Throwback: சில்க் ஸ்மிதாவுடன் உறவில் இருந்த கணவர்.. மறைந்த நடிகையின் சோகம் நிறைந்த பக்கங்கள்!

சென்னை: பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகையுமான ஜெயதேவி நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், அவரின் சோகமான வாழ்க்கை குறித்த தகவல் சோஷியல் மீடியாவில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயதேவி 1976ம் ஆண்டு தனது 20 வயதில் சினிமாவில் நடிக்க நுழைந்தார்.

இதயமலர் என்ற படத்தில் நடித்த இவர் அதன் பின் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என்ற படத்தில் நடித்தார்.

தயாரிப்பாளர் ஜெயதேவி: மறைந்த நடிகை ஜெயதேவி, 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 15 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள இவர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் வேலு பிரபாகரன் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்களைத் தனது முயற்சிகள் மூலம் அறிமுகப்படுத்தினார்.

Velu Prabhakaran, who was in a relationship with Silk Smitha, the tragic life of the late actress Jayadevi

பிரபலங்கள் இரங்கல்: கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் அக்டோபர் மாதம் 4-ந் தேதி 4.30 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முதல் பெண் இயக்குநராக ஜொலித்த ஜெயதேவியின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சோகம் நிறைந்த வாழ்க்கை: நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என புகுந்து விளையாடிய நடிகை ஜெயதேவின் வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே இருந்தது. அவரின் பழைய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில், தனது கணவர் வேலு பிரபாகரன் குறித்து பேசி உள்ளார். நானும் அவரும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து பின்னர் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பின் வாழ்க்கை அழகாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.

பிரிவு வந்ததை உணர்ந்தேன்: நாளை மனிதன், அதிசய மனிதன், சரியான ஜோடி என அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவியத் தொடங்கியதும், அவருடைய நடவடிக்கை மாறிவிட்டது. அவர் தனியாக உதவியாளர்களை வைத்துக்கொண்டார். அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் நான் அவரிடம் பேசக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதே எங்களுக்குள் பிரிவு வந்துவிட்டதை உணர்ந்தேன்.

Velu Prabhakaran, who was in a relationship with Silk Smitha, the tragic life of the late actress Jayadevi

நானும் சில்க்கும் ஓர் இரவு: அப்போது தான் பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பில் வேலு பிரபாகரும், சில்க்கும் ஜோடி போட்டு சுற்றும் விஷயம் என் காதுக்கு வந்தது. ஆனால், அதை கேட்டுக்கொண்டு கண்டும் காணாமல் விட்டு விட்டேன். அப்போது தான், தினத்தந்தி நாளிதழில் வேலு பிரபாகரனின் பேட்டி வருகிறது. அதில் நானும் சில்க்கும் ஓர் இரவு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சில்க் ஸ்மிதாவுடன் உறவில் இருந்தார்: அதில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது,காதலித்தது, உலகமே சில்க் மீது ஆசைப்பட்ட போது, சில்க் இவர் மேல் ஆசைப்பட்டது. இருவரும் தனிமையில் இருந்தது குறித்து அந்த கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. அதாவது சில்க்குடன் ஒரு நாள் இரவு இருந்தது குறித்து பத்திரிக்கையில் வெளிவந்ததைப்பார்த்து நான் சுக்குநூறாக உடைந்து போனேன் என்று கண்ணீர் விட்டு பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X