ஃப்ளாப் ஆகும்னு தெரிஞ்சே விஜய் நடித்த படம் இதுதான்.. எல்லாம் அந்த ஒருவருக்காக

சென்னை:விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்தச் சூழலில் தான் நடிக்கும் படம் கண்டிப்பாக தோல்வியடையும் என்று தெரிந்தே விஜய் நடித்த விஷயம் தெரியவந்திருக்கிறது.

விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

Vijay already knew that Sura would be a flop here are the details

GOAT: படத்துக்கு GOAT (Greatest Of All Time) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுப்பதாலும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

விறுவிறு ஷூட்டிங்: படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டு அங்கு ஒரு பாடல் காட்சியும் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து, துருக்கி நாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து வேறு ஒரு லொக்கேஷனில் ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டது. ஆனால் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் சகோதரி பவதாரிணி உயிரிழந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு ஷூட்டிங் தொடங்கி சமீபத்தில் கேரளாவில் நடந்தது.

தமிழக வெற்றி கழகம்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் விஜய் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன் என்றும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் என்ட்ரி அவரது ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்தாலும் படம் நடிக்கமாட்டேன் என்று அவர் கூறியது கொஞ்சம் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

சுறா தோல்வி: இதற்கிடையே விஜய்யின் 50ஆவது படமான சுறா படுதோல்வியடைந்தது. அந்தப் படம் விஜய்யின் கரியரிலேயே மோசமான தோல்வி படமாக அமைந்தது. குறிப்பாக அதில் இடம்பெற்ற விஜய்யின் இன்ட்ரோ காட்சி பெரும் கிண்டலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. அப்போது பீக்கில் இருந்த வடிவேலு மட்டும்தான் தனது நடிப்பால் அந்தப் படத்தில் ஓரளவு ஸ்கோர் செய்திருந்தார்.

விஜய்க்கு முன்னரே தெரியும்: அந்தப் படத்தை எஸ்.பி ராஜ்குமார் என்பவர் இயக்கியிருந்தார். அவர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை சங்கிலி முருகன் தயாரித்திருந்தார். சுறா கதையை கேட்கும்போதே இந்தப் படம் ஒர்க் அவுட் ஆகாது என்பது விஜய்க்கு தெரிந்துவிட்டதாம். இருந்தாலும் சங்கிலி முருகன் சினிமாவில் மூத்தவர் என்பதால் அவருக்காக அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X