Vijay Ajith: ஒருபக்கம் விஜய்யும் அஜித்தும்... இன்னொரு பக்கம் ஜோடியா மிரட்டுறது யாருன்னு பாருங்க!

சென்னை: கோலிவுட்டில் ரஜினி, கமல் வரிசையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரங்கள் விஜய்யும் அஜித்தும் தான். இவர்கள் இருவருமே ஒரேயொரு படத்தில் மட்டுமே இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய்யும் அஜித்தும் ஒன்றாக எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. அதில் அவர்களுடன் இன்னும் இரண்டு விஐபிகள் இருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

விஜய், அஜித்தை மிரட்டும் க்யூட் ஜோடி
கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் ஒன்றாக ரிலீஸாகின. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய், அஜித்தின் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸாகின. அதேநேரம் வாரிசு, துணிவு என இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தன. இதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய், அஜித் படங்கள் ஒரே தேதியில் பாக்ஸ் ஆபிஸில் மோதுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 Vijay Ajith: Vijay and Ajith with their family... Throwback photos are trending

ரசிகர்கள் மத்தியில் விஜய்யும் அஜித்தும் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், அவர்கள் இருவரும் எப்போதுமே நல்ல நண்பர்களாக தான் வலம் வருகின்றனர். அஜித்தின் அப்பா உயிரிழந்ததும் உடனடியாக அஜித் வீட்டுக்கு நேரில் சென்றார் விஜய். முக்கியமாக இந்த சந்திப்பு எந்த வகையிலும் விளம்பரம் போல வைரலாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த விஜய், அஜித்தை சந்தித்த போது போட்டோ கூட எடுத்துக்கொள்ளாமல் திரும்பினார்.

இதனால் விஜய், அஜித் தரப்பு ரசிகர்கள் ரொம்பவே நெகிழ்ச்சியாகினர். இந்நிலையில், விஜய்யும் அஜித்தும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த போட்டோவில் இருவருமே செம்ம ஸ்மார்ட்டாக உள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட போட்டோவாக இது இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

முக்கியமாக இந்த போட்டோவின் பின்னணியில் விஜய், அஜித்தை போல இன்னும் இரண்டு பேர் ரொம்பவே சீரியஸ்ஸாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் விஜய்யின் மனைவி சங்கீதாவும், அஜித்தின் மனைவி ஷாலினியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாலினி, சங்கீதா இருவரது முகங்களும் தெளிவாக தெரியவில்லை என்றாலும், அது அவர்கள் தான் என்பது ரசிகர்கள் உறுதி செய்துவிட்டனர்.

விஜய்யும் அஜித்தும் குடும்ப நண்பர்களாக பழகி வருவதால், சங்கீதா, ஷாலினி இடையேயும் அதே நெருக்கம் காணப்படுகிறது. இதனையடுத்து இந்த போட்டோவை வைரலாக்கி வரும் ரசிகர்கள், விஜய், அஜித்தை ஜோடியாக் சேர்ந்து எப்படி மிரட்டலாம் என ஷாலினியும் சங்கீதாவும் டிஸ்கஷன் செய்து வருகிறார்களோ என ஜாலியாக கமெண்ட் பாஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X