பாரதிராஜாவை சிரிக்க வைத்த சூரி.. அவரை விட சிறந்தவர் யாரும் இல்லைங்க.. கண்ணீர் விடும் ரசிகர்கள்

சென்னை: சிறு சிறு கதாப்பாத்திரங்களில் வந்து பின்னர் காமெடியனாக வந்து தனக்கென தனி இடம் பிடித்தவர் சூரி. வெற்றிமாறன் இயக்தத்தில் வெளியான விடுதலை படத்தில் முருகேசனாக வந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். பின்னர், இவர் நடிப்பில் வந்த கருடன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, பாரதிராஜா குறித்து சூரி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த தொகுப்பை இதில் காணலாம்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது மகன் மனோஜை இழந்த துக்கத்தில் தவித்து வருகிறார். இதற்கு அவரிடம் எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் திரை பிரபலங்களும் தவிக்கின்றனர். அவரை தேற்ற மனம் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர். பாரதிராஜா மகனை பார்த்து தேம்பி அழுத காட்சிகளும் வீடியோவாக இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்திய இயக்குநர்களே அவரைப் பார்த்து வியக்க கூடியவர் பாரதிராஜா. ஆனால், அவருக்கு இப்படி ஒரு நிலையை கண்டு அனைவரும் சோகத்தில் மூழ்கி கிடக்கின்றனர்.

video-of-actor-soori-talking-about-director-bharathiraja-goes-viral

இதனிடையே இயக்குநர் பாரதிராஜா மற்றும் அவரது மகன் மனோஜ் அளித்த பேட்டிகளும், இதுதொடர்பான வீடியோக்களும் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் சூரி பாரதிராஜாவை பற்றி பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், பாரதிராஜா சூரியை வியந்து பார்த்து ரசிப்பார். அவருடன் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சேத்தன் ஆகியோர் இருப்பார்கள்.

நடிகர் சூரியை விடுதலைக்கு முன் விடுதலைக்கு பின் என்றே பிரித்து காட்டலாம். அதற்கு முன் அவர் நடித்த படங்கள் காமெடியாக ஒர்க் அவுட் ஆனாலும், ஒரு சில படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த படங்கள் மட்டுமே காமெடி பெரிய அளவில் ஹிட் அடைந்திருக்கின்றன. விடுதலை படத்திற்கு பின்பு சூரிக்குள் இப்படி ஒரு நடிகனை வெளிக்கொண்டு வந்தவர் வெற்றிமாறன். சூரியை மறந்து முருகேசனாக மக்கள் மனதில் ஹீரோவாக ஜெயித்து விட்டார். இதைத்தொடர்ந்து தற்போது மாமன் பாடத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படம் தாய்மாமன் உறவை பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது.

சூரிக்கு வெண்ணிலா கபடிக்குழு சிறந்த அடையாளத்தை கொடுத்தது. இப்படத்தில் பரோட்டா சூரியாக கலக்கியிருப்பார். அதன்பிறகு அவரது அடைமொழியாகவே மாறியது. இந்நிலையில், பட வாய்ப்பிற்காக இயக்குநர் பாரதிராஜா அலுவலகத்திற்கு சென்றபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை சூரி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விடுதலை படத்தின் விழாவில் பேசிய சூரி, "பாரதிராஜா அப்பாவை பார்க்கும் போது ஒரு பிரம்மிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு முறை நான் தங்கியிருந்த அறையில் நானும் எனது நண்பரும் பட வாய்ப்பிற்காக ஒவ்வாெரு அலுவலகமாக அலைந்து கொண்டிருந்தோம்.

video-of-actor-soori-talking-about-director-bharathiraja-goes-viral

அப்போது ஒருவர் டேய் பாரதிராஜா புதிய படம் தொடங்க போகிறாராம். அதற்கு ஆடிசன் நடக்கிறது என தெரிவித்தார். இதை கேட்டு நானும் எனது மற்றொரு நண்பனும் கிளம்பி சென்றோம். ஆனால், பேண்ட் சட்டையோடு செல்லவில்லை. லுங்கி, சட்டையோடு சென்றோம், கிராமத்து கதையில் நடிக்க இப்படி சென்றால் வாய்ப்பு கிடைக்கும் என எனது நண்பன் சொன்னதால் அப்படி செல்ல வேணடியதாக இருந்தது. ஆனால், மதுரைக்காரனா ரொம்ப திமிரா இருந்தா உடனே வாய்ப்பு கொடுப்பாருன்னு உசுப்பேத்திவிட்டாங்க. அங்கே போய் பார்த்தா ஒரு கியூவே நிக்குது.

