வெற்றிமாறன் மனைவிக்கு இப்படி ஒரு சோகமா?.. கரு கலைந்து ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்திருக்கிறாரே
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரிலீஸானது. சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தத் திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே சூர்யாவை வைத்து அவர் வாடிவாசல் படத்தை இயக்க கமிட்டானார். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவின் மைல் ஸ்டோனாக இருக்கும் என்பது பலரது கருத்து. அதேபோல் சூர்யாவுக்கும் கடந்த சில வருடங்களாக எந்த ஹிட் படங்களும் அமையவில்லை. எனவே இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கும் சூர்யா முழு மூச்சோடு தயாராகிவருகிறார். இந்தச் சூழலில் வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தி கொடுத்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அதிக ரசிகர்கள் மட்டுமின்றி முக்கியத்துவம் பெற்ற இயக்குநராகவும் விளங்கிவருகிறார். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதினையும், விசாரணை படத்துக்காக சர்வதேச அளவில் விருதுகளையும் குவித்திருக்கிறார் அவர். அவரது படம் என்றாலே சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பக்கூடியவை. அதற்கு பிறகு சில நல்ல விஷயங்களும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக பாலுமகேந்திராவின் பட்டறையிலிருந்து வந்த இயக்குநர்களில் வெற்றிமாறன் மட்டும்தான் கமர்ஷியலாகவும், சமூக அக்கறையுடனும் என இரண்டு ஜானர்களிலும் படம் எடுக்கும் வித்தை தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவரது படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு ரசிகர்கள் தயாராக இருப்பார்கள்.

விடுதலை, விடுதலை 2: முக்கியமாக புத்தகங்களை படமாக்கும் முறையை வெகுஜனப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன். அப்படி அவர் இயக்கிய விசாரணை (லாக் அப்), அசுரன் (வெக்கை), விடுதலை (துணைவன்) உள்ளிட்ட படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்திருக்கின்றன. புத்தகத்தை அப்படியே படமாக்காமல் அதில் தனது சமூக கருத்தையும் சேர்த்து கொடுப்பதால் அந்தப் படங்கள் வேறு தளத்துக்கு செல்வது வழக்கம். வெக்கை நாவலை தழுவி அசுரன் படத்தை அவர் எடுத்திருந்தாலும் அதில் தன்னுடைய பார்வையையும் சேர்த்து படத்தை அடுத்தக்கட்டத்துக்கு உயர்த்தியிருந்தார். அதேபோல் விசாரணை திரைப்படத்தையும் உருவாக்கினார். கடைசியாக அவரது இயக்கத்தில் விடுதலை 2 வெளியானது.
கலவையான விமர்சனம்: விடுதலை படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேசமயம் விடுதலை 2 கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் படத்தின் ஆரம்ப காட்சிகள்; படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள், மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் உள்ளிட்டவைகள் பலத்த வரவேற்பை பெற்றன. முதல் பாகத்தில் சூரிக்கு இருந்த முக்கியத்துவம் இரண்டாவது பாகத்தில் இல்லை. விஜய் சேதுபதிக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி படத்தில் பிரசார நெடி கொஞ்சம் ஓவராகவே அடித்தது என்றும்; ஸ்க்ரீன் ப்ளேவில் வெற்றிமாறன் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றும் ரசிகர்கள் ஓபனாகவே பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிவாசல் திறப்பு: இதற்கிடையே சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்க கமிட்டானார் வெற்றிமாறன். இந்தப் படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படவிருக்கிறது. படத்துக்கான சிஜி பணிகள் எல்லாம் லண்டனில் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. படத்தின் ஷூட்டிங் மிக விரைவில் தொடங்கவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக எந்தப் படமும் ஹிட்டாகவில்லை. எனவே இந்தப் படத்தை ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறனின் மனைவி பேட்டி: இதற்கிடையே வெற்றிமாறன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஆர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் வெற்றிமாறன் குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "மற்ற பெண்களை போல் நான் அவரிடம் பெரிதாக எதுவும் எதிர்பார்த்ததில்லை. நாங்கள் காதல் செய்யும்போதே படத்தை இயக்கிவிட்டுதான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். பல பேரிடம் அவர் கதை சொல்லியிருக்கிறார். கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தில் அவரது கதையை படமாக்க ஓகே சொல்லி வேலையை தொடங்கிவிட்டார்கள். அப்போதுதான் அவர் எனக்கு ஃபோன் செய்து எங்களது காதல் சம்பந்தமாக எனது வீட்டில் பேச சொன்னார்.
அப்பா உடனே அழ ஆரம்பித்துவிட்டார்: அதனையடுத்து நான் எங்கள் வீட்டில் சொன்னேன். நான் சொல்லி முடித்தவுடன் எனது அப்பா உடனே அழ ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து நான் எனது அப்பாவிடம் உங்களை எதிர்த்து வெற்றிமாறனி திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. நீங்கள் ஒருமுறை அவரை பாருங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் வெற்றியிடமிருந்து விலகிவிடுகிறேன் என்று சொன்னேன். அதனையடுத்து வெற்றிமாறன் எனது அப்பாவை பார்க்க வந்தார். என்ன அப்பாவிடம் அவர் பேசும்போதே அவரை அப்பாவுக்கு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த உரையாடலில் ரொம்பவே ஓபனாக பேசினார் வெற்றிமாறன். ஸ்மோக் செய்வது, உதவி இயக்குநராக இருப்பது என அனைத்தையும் சொன்னார். வெற்றிமாறன் பேசியதை பார்த்து இந்தக் காலத்தில் இப்படி ஒரு உண்மையான பையனா என்று ஆச்சரியம்.
பல பிரச்னைகளை சந்தித்தோம்: திருமணம் முடிந்ததும் நாங்கள் பல பிரச்னைகளை சந்தித்தோம். திருமணத்துக்கு முன்பு எனக்காக அவர் பல இடங்களில் காத்திருப்பார். ஆனால் திருமணத்துக்கு பின்பு நான் இப்போது அவருக்காக காத்திருக்கிறேன். எங்களுக்கு கல்யாணமான புதிதில் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தோம். முக்கியமாக நான் கர்ப்பமாக இருந்தேன். அந்த சமயத்தில் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது குழந்தை கலைந்துவிட்டதாக சொன்னார்கள். மருத்துவர்கள் அப்படி சொன்னதும் நான் உடைந்தே போய்விட்டேன்.கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அந்த மருத்துவமனையில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். அப்போது வெற்றிமாறனுக்கு ஃபோன் செய்து இஷயத்தை கூறினேன்.
ஏவிஎம் ஸ்டூடியோவில் சந்தித்தோம்: அப்போது அவர் ஏவிஎம் ஸ்டூடியோவில் இருந்தார். விஷயத்தை நான் சொன்னதும் என்னை அங்கு வர சொன்னார். அதன்படி நானும் அங்கு சென்றேன். அவரால் அங்கிருந்து என்னுடன் மீண்டும் வர முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நானே அதனை புரிந்துகொண்டு நீங்கள் என்னுடன் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டேன். இப்படி முக்கியமான காலகட்டங்களில் எல்லாம் அவர் என்னுடன் இல்லாமலேயே இருந்திருக்கிறார். ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன். ஏனெனில் அவரை நான் முழுவதுமாக புரிந்து வைத்திருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











