அய்யோ விஷால் செஞ்ச அந்த விஷயம் இருக்கே.. ரத்தம் வந்துடுச்சு.. வரலட்சுமி என்ன இப்படி சொல்லிட்டாங்க?

சென்னை: சரத்குமாரின் முதல் மனைவியுடைய மகள் வரலட்சுமி. விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; கடந்த வருடம் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் விஷால் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கோலிவுட்டில் 90களில் ஃபேமஸான ஹீரோவாக வலம் வந்தவர் சரத்குமார். இவர் சாயா என்பவரை முதலில் திருமணம் செய்தார். அவர்களுக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி. பிறகு சாயாவை விவாகரத்து செய்த அவர் அடுத்ததாக ராதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். சூழல் இப்படி இருக்க தனது தந்தை போலவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வரலட்சுமிக்கு இருந்தது. ஆனால் அதற்கு முதலில் சரத் ஒத்துக்கொள்ளவே இல்லை. இதன் காரணமாக பாய்ஸ், சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களை மிஸ் செய்தார் வரு.

throwback stories vishal varalakshmi madhagajaraja

போடா போடியில் அறிமுகம்: ஆனால் சாயா மற்றும் ராதிகா ஆகியோர் சரத்குமாரை ஒத்துக்கொள்ள வைத்ததை அடுத்து போடா போடி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் வரலட்சுமி. அந்தப் படம் துப்பாக்கி படத்துக்கு போட்டியாக களமிறங்கியது. இதனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அதேசமயம் முதல் படத்திலேயே நடிப்பில் கவனம் ஈர்த்த வரலட்சுமி. முக்கியமாக க்ளைமேக்ஸில் அவர் ஆடிய நடனம் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் ரசிக்க வைத்தது.


தாரை தப்பட்டை: முதல் படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்த அவர் மீது இயக்குநர் பாலாவின் கண் பட்டது. தொடர்ந்து தான் இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமியை நடிக்க வைத்தார். பாலா இயக்கத்தில் நடித்தால் நிச்சயம் பெயர் கிடைத்துவிடும் என்கிற நிலை வரலட்சுமிக்கும் தொடர்ந்தது. மிகச்சிறப்பாக அந்தப் படத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து தொடர்ந்து வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. தொடர்ந்து சர்கார் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

திருமணம்: தெலுங்கிலும் சில படங்களில் நடித்த அவர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்தார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் வரலட்சுமியின் காதலுக்கு சரத்குமார் ஓகே சொன்னதைத் தொடர்ந்து இரண்டு பேரின் திருமணம் கடந்த வருடம் தாய்லாந்தில் பிரமாண்டமாக நடந்தது. சென்னையில் நடந்த வரவேற்பில் முதலமைச்சர் ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

வரலட்சுமி பேட்டி: இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் வரலட்சுமி நடித்த மதகஜராஜா நாளை ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் விஷால் அந்தப் படத்தில் பாடிய பாடல் குறித்து வரலட்சுமி அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த ஒரு பேட்டியில்,”அய்யோ விஷால் பாடிய அந்தப் பாடலை கோரியோகிராஃபி செய்தபோது எங்களுக்கு காதில் ரத்தமே வந்துவிட்டது. பிருந்தா மாஸ்டருக்கெல்லாம் அழுகையே வந்துவிட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து ஸ்பீக்கரில் அதே பாடலைத்தான் கேட்கும் நிலைமை இருந்தது. அதேசமயம் அந்தப் பாடல் ஒரு Funஆகதான் இருக்க வேண்டும் என்பதுதான் ஐடியா” என்றார். முன்னதாக விஷாலும் வரலட்சுமியும் காதலித்துவந்ததாகவும்; சரத்குமாருக்கும் விஷாலுக்கும் நடிகர் சங்க விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் இந்தக் காதல் பாதியில் முடிந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X