞ்சாயத்துக்களால் பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பெரிய திரையில் அவர் தோன்றாவிட்டாலும் அனைத்து காமெடி சேனல்களிலும் அவரே தோன்றிக்கொண்டிருந்தார். இதனால் வடிவேலு முழுமையாக மக்களிடமிருந்து விலகிவிடவில்லை. சூழல் இப்படி இருக்க அவரை சுற்றிய பஞ்சாயத்துக்கள் தீர்த்து வைக்கப்பட்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: அதன்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. வடிவேலு இன்னமும் பழைய டெம்ப்ளேட்டுக்குள்ளேயே இருக்கிறார் என்று படம் பார்த்த ரசிகர்கள் ஓபனாக விமர்சனம் வைத்தனர். எனவே வடிவேலு தனது ஸ்டைலை மாற்றி தற்கால சினிமாவுக்குள் விரைவில் கலப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமன்னன்: அந்தப் படத்துக்கு பிறகு மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படத்தில் வடிவேலுவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டு படமும் மெகா ஹிட்டடித்தது. மேலும் இனி வடிவேலுவுக்கு மாமன்னன் போன்ற கதாபாத்திரம்தான் அதிகம் வரும் என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதனையடுத்து சந்திரமுகி 2வில் நடித்தார் வடிவேலு. ஆனால் அதில் அவரது காமெடிக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
பெஞ்சமின் பேட்டி: இந்த சூழலில் வெற்றிக்கொடிகட்டு, திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்து புகழ்பெற்ற பெஞ்சமினை வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு மிரட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது வெற்றிக்கொடிக்கட்டு படத்தில் ஃபேமஸான காட்சிகளில் ஒன்று வடிவேலுவை பெஞ்சமின் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுவது.
மிரட்டிய வடிவேலு: அந்த காட்சியை படமாக்கும்போது பெஞ்சமின் மொத்தம் 5 முதல் ஆறு டேக்குகள்வரை சென்றுவிட்டாராம். அப்போது ஃபிலிம் கேமரா என்பதால் செலவு அதிகம் வைத்திருக்கிறது. உடனே சேரன் பெஞ்சமினிடம் வந்து என்னங்க நீங்க பாலசந்தர் சிஷ்யன். இப்படி பண்றீங்களே என கேட்டிருக்கிறார். அதற்கு பெஞ்சமினோ, சார் நானும் வடிவேலுவும்தான் இங்கு இருக்கோம். நீங்க கொஞ்ச தூரத்துல மானிட்டர பார்த்துட்டு இருக்கீங்க.
கெட்ட வார்த்தை சொல்லி திட்ட ஆரம்பிக்கும்போது வடிவேலுவோ கையை மடக்கி, நாக்கை துருத்தி என்னவெல்லாமோ செய்கிறார். அப்படி இருக்கும்போது எப்படி சார் மிரட்ட முடியும் என்று சொல்லியிருக்கிறார். உடனே சேரன் வடிவேலுவின் ஓட்டுநரை அழைத்து நீங்கள் வடிவேலுவை காரில் வைத்து 5 கிலோமீட்டருக்கு போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பிவிட்டு வெறும் கேமராவை வைத்து அந்தக் காட்சியை ஷூட் செய்தாராம்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த வடிவேலு என்ன அந்த சீனை எடுத்துட்டீங்களா அவனும் பேசிட்டானா.. ஓஹோ நீ எப்படி போறனு பார்ப்போம் என்று சொல்ல; சேரனோ வடிவேலுவிடம் என்ன பங்காளி இது புது பையன்ட்ட இப்படி மிரட்டுனிங்கனா அவன் எப்படி நடிப்பான் என சொல்லியிருக்கிறார். இந்த தகவலை பெஞ்சமினே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