சரி என்னதான் நடக்குது என்று பொறுத்திருந்து பார்த்தோம். அப்போது பக்கத்தில் இருந்த டீ கடைகாரரிடம் படம் குறித்து விசாரித்தோம். ஆனால் அவர் எங்களை பார்த்த பார்வையை இன்று வரை மறக்கவே முடியாது" என சூரி தனது மதுரை சிலாங்கில் பேசினார். பின்னர் பேச தொடங்கிய சூரி, அந்த டீ கடைகாரர் யாருப்பா நீங்க என்று கேட்டார். நாங்க பாரதிராஜா சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருக்கோ்ம் என்றதும் எங்களை மேலும் கீழும் பார்த்தார். அப்புறம் மற்றவர்களை விட நாங்க லுங்கியில் சென்றதை தான் அவர் அப்படி பார்த்தது தெரியாமல் போனது. பின்பு தம்பி கொஞ்சம் தள்ளி நில்லுங்க கூப்பிடுவாங்க என்று அந்த டீ கடைகாரர் திமிராக சொன்னதும் தூரமாக சென்றோம் என சூரி கூறினார்.

video-of-actor-soori-talking-about-director-bharathiraja-goes-viral

டயர் திருட்டு: நானும் எனது நண்பனும் நின்றுகொண்டிருந்தபோது 2 பேர் வந்து எங்களை கூப்பிட்டாங்க. அப்போ ஒருத்தர் இவங்க தானப்பா, ஆமாங்க இவைங்களாதான் இருக்கும் அவர் கை நீட்ட, நானும் என் நண்பனும் நடிக்கத்தான் கூப்பிடுகிறார்கள் என நினைத்து அவர்களுடன் சென்றோம். ஆனால், அங்கு நடந்த சீனே வேற என கலகலப்பை ஏற்படுத்தினார் சூரி. எங்க கெட்டப்பை பார்த்து டயர் திருட வந்தவங்க நினைத்து 2 பேரையும் முட்டி போட வைத்துவிட்டனர். நாங்க அய்யா சாமி பாரதிராஜா சார்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருக்கோம என கூறியும் அவர்கள் கேட்கவில்லை. பிறகு சரி இந்த பக்கம் வரக்கூடாது. வந்தா லுங்கியோட பார்க்க கூடாது என கண்டித்து அனுப்பி வைத்ததாக சூரி தெரிவித்தார்.

மனம் உருகிய சூரி: நடிகர் சூரி மதுரை சிலாங்கில் கலகலப்பாக நடந்த நினைவுகளை நினைவுகூர்ந்து பேசிய விதத்தை பார்த்து பாரதிராஜாவும் வெற்றிமாறனும் ரசித்தனர். அப்போது மேலும் பேசிய அவர், அப்பா பாரதிராஜா படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க கனவாக இருந்தது. இப்போது அப்பா பாரதிராஜாவுடன் நெருங்கி நடித்திருக்கிறேன், அவரை தொட்டு பாத்திருக்கிறேன், அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்த மகிழ்ச்சியை விட அவர் கையால் விருது வாங்கியது தான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

video-of-actor-soori-talking-about-director-bharathiraja-goes-viral

அப்பா பாரதிராஜா கையால் விருதுகளை வாங்கி நல்ல நடிகன் என்பதை நிரூபித்துவிட்டேன். நான் சினிமாவில் கண்ட கனவு நினைவாகிவிட்டது. இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும் என சூரி தெரிவித்தார். விடுதலை படத்தின் பாராட்டு விழாவில் பாரதிராஜா சூரியை பார்த்து பிரம்மித்து போனேன். கருப்பா இருந்தாலும் கலையாக இருக்கிறான் என பேசி மகிழ்ந்தார். விடுதலை, விடுதலை 2 படங்கள் சூரிக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது அனைவரும் அறிந்ததே. இயக்குநர் பாரதிராஜா இளம் இயக்குநர்களை மட்டும் அல்ல நடிகர்களின் கதாப்பாத்திரங்களை நினைவு கூர்ந்து பேசி பாராட்டி சிலாகிப்பார். ஒரு கலைஞனை பாராட்டுவதில் அவரை விட சிறந்த குணம் படைத்தவர் எவரும் இல்லை என சூரி பேசியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X