Vijay: அம்மாவுடன் சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்... செம்ம க்யூட் போட்டோ... ரசிகர்கள் ஆர்ட்டின் மழை

சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கிய லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68ல் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில், விஜய் தனது அம்மாவுடன் சைக்கிளில் ரவுண்ட் அடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய்யின் க்யூட்னஸ் சூப்பராக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 Vijay: Actor Vijay riding a bicycle with his mother is trending

அம்மாவுடன் சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் என்ற லிஸ்ட்டில் முதல் மூன்று நடிகர்களில் விஜய்யும் ஒருவராக வலம் வருகிறார். ரசிகர்களின் எண்ணிக்கை, முதல் நாள் ஓபனிங், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன், மாஸ் எண்டர்டெய்னர் என திரையுலகின் அனைத்து ஏரியாக்களிலும் விஜய் மாஸ் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்து முடித்துவிட்ட விஜய், அடுத்து முதன்முறையாக வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளார். தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ரெஸ்ட் மோடில் இருக்கும் விஜய், வெளிநாடு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் ஆரம்பகால கேரியரில் சப்போர்ட்டாக இருந்தது அவரது அம்மா ஷோபாவும் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரும் தான். விஜய்யை வைத்து அவர்களே சொந்தமாக படம் தயாரித்தனர். அதேபோல், விஜய் முன்னணி ஹீரோவான பின்னரும் கூட அவரது கேரியரில் ரொம்பவே கவனம் எடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விஜய் அவரது அம்மா, அப்பா ஆகியோரை பார்ப்பதே கிடையாது என சொல்லப்பட்டது.

ஆனால் விஜய்க்கு அவரது அப்பா மீதுதான் கோபம் என்றும், அம்மாவை அடிக்கடி சந்தித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. அதேபோல், அம்மாவை விஜய் சந்தித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் தனது அம்மா ஷோபாவை சைக்கிளில் வைத்து விஜய் ரவுண்ட் அடிக்கும் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் சைக்கிள் ஓட்ட அவரது அம்மா பின்னால் இருக்கும் கேரியரில் அமர்ந்துள்ளார்.

விஜய் சிறுவனாக இருந்தபோது எடுக்கப்பட்ட இந்தப் போட்டோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டோவை வைத்து விஜய் ரசிகர்கள் பலவிதமான கமெண்ட் போட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X