ஹீரோயின் கழுத்துக்கு கீழ் முத்தம்.. ‘கட்’ சொல்லியும் கண்ட்ரோல் இழந்த ‘பேபி ஜான்’ ஹீரோ.. இது எப்போ?

மும்பை: அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபியுடன் இணைந்து பேபி ஜான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் வருண் தவானின் BTS வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது தீயாக பரவி நடிகரின் அத்துமீறலை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் ஹீரோயின்களுடன் நடிப்பது தான் ரொம்பவே சவாலான கஷ்டமான விஷயம் என சில ஹீரோக்கள் நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கவே தயக்கம் காட்டும் நிலையில், சமந்தாவை மடியில் வைத்து சிட்டாடல் வெப்சீரிஸ்காக லிப் லாக் முத்தக் காட்சியில் தயக்கமே இல்லமால் வருண் தவான் நடித்து ஷாக்கை கொடுத்திருந்தார்.

varun dhawan throwback bollywood

நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடிக்கும் போதும் ஓவர் ரொமான்ட்டிக்காக வருண் தவான் பாடல் காட்சிகளில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இயக்குநர் கட் சொல்லியும் நடிகை நர்கிஸ் ஃபக்ரியிடம் அவர் எல்லைமீறினார் என சில காட்சிகளை வெளியிட்டு வருண் தவானை அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

தீயாக பரவும் வீடியோ: சில ஹீரோக்கள் வேண்டுமென்றே நடிகைகளுடன் படுநெருக்கமான காட்சிகளை வைக்க வேண்டும் என்றும் லிப் லாக் சீன் வைத்தே தீர வேண்டும் என இயக்குநர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருப்போம். 2014ம் ஆண்டு வெளியான 'மெயின் தெரா ஹீரோ' படத்தில் வருண் தவான் மற்றும் நர்கிஸ் ஃபக்ரி இணைந்து நடித்திருந்தனர். அந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று தான் தற்போது வைரலாகி வருகிறது.

'கட்' சொல்லியும் கண்ட்ரோல் இல்லை: பாடல் காட்சி ஒன்றில் நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கழுத்துக்கு கீழே முத்தம் கொடுத்துக் கொண்டே அவரை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருப்பது போல எடுக்கப்பட்ட ரொமான்ஸ் காட்சியின் போது இயக்குநர் 'கட்', 'கட்', 'கட்' என பல முறை சொல்லியும் ஹீரோயினை விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டே கழுத்துக்கு கீழே வருண் தவான் செய்த சேட்டைகள் அடங்கிய வீடியோவை நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இதோ பாருங்க வருண் தவானின் காம லீலைகள் அம்பலம் என பதிவிட்டுள்ளார்.

பேரம் பேசிய வருண் தவான் டீம்: மேலும், இந்த வீடியோவை டெலிட் செய்யச் சொல்லி வருண் தவானின் டீம் தன்னிடம் பணம் தருவதாக பேரம் பேசியதாகவும் தனியாக பேரம் பேசியதாக சொல்லப்படும் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் பதிவிட்டு பகீர் கிளப்பியுள்ளார். சமந்தா, கீர்த்தி சுரேஷ் எல்லாம் சமீபத்தில் இவரிடம் சிக்கி என்ன ஆனார்களோ என நெட்டிசன்கள் வருண் தவானை வாட்டி வதைத்து வருகின்றனர். சினிமா ஷூட்டிங்கில் இதெல்லாம் சாதாரணமப்பா சம்பந்தப்பட்ட நடிகை புகார் அளித்தால் தான் இது பிரச்சனை என்றும் நெட்டிசன்கள் வருண் தவானுக்கு ஆதரவாக முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X