Vadivelu: விஜயகாந்த் மேல வடிவேலுக்கு கோபம் கிடையாது... அவர் வீட்ல தான் பிரச்சினையே!
சென்னை: வடிவேலு நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நடிக்க முடியாமல் வீட்டில் இருந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
வடிவேலு வீட்டில் முடங்க காரணமே அவருக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான பிரச்சினை தான்.
தற்போது அதுகுறித்தும் விஜயகாந்த் பற்றியும் வடிவேலு மனம் திறந்து பேசியது தெரியவந்துள்ளது.

விஜயகாந்த் பற்றி மனம் திறந்த வடிவேலு:கோலிவுட்டின் காமெடி கிங் வைகைப்புயல் வடிவேலு தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் உதயநிதி, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வடிவேலு குரலில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், இந்தப் படம் வெளியானதும் வடிவேலுவின் மார்க்கெட் உச்சம் தொடும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 10 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார் வடிவேலு. தேர்தலில் விஜயகாந்த் கட்சியான தேமுதிகவிற்கு எதிராக பிரசாரம் செய்து தேவையில்லாமல் பிரச்சினையில் சிக்கினார் வடிவேலு. அதோடு அவர் பற்றி பலரும் சர்ச்சையான கருத்துகளை வெளியிட, வடிவேலுவின் பட வாய்ப்புகள் எல்லாம் கேன்சல் ஆனது. இன்னொரு பக்கம் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் வடிவேலுவுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்த வடிவேலு, இறுதியாக எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டிலேயே விட்டத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார். ஆனாலும், திரையுலகில் அவரது இடம் இப்போதும் அப்படியே தான் உள்ளது. அதனை மாமன்னன் திரைப்படம் இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கடந்த சில தினங்களாகவே வடிவேலு பற்றிய சர்ச்சையான செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், வடிவேலுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான வி.சி.கே பழனி என்பவர் வடிவேலு, விஜயகாந்த் சர்ச்சை குறித்து மனம் திறந்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியொன்றில், பலரும் சொல்வது மாதிரி வடிவேலு அவ்வளவு மோசமானவர் கிடையாது, அவர் மிகவும் நல்ல மனிதர். வடிவேலு வீட்டில் வேலை செய்த ஒருவர் 50 சவரன் நகையை திருடிவிட்டார், ஆனால் அதனை கூட அவர் பெரிதுப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்.

அதேபோல், தனது ரியாக்ஷன்களால் வெளியாகும் மீம்ஸ்களை ரொம்பவே ரசிப்பார். இப்போது வடிவேலு பற்றி சர்ச்சையாக பேசும் யாரும் அவர் வாய்ப்பில்லாமல் வீட்டில் இருந்தபோது வந்து பார்க்கவில்லை. மாமன்னன் படத்திற்கு பின் வடிவேலுவை 10 வருடங்கள் யாராலும் அசைக்க முடியாது. முக்கியமாக விஜயகாந்த் மீது வடிவேலுவுக்கு எப்போதும் கோபம் இருந்ததே கிடையாது. விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன் தான், அவரின் வீட்டில்தான் சிலர் சரியில்லை என வடிவேலு என்னிடம் கூறியதாக விசிகே பழனி தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயகாந்த் இப்போது உடம்பு சரியில்லாமல் இருப்பதை கூறி, அவரைப் பற்றி அதிகம் வருத்தப்படுவார். அந்த அளவுக்கு வடிவேலு ரொம்பவும் நல்லவர். அவரை திட்டியவர்களை கூட பாவம் என்றுதான் வடிவேலு நினைப்பார் எனத் தெரிவித்துள்ளார். வடிவேலு பற்றிய விசிகே பழனியின் பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











